உடல் உறுப்புகளை செயலிழக்க வைக்கும் மஞ்சள் பூஞ்சை.. ஏன் ஏற்படுகிறது? உடனடியாக செய்ய வேண்டியது என்ன?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கருப்பு மற்றும் மஞ்சள் பூஞ்சைகளைத் தொடர்ந்து காசியாபாத் பகுதியில் ஒருவருக்கு அதிக ஆபத்தான மஞ்சள் பூஞ்சை பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Recommended Video

    புதிதாக பரவும் White Fungus நோய்.. என்னென்ன அறிகுறிகள் இருக்கும்?

    இந்தியாவில் தற்போது தான் கொரோனா பரவலின் 2ஆம் அலையின் தாக்கம் மெல்லக் குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 2.22 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

    குறிப்பாக நாட்டில் கொரோனா உயிரிழப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒரே நாளில் மட்டும் 4454 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்தமாக கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தைக் கடந்துள்ளது.

    கருப்பு பூஞ்சை

    கருப்பு பூஞ்சை

    இந்நிலையில், கொரோனாவுக்கு பிந்தைய நோய்களின் பாதிப்புகளும் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கருப்பு பூஞ்சை பாதிப்பு, தற்போது வரை நாட்டில் 5424 பேருக்குக் கருப்பு பூஞ்சை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் சுமார் 55% நீரிழிவு பாதிப்பைக் கொண்டவர்களாகும். கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் உடலில் நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் என்பதால் கருப்பு பூஞ்சை பாதிப்பு அவர்களுக்கு எளிதாக ஏற்படுகிறது.

    அதிக ஆபத்தை ஏற்படும் மஞ்சள் பூஞ்சை

    அதிக ஆபத்தை ஏற்படும் மஞ்சள் பூஞ்சை

    அதேபோல நாட்டில் சில பகுதிகளில் வெள்ளை பூஞ்சை பாதிப்பும் கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், கருப்பு மற்றும் வெள்ளை பூஞ்சைகளைக் காட்டிலும் அதிக ஆபத்தான மஞ்சள் பூஞ்சை பாதிப்பு உத்தரப் பிரதேசத்தின் காசியாபாத் பகுதியில் ஒருவருக்குக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த நபர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.

    என்ன செய்யும்

    என்ன செய்யும்

    மஞ்சள் பூஞ்சை பாதிப்பு முதலில் உள் உறுப்புகளைப் பாதிக்கும் என்பதால் இது மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும். ஒருவருக்கு மஞ்சள் பூஞ்சை பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டால், அவர் உடனடியாக மருத்துமவனைகளில் சிகிச்சை அனுமதிக்கப்பட வேண்டும். மஞ்சள் பூஞ்சை பாதிப்பிற்கு amphotericin b என்ற மருந்து அளிக்கப்படும்.

    அறிகுறிகள் என்ன

    அறிகுறிகள் என்ன

    சோம்பல், திடீர் எடை இழப்பு, பசியின்மை மஞ்சள் பூஞ்சையின் முக்கிய அறிகுறிகளாக உள்ளன. அதேபோல சில இடங்களில் சீழ் கசிவும் ஏற்படலாம்.மஞ்சள் பூஞ்சை பாதிப்பு காயங்களைக் குணப்படுத்தும் முறையைப் பாதிப்பதால், காயங்கள் குணமாக அதிக காலம் ஆகும். கண் பகுதிகளில் பாதிப்பு, உறுப்பு செயலிழப்பு ஆகியவையும் ஏற்படும்.

    ஏன் பரவுகிறது

    ஏன் பரவுகிறது

    மோசமான சுகாதார சூழ்நிலையே பெரும்பாலும் மஞ்சள் பூஞ்சை ஏற்படக் காரணமாக உள்ளது. பழைய உணவு மற்றும் மலம் ஆகியவற்றை உடனடியாக மற்றும் முறையாக அகற்றுவதன் மூலம் மஞ்சள் பூஞ்சை பாதிப்பைக் கட்டுப்படுத்தலாம். அதேபோல அதிக ஈரப்பதமும் மஞ்சள் பூஞ்சை பாதிப்பை ஏற்படுத்தும். ஈரப்பதம் 30% முதல் 40% மேல் இருக்கக் கூடாது என்று மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+