தங்களின் சொத்து விவரங்களை பொதுவெளியில் அறிவிக்க உச்ச நீதிமன்ற நீதிபதிகள் திடீர் முடிவு! காரணம் என்ன?
டெல்லி: டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த யஷ்வந்த் சர்மா வீட்டில் கோடிக்கணக்கான பணம் சிக்கியது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இந்நிலையில், நீதித்துறை மீதான நம்பிக்கையை நிலை நிறுத்தும் விதமாக தங்களின் சொத்து விவரங்களை பொதுவெளியில் பகிர உச்ச நீதிமன்ற நீதிபதிகள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நீதித்துறை மீது மக்களுக்கு நம்பிக்கையை மேம்படுத்தும் விதமாகவும், வெளிப்படத்தன்மையை உறுதி செய்யும் விதமாகவும் தங்கள் சொத்து விவரங்களை பொதுவெளியில் வெளியிட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சம்மதம் தெரிவித்துள்ளனர். கடந்த 1 ஆம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அனைவரும் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

நீதிபதிகளின் சொத்து விவரங்கள் வெளியீடு
இந்தக் கூட்டத்தில் தான் நீதிபதிகள், தங்கள் சொத்து விவரங்களை பகிரங்கப்படுத்த முடிவு செய்துள்ளனர். நீதிபதிகளின் சொத்து விவரங்கள் வெளியிடுவதற்கான வழிகாட்டல்கள் விரைவில் இறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்படும் என்று உச்ச நீதிமன்ற வட்டாரங்கள் கூறுகின்றன. தற்போது உச்ச நீதிமன்றத்தில் உள்ள அனைத்து நீதிபதிகளும் தங்கள் சொத்து விவரங்களை சமர்பித்துள்ளனர். எனினும், இது பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் பகிரங்கப்படுத்தப்படவில்லை.
தற்போது டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த யஷ்வந்த் ஷர்மா வீட்டில் கட்டுக்கட்டாக பணம் சிக்கியது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் பொதுமக்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், தங்கள் சொத்து விவரங்களை வெளியிட்டு வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் முடிவு செய்துள்ளனர்.
நீதிபதி யஷ்வந்த் சர்மா வீட்டில் கிடந்த பணம்

டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த யஸ்வந்த் சர்மா வீட்டில் ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தின் போது தீ விபத்து ஏற்பட்டது. யஸ்வந்த் வர்மா பண்டிகைக்காக வெளியூர் சென்ற நிலையில், அக்கம் பக்கத்தினர் தீ விபத்து குறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர். தொடர்ந்து அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
அப்போது, யஷ்வந்த் வர்மாவின் வீட்டின் மற்றொரு அறையில் கட்டுக் கட்டாக பணம், நகைகள் ஆகியவை இருந்தது. கிட்டத்தட்ட 15 கோடி ரூபாய்க்கு மேல் பணம் இருந்த நிலையில் மேலும் சில பணக் கட்டுகள் எரிந்த நிலையில் மீட்கப்பட்டது. இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. யஷ்வந்த் சர்மா வீட்டில் இருந்த பணத்தை பறிமுதல் செய்தனர். டெல்லி உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்தவரின் வீட்டில் இவ்வளவு பணம் சிக்கியது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தீயது.
நம்பிக்கையை நிலை நிறுத்தும் விதமாக
இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள 3 நீதிபதிகள் அடங்கிய குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்துள்ளது. அவரை அலகாபாத் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றிய உச்ச நீதிமன்றம், அவருக்கு பணி எதுவும் ஒதுக்க வேண்டாம் என தெரிவித்துள்ளது. சிட்டிங் நீதிபதி வீட்டில் பல கோடி மதிப்புள்ள பணம் கட்டுக்கட்டாக பறிமுதல் செய்யப்பட்டது நீதித்துறைக்கு களங்கம் ஏற்படும் வகையில் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்த நிலையில், மக்கள் மத்தியில் நம்பிக்கையை நிலை நிறுத்தும் விதமாகவும், தங்கள் நேர்மையை உறுதி செய்யும் வகையிலும் சொத்து விவரங்களை பகிரங்கமாக அறிவிக்க உச்ச நீதிமன்ற நீதிபதிகள் முடிவு செய்துள்ளனர்.
இதற்கிடையே, தனது வீட்டில் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் தனக்கோ எந்த தொடர்பும் இல்லை என்று நீதிபதி யஷ்வந்த் சர்மா கூறினார். தான் வீட்டில் இல்லாத நேரத்தில் இந்த சம்பவம் நடைபெற்று இருப்பதாகவும் தனக்கு எதிராக சதி நடப்பதாகவும் அவர் கூறியிருந்ததர்.












Click it and Unblock the Notifications