கொரோனா வைரஸ்.. அனைத்து மாநில பள்ளிகளுக்கும் மத்திய அரசு முக்கிய சுற்றறிக்கை!
டெல்லி: கொரோனா வைரஸ் பரவுவதை தொடர்ந்து, அனைத்து மாநில பள்ளிகளுக்கும் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ஒரு முக்கியமான சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.
Recommended Video
இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. இதை தவிர்ப்பதற்காக மக்கள் பொது இடங்களில் கூட வேண்டாம் என்று அரசு கேட்டுக் கொண்டிருக்கிறது. ஹோலி பண்டிகையை கொண்டாடுவதை தவிர்க்க உள்ளதாக, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா போன்றோரும் அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளனர்.

இந்த நிலையில், அனைத்து மாநில கல்வித்துறை செயலாளர்களுக்கும் சிபிஎஸ்இ சேர்மனுக்கு, அனைத்து மாநில தலைமைச் செயலாளருக்கு, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
Ministry of Human Resource Development issues advisory for schools regarding #Coronavirus pic.twitter.com/GnIffxOR1p
— ANI (@ANI) March 4, 2020
அதில் கூறி இருப்பதைப் பாருங்கள்: நாட்டின் சில பகுதிகளில் நோபல் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். இந்த வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கு மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது மிக முக்கியமான விஷயம். இதன் மூலமாகத்தான் நோய்களை தடுக்கவும், குறைக்கவும் முடியும், மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த அறிக்கை வெளியிடப்படுகிறது.
அவ்வப்போது கைகளை கழுவ வேண்டும், தும்மல் அல்லது இருமல் வரும் போது வாயை கைக்குட்டை அல்லது டிஷ்யூ பேப்பர் அல்லது சட்டை துணியை வைத்து மூடிக் கொள்ளவேண்டும்.
உடல்நலம் சரியில்லை என்றால் பள்ளிக்குச் செல்லக்கூடாது. பொது இடங்களுக்கு செல்வதோ, பொது விழாக்களில் பங்கேற்பதோ கூடாது. கொரோனா வைரஸ் மட்டுமின்றி வேறு பரவக்கூடிய எந்த ஒரு வியாதியும் இது போன்றவற்றை பின்பற்றினால் பரவாது. இது தொடர்பாக மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications