இதென்னடா "ஃபிளைட் சோதனை".. அங்கிட்டு கனடா பிரதமர் தத்தளிக்க.. இங்கிட்டு மமதா பானர்ஜி திக்குமுக்காட!
டெல்லி: இந்தியாவில் விமான சேவைகளுக்கு ஏதோ பில்லி சூன்யம் வைத்துவிட்டார்கள் என கிண்டலாக பேசும் அளவுக்கு அடுத்தடுத்த சம்பவங்கள் டெல்லியில் திணற வைக்கின்றன.
இந்தியா தலைமைத்துவத்தின் கீழ் டெல்லியில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டுக்கு வெள்ளிக்கிழமை வருகை தந்தவர் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ. ஜி20 உச்சி மாநாடு முடிந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமையன்று கனடாவுக்கு அவர் திரும்பி இருக்க வேண்டும்.

கனடா பயணம் ரத்து: ஆனால் கனடா செல்ல முடியாத நிலையில் டெல்லியில் இன்று வரை தங்கி இருந்தார் ஜஸ்டின் ட்ரூடோ. இதற்கு காரணம் விமானங்களில் அடுத்தடுத்து ஏற்பட்ட சோதனைகள்தான். முதலில் ஜஸ்டின் ட்ரூடோ பயணம் செய்ய ஏர்பஸ் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதனால் ஞாயிற்றுக்கிழமை கனடா செல்ல வேண்டிய அவரது பயணம் ரத்தானது.
கனடா புறப்பாடு: இதனையடுத்து பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை அழைத்துவர சிசி 150 போலரிஷ் ரக விமானத்தை கனடா அதிகாரிகள் அனுப்பி வைத்தனர். அத்துடன் ஏர்பஸ் விமான தொழில்நுட்ப கோளாறை சரி செய்யும் அதிகாரிகளும் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விமானம் டெல்லிக்க்கு வராமல் லண்டனுக்கு திருப்பிவிடப்பட்டதாக தகவல்கள் பரவின. தற்போது தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டதால் மீண்டும் ஏர்பஸ் விமானத்திலேயே கனடா புறப்படுகிறார் ஜஸ்டின் ட்ரூடோ என அறிவிக்கப்பட்டுள்ளது.

மமதா விமானமும் தாமதம்: இது ஒருபுறம் எனில், வெளிநாட்டு பயணம் மேற்கொண்ட திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மமதா பானர்ஜிக்கும் இப்படி ஒரு சோதனை நிகழ்ந்துவிட்டது. மமதா பானர்ஜி துபாய் செல்ல வேண்டிய விமானத்திலும் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் அவரது பயணமும் சுமார் 3 மணிநேரம் தாமதமானது. ஒருவழியாக துபாய் சென்றடைந்துவிட்டார் மமதா பானர்ஜி என மேற்கு வங்க அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தியாவுக்கு சோதனைகள் வரலாம்.. ஒரே நேரத்தில் பில்லி சூனியம் வைத்தது போல விமான சேவைகளுக்கு அடுத்தடுத்து வரலாமா? என கலாய்க்கின்றனர் சமூக வலைதள குடிமகன்களாகிய நெட்டிசன்ஸ்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications