"ஒரே அணியில் திரண்ட எதிர்க்கட்சிகள்.." அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற வளாகத்தில் பெரும் போராட்டம்
எல்ஐசி மற்றும் எஸ்பிஐ வங்கி அலுவலகங்கள் முன்பு, இன்று காங்கிரஸ் கட்சி நாடு தழுவிய போராட்டத்தை நடத்துகிறது.
டெல்லி: அதானி குழுமம் ஹிண்டன்பர்க் அறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இன்று எல்ஐசி மற்றும் எஸ்பிஐ வங்கி முன்பு காங்கிரஸ் கட்சி போராட்டத்தை நடத்துகிறது. மேலும், நாடாளுமன்ற வளாகத்திலும் பல்வேறு எதிர்க்கட்சிகள் போராட்டத்தை நடத்துகிறது.
குஜராத்தைச் சேர்ந்து பெரும் தொழிலதிபர் கவுதம் அதானி.. மின்சாரம், ஏர்போர்ட், துறைமுகம் என்று பல்வேறு துறைகளில் இவர் தனித்தனியாக பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருகிறார்.
கடந்த சில ஆண்டுகளாக இவரது வளர்ச்சி மிகப் பெரியதாக இருந்துள்ளது. பல்வேறு நிறுவனங்களும் அதானி குழுமத்தில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டியதால், அவரது சொத்து மதிப்பு கிடுகிடுவென உயர்ந்தது.

அதானி
ஒரு கட்டத்தில் உலகில் டாப் 2ஆவது பணக்காரராகவும் இருந்தார். இந்தச் சூழலில், தான் கடந்த வாரம் அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டர்பர்க் நிறுவனம் அதானி குறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டது. சுமார் 2 ஆண்டுகள் ஆய்வு செய்து அவர்கள் இந்த ஆய்வறிக்கையை தயார் செய்துள்ளனர். இதில் அதானி நிறுவனத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு இருந்தது. செயற்கையான முறையில் பங்கு விலையை ஏற்றினர், நிறுவனத்திற்கு அதிக கடன் உள்ளது எனத் தொடங்கிப் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தனர்.

ஹிண்டன்பர்க் அறிக்கை
மொத்தம் 413 பக்கங்களில் ஹிண்டன்பர்க் இந்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. இதற்குப் பதில் தரும் வகையில் அதானியும் விரிவான அறிக்கையை வெளியிட்டிருந்தது. இருந்த போதிலும் அதானியின் பங்குகள் கடுமையாகச் சரிந்தது. அதானி என்டர்பிரைசஸ் பங்குகள் ஒரே வாரத்தில் 50% வரை சரிந்தது. இதனால் பங்கு வெளியீட்டையும் அவர்கள் வாபஸ் பெற்றிருந்தனர். இந்த விவகாரம் அரசியல் அரங்கிலும் எதிரொலிக்கிறது.

முதலீடுகள்
இப்போது மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் நிலையில், எதிர்க்கட்சிகளும் அதானி விவகாரத்தைக் கையில் எடுத்துள்ளன. இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களான எல்ஐசி, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கிக் கடன் மற்றும் பங்குகள் என்று பல ஆயிரம் கோடி முதலீடு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. எல்ஐசி ரூ.36,474 கோடியை முதலீடு செய்துள்ளதாகவும், எஸ்பிஐ ரூ. 21 ஆயிரம் கோடி அதானி குழுமத்துக்குக் கடன் தந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

போராட்டம்
இத்தனை ஆயிரம் கோடி மக்கள் பணம் அதானி குழுமத்திற்குத் தரப்பட்டது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தின. இதன் காரணமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கின. இதற்கிடையே இந்த விவகாரத்தில் எல்ஐசி மற்றும் எஸ்பிஐ வங்கியின் அலுவலகங்கள் முன்பு, இன்று காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட அளவில் போராட்டத்தை நடத்துகிறது. இதற்கிடையே நாடாளுமன்ற வளாகத்தில் இருக்கும் காந்தி சிலை முன்பு எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்துகின்றன. காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 16 எதிர்க்கட்சிகள் இதில் பங்கேற்றுள்ளனர். அதானி விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும், இதில் உரிய விசாரணை தேவை என்பதை வலியுறுத்தி போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

காங்கிரஸ்
இது குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே சி வேணுகோபால் கூறுகையில், "பொதுமக்கள் இந்த விவகாரத்தில் கடும் கொந்தளிப்பில் உள்ளனர்.. மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் வகையில் காங்கிரஸ் கட்சி சார்பில் எல்ஐசி, பாரத ஸ்டேட் வங்கி அலுவலகங்கள் முன்பு மாவட்ட அளவில் போராட்டம் நடத்தப்படுகிறது. பிரதமரின் நண்பர்களுக்கு லாபம் ஈட்ட இந்திய மக்கள் கஷ்டப்பட்டுச் சம்பாதித்த பணத்தை அரசு தரக் கூடாது.

மக்கள் பணம்
அதானி குழுமத்தில் எல்ஐசி ரூ.36,474.78 கோடி முதலீடு செய்துள்ளது, அதேசமயம் இந்திய வங்கிகள் சேர்ந்து கிட்டத்தட்ட ரூ.80,000 கோடியைக் குழுமத்தில் முதலீடு செய்துள்ளன. அந்த நிறுவனம் மீது பல்வேறு புகார்கள் இருந்த போதிலும் தொடர்ந்து முதலீடு செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் அரசு மக்களுக்குப் பதிலளிக்க வேண்டும்.. பிரமதரின் நண்பர்களுக்காக மக்கள் பணத்தை வீணடிப்பதை ஏற்க முடியாது" என்று அவர் தெரிவித்தார்.
-
தேர்தலில் போட்டியில்லை.. டெல்லிக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை.. பாஜகவில் டிவிஸ்ட் -
2021 vs 2026.. அதிமுக கூட்டணியில் யாருக்கு லாபம்.. பாஜக, பாமக அமமுக வாக்கு சதவீதம் என்ன? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி..40 கேட்ட பாஜகவுக்கு 27! ஒரே நாளில் முடிந்த டீலிங்..கெத்து அதிமுக! -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
என்டிஏவில் எல்லா நாளும் கார்த்திகை.. ஒரே குடும்பமா இருக்கோம்! சென்னை வந்ததும் கோயல் சொன்ன வார்த்தை! -
அவிநாசி அல்லது மேட்டுப்பாளையம்.. 2ல் ஒரு தொகுதியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்? -
“காருக்குள் வைத்து தவறாக நடக்க முயற்சி”.. பாஜக முக்கிய நிர்வாகி மீது மகளிரணி தலைவி பரபரப்பு புகார் -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
விடிய விடிய நடந்த பேச்சுவார்த்தை.. புதுவையில் திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிப்பு -
உடையும் திமுக காங்கிரஸ் கூட்டணி? தொகுதிகளை முடிவு செய்வதில் நீடிக்கும் குழப்பம்! புதுச்சேரியில் பரபர












Click it and Unblock the Notifications