ஒடிசா ரயில் விபத்து.. பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்வி செலவை ஏற்ற அதானி! நெட்டிசன்கள் பாராட்டு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஒடிசாவில் 3 ரயில்கள் விபத்திற்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மம்தா அனைவருக்கும் முன்பு வாக்குவாதம் செய்து கொண்டனர்.

ஒடிசாவில் மிக மோசமான ரயில் விபத்து நடந்தது. கொல்கத்தாவில் இருந்து சென்னைக்கு வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் உட்பட 3 ரயில்கள் விபத்தில் சிக்கின. வெறும் 20 நிமிடங்களில் அனைத்தும் நடந்து முடிந்துவிட்டன.

இந்தச் சம்பவம் நடந்தவுடன் தேசிய பேரிடர் மீட்புப் படையினரும், மாநில தீயணைப்புத் துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளைச் செய்து வந்தனர். கடந்த 15 ஆண்டுகளில் ஏற்பட்ட மிக மோசமான ஒரு விபத்தாக இது கருதப்படுகிறது.

Adani takes responsibility education cost of children who lost parents in odisha train crash

கொல்கத்தாவில் இருந்து மதியம் 3.20 மணிக்குக் கிளம்பிய இந்த ரயில் ஒடிசாவில் பாலசோர் மாவட்டத்தில் இரவு 7 மணிக்கு விபத்தில் சிக்கியுள்ளது. இதில் சுமார் 10 பெட்டிகள் தடம் புரண்டன. சமீப காலங்களில் இந்தியாவில் ஏற்பட்ட மிக மோசமான விபத்துகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது. இந்த விபத்தில் சிக்கியவர்களில் பெரும்பாலானோர் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

இந்த விபத்தில் 270க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது. 1000க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில், அவர்களில் 793 பேர் சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து கிளம்பிவிட்டனர். இருப்பினும், அவர்களில் சுமார் 50 பேர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் உயிரிழப்புகள் அதிகரிக்குமோ என அஞ்சப்படுகிறது.

மிகக் கொடூர ரயில் விபத்தான இதில் பல குழந்தைகள் தங்கள் பெற்றோரை இழந்துள்ளனர். இதனால் அவர்களின் எதிர்காலமே பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. குழந்தைகளின் எதிர்காலத்தைக் காக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இதற்கிடையே குழந்தைகளுக்கான கல்வி செலவை அதானி குழுமம் ஏற்கும் என்று அக்குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி அறிவித்துள்ளார்.

Adani takes responsibility education cost of children who lost parents in odisha train crash

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஒடிசா ரயில் விபத்தால் நாம் அனைவரும் மிகுந்த துயரத்தில் இருக்கிறோம். இந்த விபத்தில் பெற்றோரை இழந்த அப்பாவி குழந்தைகளின் பள்ளிக் கல்வி செலவை அதானி குழுமம் ஏற்கும் என முடிவு செய்துள்ளோம். பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் உறுதுணையாக நிற்கவும் குழந்தைகளுக்குச் சிறந்த எதிர்காலத்தை வழங்குவதும் நம் அனைவரின் கூட்டுப் பொறுப்பாகும்" என்று பதிவிட்டுள்ளார். இந்த அறிவிப்பை நெட்டிசன்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+