காதலியை 35 பீஸாக வெட்டி! "அந்த காட்டுக்குள்ள போங்க".. வழிகாட்டிய காதலன்! போலீசுக்கு காத்திருந்த ஷாக்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லியில் காதலியை 35 பீஸ்களாக கொலை செய்த காதலன் போலீசாரிடம் பல அதிர்ச்சி அளிக்கும் வாக்குமூலங்களை கொடுத்து இருக்கிறார்.

டெல்லியில் சாரதா என்ற பெண்ணை அப்தாப் அமீன் என்ற இளைஞர் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமூக வலைத்தளங்களில் பிரபலமாக இருந்த அப்தாப் அமீன் டேட்டிங் ஆப் வழியாக சாரதாவை பார்த்து இருக்கிறார்.

முதல் டேட்டிங்கிலேயே இவர்கள் காதல் விழுந்து உள்ளனர். இரண்டு பேரும் மும்பையில் இருந்ததால் அடிக்கடி சந்தித்துக்கொண்டுள்ளனர்.

காதல்

காதல்

அதேபோல் இரண்டு பேரும் தீவிரமாக காதலித்து வந்துள்ளனர். இந்த விஷயம் சாரதாவின் பெற்றோருக்கு தெரிய வந்துள்ளது. அப்போது சாரதாவின் பெற்றோர், அவன் வேறு மதம் அவனுடன் நீ சேர கூடாது என்று மிரட்டி உள்ளனர். அதோடு மும்பையில் அவர்கள் இருக்கும் வீட்டிற்கும் நேரடியாக வந்து கடுமையாக மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் அப்தாப் அமீன்- சாரதா இருவரும் டெல்லிக்கு சென்றுவிட்டனர்.

டெல்லி

டெல்லி

டெல்லியில் வீடு எடுத்து இவர்கள் ஒன்றாக தங்க தொடங்கி உள்ளனர். அதோடு லிவ் இன் ரிலேஷன்ஷிப்பையும் தொடங்கி உள்ளனர். இந்த உறவின் போதே அப்தாப் அமீன் அடிக்கடி கோபம் அடைந்து இருக்கிறார். அப்தாப் அமீன் அடிக்கடி சாரதாவை தாக்கியதாகவும், மோசமாக அடித்ததாகவும் கூறப்படுகிறது. பல முறை மூர்க்கமாக அப்தாப் அமீன் சாரதாவை அடித்ததாக கூறப்படுகிறது.

தொல்லை

தொல்லை

ஆனால் இதை சகித்துக்கொண்டு அப்தாப் அமீனுடன் சாரதா இருந்துள்ளார். இதையடுத்து சாரதா அப்தாப் அமீனை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து கேட்டு இருக்கிறார். ஆனால் அப்தாப் அமீன் இதற்கு தயாராக இல்லை. இதில் வந்த சண்டையில்தான் அப்தாப் அமீன் சாரதாவை கொலை செய்ததாக கூறப்படுகிறது. 35 பாகங்களை உடலை வெட்டி, பிரிட்ஜில் வைத்து 18 நாட்களாக உடல் பாகங்களை அவர் அப்புறப்படுத்தி உள்ளார். இதற்காக போலீசில் அப்தாப் அமீன் கொடுத்த வாக்குமூலம்தான் தற்போது டெல்லியை உலுக்கி உள்ளது.

என்ன வாக்குமூலம்

என்ன வாக்குமூலம்

அப்தாப் அமீன் முதலில் கொடுத்த வாக்குமூலத்தில், சாரதா என்னிடம் சண்டை போட்டுவிட்டு வெளியே சென்றுவிட்டார். என் அப்பா வீட்டிற்கு செல்கிறேன் என்று கூறிவிட்டு சென்றுவிட்டார். அதற்கு பின் எனக்கு என்ன நடந்தது என்று தெரியாது. அவரின் போன் ஸ்விட்ச் ஆப் என்று வந்தது. அதனால் என்ன நடந்தது என்று தெரியாது, என்று கூறி உள்ளார். அதன்பின் போலீஸ் விசாரணையில்தான் அவர் கொலையை ஒப்புக்கொண்டார்.

கொலை

கொலை

அதில், நான்தான் சாரதாவை கொலை செய்தேன், மெஹ்ரவுளி காட்டில் அவரின் உடல் பாகங்கள் உள்ளன. அருகில் உள்ள ஏரியில் உடல் பாகங்கள் உள்ளன என்று கூறி உள்ளார். இதையடுத்து போலீசார் மோப்ப நாய்களுடன் அந்த காட்டிற்கு சென்றனர். அங்கு போலீஸ் கண்ட காட்சிதான் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த காட்டு பகுதிக்குள் போலீசார் கை துண்டுகளையும், உடல் எலும்புகளையும் கண்டுபிடித்து உள்ளனர். மோப்ப நாய்கள் சரியாக எலும்புகளை கண்டுபிடித்து கொடுத்துள்ளன. மற்ற உடல் பாகங்களை தேடும் பணி தீவிரமாக நடந்து கொண்டு இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+