ஆப்கன், ஈரான், பாகிஸ்தான்.. இனி இந்த நாட்டு சரக்குகளை கையாள மாட்டோம்.. அதானி குழுமம் அதிரடி
அதானி துறைமுக நிறுவனம் அதிரடி அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது
டெல்லி: தன்னுடைய கட்டுப்பாட்டில் உள்ள துறைமுகங்களில் 3 நாடுகளில், அதாவது ஈரான், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் இருந்து வரும் சரக்குகளை கையாள போவதில்லை என்று அதானி துறைமுக நிர்வாகம் அறிவித்துள்ளது.
குஜராத் மாநிலம் முந்த்ரா துறைமுகத்தில், கடந்த மாதம் சுமார் 3 ஆயிரம் கிலோ மதிப்புள்ள ஹெராயின் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது...
அதன் மதிப்பு கிட்டத்தட்ட 21 ஆயிரம் கோடி ரூபாய் என்று சொல்லப்பட்டது. இந்த போதைப்பொருள் ஈரானில் இருந்து வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

பரபரப்பு
இது கடந்த மாதத்தில் இருந்து இப்போது வரை பெரும் பரபரப்பை கிளப்பி வருகிறது.. காரணம், இந்த முந்த்ரா துறைமுகமானது அதானி குழுமத்துக்கு சொந்தமானதாகும்.. தொழிலதிபர் கவுதம் அதானியின் நிறுவனமான அதானி குழுமத்தின் கட்டுப்பாட்டில் தான் இது உள்ளது... அதனால் இதுகுறித்து விமர்சனங்கள் எழுந்தன.. குறிப்பாக காங்கிரஸ் கட்சி இந்த விவகாரத்தை கிளப்பி கொண்டிருக்கிறது.

அதானி துறை நிர்வாகம்
இதனிடையே, போதைப் பொருள் கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பினர் விசாரணை நடத்தி வருகின்றனர்... இப்படிப்பட்ட சூழலில்தான் அதானி துறைமுக நிர்வாகம் திடீரென ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.. அதன்படி, ஈரான், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் இருந்து வரும் சரக்குகளை இனிமேல் கையாள போவதில்லை என்று அறிவித்துள்ளது..

3 நாடுகள்
இதுகுறித்து வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் உள்ளதாவது, "வரும் நவம்பர் மாதம் 15ம் தேதி முதல் ஈரான், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து வரும் சரக்குகளை அதானி நிறுவன கட்டுப்பாட்டில் உள்ள துறைமுகங்கள் கையாளாது... மேலும், துறைமுக ஆப்பரேட்டர்கள் யாருமே, வந்திறங்கும் கன்டெய்னரில் என்ன பொருள் இருக்கிறது என்பதை ஆய்வு செய்யவும் முடியாது.
Recommended Video

துறைமுகம்
அந்த துறைமுகத்தை சரியாக இயங்க செய்வது மட்டுமே அவர்களின் பங்கு ஆகும்.. தங்கள் துறைமுகத்தில் இயங்கி வரும் தனியார் நிறுவன முனையங்களும் இந்தக் கட்டுபாட்டை பின்பற்ற வேண்டும்.. இதனையடுத்து, அதானி குழுமத்திற்கு எதிராக சோஷியல் மீடியாவில் நடத்தப்படும் தவறான பிரசாரத்தை நிறுத்த முடியும் என்றும் நம்புகிறோம் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது..












Click it and Unblock the Notifications