எச்சரித்த உளவுத்துறை.. இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாருக்கு ‛இசட்’ பிரிவு பாதுகாப்பு!
டெல்லி: உளவுத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாருக்கு ‛இசட்’ பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 19 ம் தேதி முதல் ஜுன் 1ம் தேதி வரை மொத்தம் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜுன் 4ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

இந்த லோக்சபா தேர்தலுக்கான தேதியை கடந்த மாதம் 16ம் தேதி இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்தார். இந்நிலையில் தான் இந்திய தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாருக்கு ‛இசட்’ பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
அதாவது ராஜீவ் குமாரின் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத்துறை சார்பில் மத்திய அரசுக்கு அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை தொடர்ந்து தான் ராஜீவ் குமாருக்கு ‛இசட்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் எந்த மாதிரியான பாதுகாப்பு அச்சுறுத்தல் ராஜீவ் குமாருக்கு உள்ளது? எந்த அமைப்பிடம் இருந்து அச்சுறுத்தல் உள்ளது? என்பன போன்ற விபரங்கள் வெளியாகவில்லை.
‛ஒரே நாடு ஒரே தேர்தல்’ முறையை 2029ல் கொண்டு வரலாம்! பரிந்துரை செய்யும் சட்ட ஆணையம் - பரபர தகவல்
இருப்பினும் நேற்றைய தினம் டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணைய அலுவலகத்தின் முன்பு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். அமலாக்கத்துறை, சிபிஐ இயக்குனர்களை மாற்றம் செய்ய வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். இதன் காரணமாக கூட ராஜீவ் குமாருக்கு ‛இசட்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.
புதிய தேர்தல் ஆணையராக தேர்வான ஞானேஷ் குமார், சுக்வீர் சிங் சந்து.. யார் இவர்கள் தெரியுமா? முழு பின்னணி
மேலும் லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் பல்வேறு மாநிலங்களுக்கு ஆய்வுக்காக செல்லலாம். குறிப்பாக சத்தீஸ்கர், ஜார்கண்ட் உள்ளிட்ட நக்சலைட், மாவோயிஸ்ட் நடமாடும் மாநிலங்களுக்கும் கூட அவர் பயணிக்கலாம். இதனால் கூட ராஜீவ் குமாருக்கு ‛இசட்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு இருக்கலாம் என சொல்லப்படுகிறது.
தற்போது ராஜீவ் குமாருக்கு ‛இசட்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு இருப்பதன் மூலம் அவருடைய பாதுகாப்பு பணியில் 33 பேர் ஈடுபட உள்ளனர். இதில் சிஆர்பிஎப் காமாண்டோக்களும் அடங்குவார்கள். இதில் துப்பாக்கி ஏந்திய 10 வீரர்களும் அடங்குவார்கள். இந்த 33 பேரில் ஒரு பகுதியினர் ராஜீவ் குமாரின் வீட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். மற்றபடி 6 வீரர்கள் என்ற அடிப்படையில் மொத்தம் 18 பேர் 3 ஷிப்டுகளில் ராஜீவ் குமாரின் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications