பாயிண்ட் இதுதான்.. நேராக தேர்தல் ஆணையம் சென்ற அதிமுக அடிப்படை உறுப்பினர்.. ஈபிஎஸ்க்கு வந்த சிக்கல்!
அதிமுக கட்சி விதிகள் என்பது எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக திருத்தம் செய்யப்பட்டுள்ளது என இந்திய தேர்தல் ஆணையத்தில் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பரபர புகார்
டெல்லி: அதிமுக சார்பில் ஜூலை 11ல் நடந்த பொதுக்குழுவில் கொண்டு வரப்பட்ட கட்சி திருத்த விதிகளை ஏற்றுக்கொள்ளக்கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் ஒருவர் இந்திய தேர்தல் ஆணையத்தில் மனு செய்துள்ளார். ஏற்கனவே ஓ பன்னீர் செல்வம் தரப்பில் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு இதுதொடர்பாக கடிதம் எழுதப்பட்ட நிலையில் தற்போது எடப்பாடி பழனிச்சாமிக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அதிமுகவில் இரட்டை தலைமையாக ஓ பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இருந்தனர். அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓ பன்னீர் செல்வம் இருந்த நிலையில், எடப்பாடி பழனிச்சாமி இணை ஒருங்கிணைப்பாளராக இருந்தார்.
இந்நிலையில் தான் கடந்த ஆண்டு ஒற்றை தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்தது. இதையடுத்து ஓ பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தனித்தனி அணியாக செயல்பட தொடங்கினர்.

இடைக்கால பொதுச்செயலாளராக ஈபிஎஸ்
மேலும் 2022 ஜூலை 11 பொதுக்குழு கூட்டப்பட்டது. இந்த பொதுக்குழு மூலம் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். மாறாக ஓ பன்னீர் செல்வம் உள்பட அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டனர். இதனை எதிர்த்து ஓ பன்னீர் செல்வம் தரப்பு டெல்லி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் ஜூலை 11ம் தேதி நடந்த பொதுக்குழு செல்லும் என்று தீர்ப்பளித்தது. உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு ஓ பன்னீர்செல்வம் தரப்பினருக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. இந்த தீர்ப்பின் மூலம் அதிமுக எடப்பாடி பழனிசாமி கைவாசம் சென்றுள்ளது. இருப்பினும் கூட அதிமுக விவகாரத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்கு இன்னும் சில சிக்கல்கள் இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது உச்சநீதமன்ற தீர்ப்பில் பாதிக்கப்பட்டவர்கள் பொதுக்குழு தீர்மானங்கள் தொடர்பாக சிவில் வழக்கு தொடரலாம் என கூறப்பட்டுள்ளது. அதன்படி ஓ பன்னீர் செல்வம் சிவில் நீதிமன்றத்தில் விரைவில் வழக்கு தொடர உள்ளனர்.

தேர்தல் ஆணையத்துக்கு பறக்கும் கடிதம்
இது ஒருபுறம் இருக்க உச்சநீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி ஜூலை 11 பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் கட்சி விதிகளில் செய்துள்ள மாற்றங்களை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி தரப்பு இந்திய தேர்தல் ஆணையத்தை நாடியுள்ளது. இதற்கு எதிராக ஓ பன்னீர் செல்வம் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில், ‛‛கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. ஏற்கனவே உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி நீக்கப்படவில்லை. இந்த பதவிகளுக்கான காலம் 2026 வரை உள்ளது. இதனால் புதிய தீர்மானங்களை ஏற்றுக்கொள்ளக்கூடாது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர் செல்வம் ஆகியோரின் தரப்பில் கூறப்பட்டுள்ள கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

புதிய கோரிக்கை மனு
இந்நிலையில் தான் தற்போது தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவர் இந்திய தேர்தல் ஆணையத்தில் கோரிக்கை மனு செய்துள்ளார். அதிமுக அடிப்படை உறுப்பினர் என்ற முறையில் அவர் அந்த கோரிக்கை மனுவை வழங்கி உள்ளார். அதில், ‛‛அதிமுக பொதுக்குழுவில் கொண்டு வரப்பட்ட கட்சி திருத்த விதிகளை ஏற்றுக்கொள்ளகூடாது. இது கட்சி விதிகளுக்கு அப்பாற்ப்பட்டு உள்ளதால் இதனை அங்கீகரிக்க கூடாது. ஏனென்றால் திருத்த விதிகள் என்பது எடப்பாடி பழனிச்சாமி மட்டுமே பொதுச்செயலாளராக போட்டியிடும் வகையில் உள்ளது.

நீதிமன்றத்தில் தீர்வு காணும் வரை
மேலும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்த பிறகு அதிமுக விதிகளில் கொண்டு வரப்பட்ட திருத்தங்களை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் சிவில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மேலும் ஜூலை 11 பொதுக்குழு செல்லும் என உச்சநீதிமன்றம் கூறினாலும் பாதிக்கப்பட்டவர்கள் சிவில் வழக்கு தாக்கல் செய்யலாம் என கூறியுள்ளது. எனவே இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தில் தீர்வு காணும் வரை ஜூலை 11ல் திருத்த விதிகளுக்கு அங்கீகாரம் வழங்கக்கூடாது'' என அந்த கோரிக்கை மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது எடப்பாடி பழனிச்சாமிக்கு பிரச்சனையை ஏற்படுத்துமா, இல்லையா என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
-
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications