"இது வெறும் தொடக்கம் தான்.." டெல்லியை அதிர வைத்த கரப்பான் பூச்சி கட்சியின் அடுத்த திட்டம்! பகீர்
டெல்லி: தலைநகர் டெல்லியில் நேற்றைய தினம் மிக பெரியளவில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் பெரும்திரளான மாணவர்கள் கலந்து கொண்டனர். அதேநேரம் இந்த போராட்டம் இத்தோடு முடியாது என்றும் வரும் நாட்களிலும் போராட்டம் மிக பெரியளவில் தொடரும் என்றும் அக்கட்சியின் தலைவர் டிப்கே கூறியுள்ளார்.
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும். ஏழே நாட்களில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இந்த காலக்கெடுவைத் தாண்டி அவர் பதவியில் நீடித்தால், நாடு தழுவிய அளவில் போராட்டங்களை தீவிரப்படுத்தப் போவதாக கரப்பான் பூச்சி ஜனதா கட்சி வெளிப்படையாக எச்சரித்துள்ளது. கல்வித்துறையின் தற்போதைய சூழல், மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கும் வகையில் இருப்பதால், இந்த விவகாரத்தில் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது போராட்டக்காரர்களின் கோரிக்கையாக உள்ளது.

போராட்டம்
டெல்லியின் ஜந்தர் மந்தரில் நேற்று நடந்த போராட்டத்தில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் திரண்டனர். நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்திருந்த இந்த மாணவர்கள், கல்வித் துறையில் நடைபெற்று வரும் முறைகேடுகளைக் கண்டித்து குரல் எழுப்பினர். அமைதியான முறையில் நடைபெற்ற இந்தப் போராட்டம், ஒரு வலுவான செய்தியை அரசுக்கு அனுப்புவதாக இருந்தது. மாணவர்களின் கோபமும், ஏக்கமும் அந்த இடத்தையே அதிர வைத்ததைக் காண முடிந்தது.
போராட்டத்தில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் கட்சியின் செய்தித் தொடர்பாளர்கள் சௌரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் ரன்கா மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்தனர். தங்கள் கோரிக்கைகள் நியாயமானவை என்பதையும், கல்வி அமைப்பின் சீரமைப்பு அவசியம் என்பதையும் அவர்கள் அழுத்தமாக முன்வைத்தனர். நிர்வாக ரீதியான குளறுபடிகளைக் களையத் தவறிய அமைச்சகத்தின் மீது அவர்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர்.
தொடக்கம் தான்
கட்சி நிறுவனர் அபிஜீத் டிப்கே இந்தப் போராட்டத்தை முன்னின்று வழிநடத்தினார். "இது ஒரு தொடக்கம் மட்டுமே" என்று குறிப்பிட்ட அவர், ஆயிரக்கணக்கானோர் டெல்லியில் திரண்டு போராடியதன் மூலம் ஒரு புதிய வரலாற்றைப் படைத்துள்ளோம் என்றார். கல்விச் சூழலில் மாற்றம் ஏற்படும் வரை மாணவர்களின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து போராடுவோம் என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்தார்.
போராட்டத்தின் தீவிரம்
சுட்டெரிக்கும் கோடை வெயிலையும் பொருட்படுத்தாமல் மாணவர்கள் இந்தத் தர்ணா போராட்டத்தில் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். இந்த போராட்டம் மாணவர்களின் ஒற்றுமையை அரசுக்கு உணர்த்தும் வகையில் அமைந்திருந்தது என்று டிப்கே சுட்டிக்காட்டினார். வன்முறையில் ஈடுபடாமல், அமைதியான முறையில் தங்கள் உரிமைகளுக்காகப் போராடுவதே தங்கள் பலம் என்று அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
சுமார் 6,000 முதல் 7,000 பேர் வரை இந்தப் போராட்டத்தில் பங்கேற்றதாகக் கூறப்படுகிறது. இதில் கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால், இதில் பங்கேற்றவர்களில் பல மாணவர்கள் இதற்கு முன் எந்தவொரு பொதுப் போராட்டத்திலும் கலந்துகொண்டவர்கள் அல்ல. ஆனால், கல்வி அமைப்பின் மீது அவர்கள் கொண்ட தீவிரமான கோபம் மற்றும் விரக்தியே அவர்களைத் தெருவில் இறங்கி போராட வைத்திருக்கிறது என்பது அரசியல் பார்வையாளர்களின் கருத்தாக உள்ளது.
குழப்பங்கள்
நீட், சி.யு.இ.டி, சி.பி.எஸ்.இ மற்றும் எஸ்.எஸ்.சி தேர்வுகள் எனத் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் முறைகேடுகள் மற்றும் குழப்பங்களே போராட்டத்திற்கான முக்கியக் காரணங்களாகும். கல்வித் துறையின் இந்த ஒட்டுமொத்த தோல்விக்கு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் முழுப் பொறுப்பேற்க வேண்டும் என்பதே போராட்டக்காரர்களின் பிரதானக் கோரிக்கையாக உள்ளது.
முடியாது
டிப்கே மேலும் கூறுகையில், "இந்த போராட்டம் இத்தோடு முடியாது.. அடுத்த 7 நாட்களுக்குள் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும். மாணவர்களின் எதிர்காலமே பாதிக்கப்பட்டுள்ளது. அவர் ராஜினாமா செய்யவில்லை என்றால்.. அடுத்தகட்ட போராட்டங்களை நடத்துவோம். கட்சி நிர்வாகிகள் உடன் ஆலோசித்து போராட்டங்களை நடத்துவோம். மாணவர்களின் எதிர்காலம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோள்" என்றார்.
-
இன்றே கடைசி.. மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமாவுக்கு கெடு.. கரப்பான்பூச்சி கட்சி வார்னிங் -
கரப்பான் பூச்சி கட்சி போராட்டம்.. வேலையை காட்டிய டெல்லி போலீஸ்! 6 பேர் அதிரடி கைது! -
புலிப் பாய்ச்சல்.. உலக அரங்கில் தலைநிமிரும் இந்தியா! எதிர்பார்ப்புகளை கடந்த பிரம்மாண்ட GDP வளர்ச்சி! -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
"நாளைக்கு வரோம்.. களத்தை அதிர வைக்கிறோம்!" டெல்லியை மிரள வைக்க கிளம்பிய கரப்பான் பூச்சி கட்சி! -
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
தேசியக்கொடியை கொண்டு வாங்க! டெல்லியில் லேண்ட் ஆனதும் ஆப்ஜித் தீப்கே பதிவு.. பரபரப்பில் ஜந்தர் மந்தர் -
2047ல் இந்தியா வல்லரசு.. வாய்ப்பில்லை ராஜா! இன்னும் 34 வருஷமாகும்.. உண்மையை உடைத்த ஆய்வறிக்கை! -
மிரட்டும் மின்வெட்டு.. நள்ளிரவு நடுத்தெருவில் போராடிய சென்னை மக்கள்.. நழுவிய அதிகாரிகள் -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி












Click it and Unblock the Notifications