குஜராத்தில் முடிஞ்சுது.. அடுத்து ராஜஸ்தான்.. இன்றும் நாளையும் கனமழை பெய்யும்.. வானிலை மையம் அலெர்ட்!
டெல்லி: குஜராத்தை ஆட்டிப் படைத்த பைபர்ஜாய் புயல் ராஜஸ்தானை நோக்கி நகர்ந்த நிலையில் ராஜஸ்தானில் இன்று கனமழை பெய்யும் என்றும் இந்திய வானிலை மைய இயக்குநர் மிருத்யுஞ்சய் மொஹபத்ரா தெரிவித்தார்.
அரபிக் கடலில் உருவான பைபர்ஜோய் புயல் அதிதீவிர புயலாக மாறியது. இந்தப் புயல் குஜராத் மாநில கடற்கரை மாவட்டமான கட்ச்- பாகிஸ்தானின் கராச்சி கடற்கரை இடையே கரையை கடக்கும் என வானிலை மையம் தெரிவித்தது. இதனால் குஜராத் மாநிலத்தில் கடற்கரையோரப் பகுதியில் இருந்து சுமார் 10 கி.மீட்டர் சுற்றுப்பகுதியில் வசிக்கும் மக்கள் வெளியேற்றப்பட்டனர்.
சுமார் ஒரு லட்சம் மக்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டு, அரசின் தற்காலிக தங்குமிடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். புயல் காரணமாக நேற்று காலை முதலே காற்றுடன் மழை பெய்து வந்தது. 6க்கும் மேற்பட்ட மாநிலங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டது. லத்த காற்று வீசும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டது.
தேசிய பேரிடர் மீட்புப்படையின் 15 குழுக்கள், 12 மாநில பேரிடர் மீட்புக்குழுக்கள், மாநில சாலை மற்றும் கட்டுமானத்துறையின் 115 குழுக்கள், மின்சாரத்துறையின் 397 குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டனர்.

ஏற்கனவே கணித்தபடி பிபோர்ஜோய் புயல் வடகிழக்கு நோக்கி நகர்ந்து நேற்று மாலை 4.30 மணியளவில் குஜராத் மாநிலம் சவுராஷ்டிரா மற்றும் கட்ச் கடலோர பகுதியில் கரையை கடக்கத் தொடங்கியது. இரவு 9 மணிக்கு புயலின் வெளிப்புற பகுதி குஜராத்தை ஒட்டிய பகுதிகளில் கடக்க தொடங்கியது. புயலின் கண் பகுதி கரை கடக்கும் நிகழ்வு நள்ளிரவு வரை நீடித்தது.
புயல் கரையைக் கடக்கும்போது கடலோரப் பகுதியில் மணிக்கு 110 முதல் 125 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது. புயல் கரை கடக்கத் தொடங்கியதையடுத்து பலத்த காற்றுடன், கனமழை பெய்தது. பல்வேறு இடங்களில் மரங்கள் வேருடன் சாய்ந்தன. மின்கம்பங்களும் சாய்ந்தன.
புயல் குஜராத்தில் கரையைக் கடந்ததையடுத்து அங்கு புயல் காற்று, மழை குறைந்தது. இன்று காலைக்குள் பைபர்ஜாய் புயல் மேலும் வலுவிழந்து, மாலையில் 'அழுத்த தாழ்வு நிலைக்கு' நகரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று அதிகாலை தெரிவித்துள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறுகையில், கடுமையான பைபர்ஜாய் புயல் சௌராஷ்டிரா-கட்ச் பகுதியை மையமாகக் கொண்டு வடகிழக்கு நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் ராஜஸ்தானில் இன்று கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பைபர்ஜாய் புயல் வடகிழக்கு திசையில் நகர்ந்து ஜூன் 16 ஆம் தேதி அதிகாலையில் ஒரு சூறாவளி புயலாக வலுவிழந்து, இன்று மாலையில் தெற்கு ராஜஸ்தானில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் ராஜஸ்தானில் இன்றும் நாளையும் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிவேக காற்று மற்றும் கனமழை காரணமாக தற்காலிக வீடுகள் மற்றும் மரங்கள் மற்றும் கிளைகள் முறிந்து விழும் அபாயம் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications