2014-க்கு பிறகு.. பிரதமர் மோடி இப்போ தான் பிரஸ் மீட் நடத்தியிருக்கிறாரா..? இல்லையாமே!
டெல்லி: பிரதமர் மோடி அமெரிக்காவில் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். 2014-க்கு பிறகு பிரதமர் மோடி பத்திரிகையாளர்களை சந்திப்பது இதுவே முதல் முறை என்று செய்திகள் வெளியான நிலையில், அதை முன்னாள் வெளியுறவுத்துறை அதிகாரி மறுத்துள்ளார்.
அமெரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி நேற்று வெள்ளை மாளிகையில் பத்திரிக்கையாளர்களை கூட்டாக சந்தித்தார். அப்போது பிரதமர் மோடியிடம் பல்வேறு கேள்விகளை செய்தியாளர்கள் எழுப்பினர். குறிப்பாக பயங்கரவாதம் குறித்து எல்லாம் பிரதமர் மோடி பேசியிருந்தார். இந்தியாவில் சாதி, மதம் என்ற அடிப்படையிலான பாகுபாடு என்ற கேள்விக்கே இடமில்லை.
அனைவருக்கும் ஒத்துழைப்பு, அனைவருக்கும் வளர்ச்சி, அனைவருக்குமான முயற்சி என்ற நம்பிக்கை செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது தொடர்ந்து முன்னோக்கி எடுத்து செல்லப்படும்' என்று செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் மோடி பேசியிருந்தார். இதெல்லாம் ஒருபக்கம் இருக்க பிரதமர் மோடி 2014க்கு பிறகு பத்திரிகையாளர்களை சந்திப்பது இதுவே முதல் முறை என்றும் செய்திகள் வெளியாகின.

குறிப்பாக அமெரிக்காவின் முன்னணி ஊடகமான நியூயார்க் டைம்ஸ் தனது செய்தியில் இதைக் குறிப்பிட்டு இருந்தது. அதாவது, நியூயார்க் டைம்ஸ் தனது செய்தியில், அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் பிரதமர் மோடியும் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தால் 2014-க்கு பிறகு அவர் நடத்தும் முதல் பத்திரிகையாளர் சந்திப்பு இதுவாகத்தான் இருக்கும்" என்று கூறியிருந்தது.
அதேபோல், சோஷியல் மீடியாக்களிலும் இதேபோன்ற தகவல்கள்தான் நேற்று முதல் ஆக்கிரமித்து இருக்கின்றன ஆனால், பிரதமர் மோடி குறித்து பரப்பப்படும் இந்த செய்தியில் உண்மை இல்லை என்றே கூறப்படுகிறது. ஐக்கிய நாடுகள் அவைக்கான இந்தியாவின் முன்னாள் தூதரும் 1985- ஆம் ஆண்டு பேட்ச் ஐ.எப்.எஸ் அதிகாரியுமான சையது அக்பருதின், "2014 க்கு பிறகு மோடியின் பத்திரிகையாளர்களை சந்திப்பது இதுவே முதல் முறை என்று பரவும் தகவலை மறுத்துள்ளார்."
தனது ட்விட்டரில் சையது அக்பரூதின் நியூயார்க் டைம்ஸ் செய்தியை குறிப்பிட்டு அளித்து இருக்கும் பதிலில், "இது உண்மையில்ல்லை. டெல்லியில் கடந்த 2015 ஆம் ஆண்டு அமெரிக்காவின் அப்போதைய அதிபர் ஒபாமாவுடன் பிரதமர் மோடி சந்தித்த பிறகு ஐதாராபாத் இல்லத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார்" என்று அது தொடர்பான வீடியோவையும் பதிவிட்டு இருக்கிறார்.
முன்னதாக ஜோ பைடன் அழைப்பை ஏற்று அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி, நேற்று வெள்ளை மாளிகையில் அந்நாட்டு அதிபர் ஜோ பைடனை சந்தித்தார். இந்த சந்திப்புக்கு பிறகு அரசு அளித்த விருந்திலும் மோடி கலந்து கொண்டார். இந்த விருந்து நிகழ்ச்சியில் இந்திய தொழில் அதிபர்கள், அமெரிக்காவின் முக்கிய பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
அதன்பிறகு பேசிய பிரதமர் மோடி, இந்தியர்களும் அமெரிக்கர்களும் ஒருவரை ஒருவர் நன்கு அறிந்து கொள்வதாகவும் இந்திய குழந்தைகள் ஹாலோவீனின் போது ஸ்பைடர் மேனாக மாறுவதாகவும் அமெரிக்க இளைஞர்கள் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆடுவதாகவும் இந்தியா அமெரிக்கா இடையேயான உறவை சுட்டிக்காட்டி பேசினார்.
-
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி












Click it and Unblock the Notifications