டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பரபரப்பு! குலாம் நபி ஆசாத் வீட்டிற்கு படையெடுத்து காங். அதிருப்தி தலைவர்கள்! அடுத்த பிளான் என்ன

Google Oneindia Tamil News

டெல்லி: 5 மாநில தேர்தலில் காங்கிரஸ் கட்சி மிக மோசமான தோல்வியைச் சந்தித்துள்ள நிலையில், அக்கட்சியில் பரபரப்பான காட்சிகள் அரங்கேறத் தொடங்கிவிட்டன.

காங்கிரஸ் கட்சி 5 மாநில தேர்தலில் மிக மோசமான தோல்வியைச் சந்தித்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் காங். ஆட்சியை ஆம் ஆத்மியிடம் பறிகொடுத்துள்ளது, கோவாவில் வெறும் 11 இடங்களில் மட்டுமே வென்றது.

இவ்வளவு பெரிய போஸ்ட்டா! 5 மாநிலத்தில் 4ஐ தூக்கிய பாஜக! தமிழ்நாடு பெண் இவ்வளவு பெரிய போஸ்ட்டா! 5 மாநிலத்தில் 4ஐ தூக்கிய பாஜக! தமிழ்நாடு பெண்

உபி-இல் பிரியங்கா காந்தி நேரடியாகக் களமிறங்கி 2 ஆண்டுகளாக வேலை செய்த போதிலும், 2 தொகுதிகளில் மட்டுமே அக்கட்சியால் வெல்ல முடிந்தது. உத்தரகண்ட், மணிப்பூர் மாநிலங்களிலும் காங். தோல்வியையே சந்தித்துள்ளது.

 ஜி23 தலைவர்கள்

ஜி23 தலைவர்கள்

இந்த மோசமான தோல்விக்குப் பிறகு, காங்கிரஸில் உள்ள ஜி23 என்று அழைக்கப்படும் தலைவர்களின் செயல்பாடு எப்படி இருக்கும் என்பதைப் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஜி 23 என்று அழைக்கப்படும் இந்தத் தலைவர்கள், சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே கட்சியின் செயல்பாடுகள் குறித்து சோனியா காந்திக்குக் கடிதம் எழுதி இருந்தனர். அதில் காங்கிரஸ் கட்சிக்கு முழு நேரத் தலைவர் வேண்டும் என்றும் தேர்தல் பேரழிவுகள் தொடர்ந்து வருகிறது என்றும் சுட்டிக் காட்டி இருந்தனர். காங். தலைமை குறித்து இந்தத் தலைவர்களின் கேள்வி முக்கியமானதாகப் பார்க்கப்பட்டது.

 அவசர ஆலோசனை

அவசர ஆலோசனை

இந்தச் சூழலில் இன்றைய தினம், தலைமை மீது அதிருப்தியில் உள்ள காங். தலைவர்கள் அக்கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்தின் வீட்டில் சந்தித்து ஆலோசனை நடத்தினர். முன்னாள் மத்திய அமைச்சர்கள் கபில் சிபல் மற்றும் மணீஷ் திவாரி ஆகியோர் குலாம் நபி ஆசாத்தின் வீட்டிற்கு வந்திருந்தனர். ஆனந்த் சர்மாவும் இந்தக் கூட்டத்திற்கு வர உள்ளார் என்றே டெல்லி வட்டாரங்கள்

 அடுத்த வரும் நாட்கள்

அடுத்த வரும் நாட்கள்

இந்த தேர்தல் தோல்வி கட்சியில் தலைமை மாற்றம் தேவை என்ற கோரிக்கைக்குப் புத்துயிர் அளித்துள்ளது. அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஜி23 தலைவர்கள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். காங்கிரஸ் தொடர் தோல்விகளைச் சந்தித்து வரும் நிலையில், இந்த ஜி23 தலைவர்களின் அடுத்தகட்ட நடவடிக்கை முக்கியமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் நாட்களில் ஜி23 தலைவர்களின் செயல்பாடுகள் முக்கியமானதாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

 சசி தரூர்

சசி தரூர்

கட்சித் தலைமை மீது அதிருப்தியில் உள்ள தலைவர்களில் ஒருவரகா அறியப்படும் சசி தரூர் தனது ட்விட்டர் பக்கத்தில், "காங். மீது நம்பிக்கை கொண்ட அனைவருக்கும் இந்தத் தேர்தல் முடிவுகள் கடும் பாதிப்பை ஏற்படுத்தும். காங்கிரஸ் தனது திட்டத்தையும் எடுக்க வேண்டிய நடவடிக்கையையும் மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது. கட்சியின் தலைமையைச் சீர்திருத்த வேண்டும். இது மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தும். நாம் வெற்றிபெற வேண்டுமானால் மாற்றம் தவிர்க்க முடியாதது" என்று பதிவிட்டுள்ளார்.

 காங். கட்சி

காங். கட்சி

ஜி23 தலைவர்கள் ஆலோசனை நடத்தும் நிலையில், தேர்தல் முடிவுகளை ஆய்வு செய்ய ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படும் என காங். சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா கூறுகையில், "5 மாநில தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சியின் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக வந்துள்ளன.மக்களின் விருப்பத்தைப் பெறத் தவறிவிட்டோம் என்பதை ஏற்கிறோம். முடிவுகளைச் சுயபரிசோதனை செய்வதற்காகக் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தை விரைவில் கூட்டச் சோனியா காந்தி முடிவு செய்துள்ளார்" என்று தெரிவித்தார்.

 மூத்த தலைவர்கள் அதிருப்தி

மூத்த தலைவர்கள் அதிருப்தி

ஆனால், காங். தலைமையில் இருந்து எந்தவொரு குறிப்பிட தகுந்த மாற்றமும் நடக்கும் என தாங்கள் எதிர்பார்க்கவில்லை என்று கட்சியின் மூத்த தலைவர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். கடந்த 2020இல் பீகார் தேர்தல் மற்றும் கடந்த ஆண்டு நடந்த மாநில தேர்தல்களில் என்ன தவறு நடந்தது என்பதை ஆய்வு செய்யக் காங்கிரஸ் தலைமை ஒரு குழுவை நியமித்தது. ஆனால் பிறகும் எதுவும் மாறவில்லை என்று அதிருப்தி தலைவர்கள் குறிப்பிடுகின்றனர்.

English summary
Congress dissident leaders met at senior leader Ghulam Nabi Azad's home: Congress faced devastating loose in 5 state election.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X