தாலிபான்கள் அட்டூழியம்.. பெண்ணின் வீட்டை எரித்து நாசம்.. இந்திய திரும்பிய ஆப்கன் எம்பி கண்ணீர்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஆப்கனிலுள்ள தனது வீட்டைத் தாலிபான்கள் எரித்து நாசமாக்கிவிட்டதாகக் குற்றஞ்சாட்டிய ஆப்கன் பெண் ஒருவர், தக்க நேரத்தில் தன்னை காப்பாற்றிய இந்தியாவுக்கு மிகப் பெரிய நன்றி எனத் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    1.4 கோடி மக்கள் பஞ்சத்தில்.. உள்நாட்டு போரால் Afghan-ல் பேரழிவு ஏற்பட்டுள்ளது - UN அறிக்கை

    அமெரிக்கப் படைகள் வெளியேறத் தொடங்கியதுமே ஆப்கனில் தாலிபான்கள் தங்கள் தாக்குதலைத் தொடங்கிவிட்டனர். முதலில் எல்லைகளையும் கிராமப் புறங்களையும் கைப்பற்றிய தாலிபான்கள், அதைத் தொடர்ந்து நகரங்களைக் கைப்பற்றத் தொடங்கினர்.

    அப்படிக் கடந்த வாரம் தலைநகர் காபூலை கைப்பற்றினர். அந்நாட்டின் அதிபராக இருந்த அஸ்ரப் கானி ஐக்கிய அமீரகத்திற்குத் தப்பிச் சென்றார்.

     தாலிபான்கள்

    தாலிபான்கள்

    அமெரிக்கப் படைகள் வெளியேறத் தொடங்கியதும் தாலிபான்கள் தாக்குதலை நடத்துவார்கள் என அனைவரும் எதிர்பார்த்திருந்தது உண்மைதான். ஆனால், தாலிபான்கள் இவ்வளவு வலுவாக இருப்பார்கள் என யாரும் கணிக்கவில்லை. இனால் வெறும் சில வாரங்களில் ஒட்டுமொத்த தேசத்தையே தாலிபான்களால் கைப்பற்ற முடிந்துள்ளது. மேலும், பல இடங்களில் ஆப்கன் ராணுவம் தாலிபான்களுக்கு எதிராகப் போராடாமல் சரணடைந்ததாகவும் செய்திகள் வெளியானது.

     அழைத்து வர முயற்சி

    அழைத்து வர முயற்சி

    அடுத்தகட்டமாக ஆப்கனில் ஆட்சியை அமைக்கத் தேவையான பணிகளில் தாலிபான்கள் இறங்கியுள்ளனர். ஆப்கனில் இன்னும் பதற்றமான ஒரு சூழலே நிலவி வருவதால், பல்வேறு நாடுகளும் அங்கிருக்கும் தங்கள் குடிமக்களைத் திரும்பப்பெறும் நடவடிக்கைகளிலும் இறங்கியுள்ளனர். இந்தியாவும் இந்த முயற்சியில் இறங்கியுள்ளது. அதன்படி இந்திய விமானப் படை விமானத்தின் மூலம் 168 பேர் ஆப்கனில் இருந்து இந்தியா அழைத்து வரப்பட்டனர்.

     வீட்டை எரித்துவிட்டனர்

    வீட்டை எரித்துவிட்டனர்

    இந்நிலையில், இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்ட பெண் ஒருவர் கூறுகையில், "ஆப்கானிஸ்தானில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. அதனால் நான் என் மகள் மற்றும் இரண்டு பேரக்குழந்தைகளுடன் இங்கு வந்தேன். ஆப்கனில் இருந்த எனது வீட்டைத் தாலிபான்கள் எரித்து நாசமாக்கினர். எந்த உதவியும் இல்லாமல் நிர்க்கதியாக இருந்த போது தான், இந்தியச் சகோதரர்கள் எங்களைக் காப்பாற்ற வந்தனர். எங்களுக்கு உதவிய இந்தியாவுக்கு மனமார்ந்த நன்றி" என்று அவர் தெரிவித்தார்.

     கண்ணீர்விட்ட எம்பி

    கண்ணீர்விட்ட எம்பி

    அதேபோல இந்தியா திரும்பிய ஆப்கன் எம்பி நரேந்தர் சிங் கல்சா கண்ணீர் விட்டு அழுதார். "என்னால் அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை, கடந்த 20 ஆண்டுகளாக நாங்கள் கஷ்டப்பட்ட எந்த ஆப்கானைக் கட்டமைத்தோமோ அவை எல்லாம் அழிக்கப்பட்டுவிட்டன. இப்போது ஆப்கன் மீண்டும் பூஜ்ஜியம் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது" என்றார். முன்னதாக, நேற்று இந்தியா திரும்பக் காத்திருந்த பயணிகளைத் தாலிபான்கள் காவல் நிலயம் அழைத்துச் சென்று சான்றிதழ்களைச் சரி பார்த்தனர். அதன் பின்னரே இந்தியா செல்ல அனுமதிக்கப்பட்டனர். ஆனால், அதற்குள் இந்தியர்களைத் தாலிபான்கள் கடத்தியதாகச் செய்திகள் வெளியாகப் பரபரப்பை ஏற்படுத்தியது. 107 இந்தியர்கள் உட்பட மொத்தம் 168 பேர் இந்தியா அழைத்து வரப்பட்டனர்.

    பெண் உரிமை

    கடந்த 1996-01 வரையிலான தாலிபான்களின் ஆட்சியில் பள்ளி செல்வது, வேலைக்குச் செல்வது போன்ற அடிப்படை உரிமைகள் கூட பெண்களுக்கு மறுக்கப்பட்டது. ஆனால், இந்த முறைப் பெண் உரிமை பாதுகாக்கப்படும் எனத் தாலிபான்கள் தொடர்ந்து உறுதி அளித்து வந்தனர். இந்தச் சூழலில் நேற்று திடீரென சமூகத்தில் நடைபெறும் அனைத்து பிரச்சினைகளுக்கும் ஆண் பெண் இருவரும் சேர்ந்து படிக்கும் Co education முறையே காரணம் எனக் குற்றஞ்சாட்டி, Co education முறைக்குத் தாலிபான்கள் தடை விதித்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+