பிரதமர் மோடிக்கு ரூ.420 அனுப்பும் ஆம்ஆத்மி.. எல்லாரும் வாங்க என அழைப்பு.. ஓ காரணம் இதுதானா?
டெல்லி: இந்திய ராணுவத்துக்கு பணம் இல்லை என கூறும் பிரதமர் நரேந்திர மோடிக்கு ரூ.420 அனுப்பி அக்னிபாத்தை கைவிடக்கோரி நூதன போராட்டத்தை நடத்த ஆம்ஆத்மி கட்சி முடிவு செய்துள்ளது.
இந்திய பாதுகாப்பில் முப்படைகளான ராணுவம், கடற்படை, விமானப்படையில் ஆள்சேர்ப்புக்கான புதிய திட்டமாக அக்னிபாத் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் 4 ஆண்டுகள் வரை ஒப்பந்த அடிப்படையில் இளைஞர்கள் முப்படையில் இணைந்து சேவையாற்ற முடியும்.
இந்த திட்டத்துக்கு இளைஞர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இளைஞர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

அக்னிபாத் போராட்டம்
குறிப்பாக பீகார், உத்தரபிரதேசம், தெலங்கானா, ஜார்கண்ட் உள்பட பல மாவட்டங்களில் கடந்த மாதம் போராட்டங்கள் வெடித்தன. ரயில் நிலையங்கள் சூறையாடப்பட்டு, ரயில்களுக்கு தீவைக்கப்பட்டன. செகந்திராபாத்தில் நடந்த போராட்டத்தில் போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் இளைஞர் இறந்தார். தற்போது போராட்டம் கைவிடப்பட்டுள்ள நிலையில் முப்படைகளுக்கான ஆள்சேர்ப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

எதிர்க்கட்சிகள் போராட்டம்
இருப்பினும் காங்கிரஸ், ஆம்ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அக்னிபாத் திட்டத்தை கைவிட வேண்டும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்த திட்டத்தின் மூலம் இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இருப்பினும் மத்திய அரசு செவிசாய்க்கவில்லை. இந்நிலையில் தான் அக்னிபாத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆம்ஆத்மி சார்பில் நூதன போராட்டம் முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மோடிக்கு ரூ.420 அனுப்பி போராட்டம்
அதன்படி அக்னிபாத் திட்டத்திற்கு எதிராகவும், அடையாள போராட்டமாகவும் ஆம்ஆம்தி கட்சியினர் ரூ.420க்கான காசோலை(செக்), வரைவோலைகளை(டிடி) பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்ப உள்ளனர். இதுபற்றி ஆம்ஆத்மி கட்சியின் உத்தர பிரதேச மாநில பொறுப்பாளரும், எம்பியுமான சஞ்சய் சிங் கூறியுள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது:

ராணுவத்தை ஏமாற்ற வேண்டாம்
பிரதமர் நரேந்திர மோடி அரசின் அக்னிபாத் திட்டத்தால் இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. இதனால் இத்திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மோடி அரசுக்கு ரூ.420 காசோலை, டிடி அனுப்ப உள்ளோம். பிரதமர் மோடி இந்திய ராணுவத்தை ஏமாற்ற வேண்டாம். நாட்டைக் காக்க பணத்திற்காக அழ வேண்டாம்.

பாஜகவின் கைப்பாவை
எதிர்க்கட்சி தலைவர்களுக்கு எதிராக அமலாக்கத்துறையை பாஜக பயன்படுத்துகிறது. அமலாக்கத்துறை என்பது பாஜகவின் கைப்பாவையாக உள்ளது. ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் டெய்லர் கண்ணையா லால் கொலையில் ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் துணை அமைப்பான ராஷ்ட்ரிய முஸ்லிம் மஞ்ச்சின் பங்கு உள்ளது'' என்றார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications