பிரிட்ஜில் தலைக்கு அருகே இருந்த காய்கறி! வீட்டுக்கு வந்த புது காதலி! டெல்லி கொலைகாரரனின் கொடூர முகம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லியில் காதலியை கொலை செய்த கொலைகாரன் அப்தாப் அமீன் போலீஸ் விசாரணையில் வேறு சில அதிர்ச்சி அளிக்கும் விஷயங்களை தெரிவித்து இருக்கிறார்.

டெல்லியில் காதலியை 35 பீஸ்களாக காதலன் கொலை செய்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தேசிய அளவில் இந்த விவகாரம் விவாதங்களை ஏற்படுத்தி இருக்கிறது.

டெல்லியில் சாரதா என்ற பெண்ணை அப்தாப் அமீன் என்ற இளைஞர் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமூக வலைத்தளங்களில் பிரபலமாக இருந்த அப்தாப் அமீன் டேட்டிங் ஆப் வழியாக சாரதாவை பார்த்து இருக்கிறார்.

கொலை

கொலை

முதல் டேட்டிங்கிலேயே இவர்கள் காதலில் விழுந்து உள்ளனர். இரண்டு பேரும் மும்பையில் இருந்ததால் அடிக்கடி சந்தித்துக்கொண்டுள்ளனர். அதன்பின் இவர்கள் டெல்லிக்கு ஓடிப்போய் ஒன்றாக லிவ் இன் உறவில் இருந்துள்ளனர். இந்த நிலையில்தான் சாரதா அப்தாப் அமீனை திருமணம் செய்து கொள்ள முயன்று உள்ளார். ஆனால் அப்தாப் அமீன் இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. இதையடுத்து நடந்த சண்டையில் சாரதாவை கொலை செய்து இருக்கிறார் அப்தாப் அமீன்.

பிரிட்ஜ்

பிரிட்ஜ்

அதோடு 35 பாகங்களாக உடலை வெட்டி, பிரிட்ஜில் வைத்து 18 நாட்களாக உடல் பாகங்களை அவர் அப்புறப்படுத்தி உள்ளார். இதற்காக போலீசில் அப்தாப் அமீன் கொடுத்த வாக்குமூலம்தான் தற்போது டெல்லியை உலுக்கி உள்ளது. முக்கியமாக சாரதா கொலை செய்யப்பட்ட பின் சமூக வலைத்தளங்களில் சாரதாவை போலவே அவரின் போனை பயன்படுத்தி அமீன் மெசேஜ்களை செய்து இருக்கிறார். அதோடு சாரதாவின் கிரெடிட் கார்ட் பில்களை கூட கொடுத்து இருக்கிறார்.

அப்தாப் அமீன்

அப்தாப் அமீன்

இந்த நிலையில் அப்தாப் அமீன் போலீஸ் விசாரணையில் வேறு சில அதிர்ச்சி அளிக்கும் விஷயங்களை தெரிவித்து இருக்கிறார். அதன்படி சாரதாவை கொலை செய்த மறுநாளே டேட்டிங் ஆப் ஒன்றை அப்தாப் இன்ஸ்டால் செய்துள்ளார். இந்த ஆப் மூலமாக ஏற்கனவே சில பெண்களிடம் அவர் பேசி வந்துள்ளார். அதில் அடிக்கடி பேசும் பெண் ஒருவரை வீட்டிற்கும் வர சொல்லி இருக்கிறார்.

சாரதா கொலை

சாரதா கொலை

அதாவது சாரதாவை கொலை செய்த மறுநாளே வேறு பெண்ணுடன் அவர் டேட்டிங் சென்றுள்ளார். வீட்டிற்க்கு அந்த பெண்ணை அழைத்து வந்து உணவு சமைத்து கொடுத்துள்ளார். அவர்கள் வீட்டிலேயே பேசி இருக்கின்றனர். ஆனால் அந்த புது டேட்டிங் காதலி அந்த பிரிட்ஜை திறந்து பார்க்கவில்லை. இல்லையென்றால் மே மாதமே அப்தாப் சிக்கி இருப்பார்.

என்ன நடந்தது?

என்ன நடந்தது?

அல்லது அந்த பெண்ணையும் அப்தாப் கொலை செய்து இருப்பார். அதோடு அந்த பிரிட்ஜில் அப்தாப் காய்கறிகளையும் வைத்து இருக்கிறார். உடல் பாகங்கள் உள்ளே இருந்த போதிலும் அதற்கு அருகிலேயே காய்கறிகளை வைத்து இருந்துள்ளார். அதை பற்றி அப்தாப் எந்த கவலையும் படவில்லை. தலைக்கு அருகிலேயே மோர் பாக்கெட், பால் பாக்கெட் போன்ற பொருட்களை வைத்து இருந்தார் .

தலைக்கு அருகே பொருட்கள்

தலைக்கு அருகே பொருட்கள்

தலைக்கு அருகில் இருக்கும் அந்த பொருட்களை எடுத்து இவர் அசால்ட்டாக சமையல் செய்து சாப்பிட்டு இருக்கிறார். அந்த அளவிற்கு கொடூரமான குணம் கொண்டவராக அப்தாப் இருந்துள்ளார் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அப்தாப் பெண் பித்து கொண்டவராக இருந்தார். அவர் தினமும் புதுப்புது பெண்களை ரொமான்டிக் டேட் செய்வதில் ஆர்வம் கொண்டவராக இருந்தார் என்று போலீசார் விசாரணையில் தெரிய வந்து உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+