10% இட ஒதுக்கீடு செல்லும்.. சமூக நீதிக்கு எதிரான நீதிமன்ற தீர்ப்பு.. பாமக வழக்கறிஞர் பாலு கொதிப்பு
டெல்லி: பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க வழி செய்யும் வகையில் மேற்கொள்ளப்பட்ட 103 வது அரசியல் அமைப்பு திருத்தம் செல்லும் என உயர்நீதிமன்ற தீர்ப்பளித்துள்ளது.
இந்த வழக்கை விசாரித்த 5 நீதிபதிகளில் 3 நீதிபதிகள் இந்த திருத்தம் செல்லும் என்று தீர்ப்பளித்துள்ளனர். ஆனால், 2 நீதிபதிகள் செல்லாது என்று தீர்ப்பளித்துள்ளனர்.
இந்நிலையில் தீர்ப்பு குறித்து பேசிய பாமக வழக்கறிஞர் பாலு, "நாடு முழுவதும் உள்ள பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்கு எதிரானது இந்த தீர்ப்பு" என்று கூறியுள்ளார்.

வழக்கு விசாரணை
பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்து அதற்கேற்றாற்போல் அரசியலமைப்பு சட்டத்தின் 103வது பிரிவில் திருத்தத்தையும் மேற்கொண்டது. ஆனால் இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது.

தீர்ப்பு
இந்நிலையில் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. தீர்ப்பில், 5 நீதிபதிகளில் 3 நீதிபதிகள் அரசின் நடவடிக்கை செல்லும் என்றும் அதாவது பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான 10% இட ஒதுக்கீடு செல்லும் என்றும், 2 நீதிபதிகள் செல்லாது என்றும் தீர்ப்பு வழங்கியுள்ளனர். பெரும்பான்மை நீதிபதிகள் செல்லும் என்று தீர்ப்பு வழங்கியுள்ளதால் மத்திய அரசின் நடவடிக்கை சட்டப்பூர்வமாக நடைமுறைப்படுத்தப்படும்.

சமூக நீதிக்கு எதிரானது
இந்நிலையில் இந்த தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த பாமக வழக்கறிஞர் பாலு, "இந்த தீர்ப்பு நாடு முழுவதும் உள்ள பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்கு எதிரானது" என்று கூறியுள்ளார். அவர் மேலும் கூறியதாவது, "அரசியலமைப்பு சட்டத்தின் 15,16 சரத்தில் சமூக மற்றும் கல்வி ரீதியாக பின்தங்கி இருந்தவர்களைதான் socially and educationally backward classes என்று தெளிவுபடுத்தப்பட்டிருந்தது. இந்த பின்தங்கியவர்கள் பட்டியலில், பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்களையும் மத்திய அரசு திருத்தம் மேற்கொண்டு இணைத்தது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை அரசியல் நிர்ணய சபையின் நோக்கத்திற்கு எதிரானது என்கிறது வாதம் மேலெழுந்தது.

தரவுகள்
இந்த குற்றச்சாட்டையடுத்து மத்திய அரசின் உத்தரவுக்கு தடை உத்தரவு பிறப்பித்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு பிறப்பிக்கப்படவில்லை. அதற்கு நீதிமன்றம் மறுத்துவிட்டது. இந்த வழக்கு விசாரணையில் இட ஒதுக்கீடு 50%ஐ தாண்டுகிறது என்பதை நீதிமன்றம் கவனிக்க தவறியுள்ளது. கிரிமிலேயர் என்பதும், 50% என்பது அரசியலமைப்பின் அடிப்படையில் வராத ஒரு விஷயமாகும். இந்த வழக்கின்படி இட ஒதுக்கீடு 50%ஐ தாண்டுகிறது எனில், அதற்கான போதிய தரவுகள் மத்திய அரசிடம் இருக்கிறதா? அதாவது நாடு முழுவதும் உள்ள முன்னேறிய சமூகங்களின் எண்ணிக்கை மத்திய அரசிடம் இருக்கிறதா? அது நீதிமன்றத்தில் வழங்கப்பட்டிருக்கிறதா? இவ்வாறு உள்ள முன்னேறிய சமூகத்தில் பின்தங்கியவர்கள் 10% என்பதற்கான தரவுகள் நீதிமன்றத்தில் வழங்கப்பட்டிருக்கிறதா?

பாகுபாடு
ஆக மத்திய அரசின் இந்த உத்தரவை நீங்கள் ஆராய்ந்து பார்த்தால் எவ்வித ஆதாரமும் இல்லாமல் எடுத்தோம், கவிழ்த்தோம் எனும் அடிப்படையில் 10% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டிருக்கிறது. இதனை எதிர்த்த வழக்கின் வாதங்களை நான் தொடர்ந்து கவனித்து வருகிறேன். அதாவது, மத்திய அரசு பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு இட ஒதுக்கீடு என்கிற நிலைப்பாட்டை எடுத்துவிட்டால் அதில் பாகுபாடு இருக்கக்கூடாது. அதாவது உயர் வகுப்பினருக்கு மட்டும் இட ஒதுக்கீடு என்று இருக்கக்கூடாது.

உத்தரவை ஏற்றுக்கொண்டது
இந்த இட ஒதுக்கீட்டை அனைவருக்குமானதாக மாற்ற உச்சநீதிமன்றம் தவறிவிட்டது. அதேபோல வழக்கு விசாரணையில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த நீதிபதிகள் சேர்க்கப்படவில்லை. இது குறித்து வழக்கறிஞர்கள் கேள்வியெழுப்பியதை நீதிமன்றம் நிராகரித்தது. எனவே இது சமூகநீதிக்கு எதிரான தீர்ப்பு. மத்திய அரசு விரும்பியது எனவே உத்தரவு பிறப்பித்தது. மத்திய அரசு அப்படியே இதனை ஏற்றுக்கொண்டது" என்று கூறியுள்ளார்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications