”இந்திய படைகளின் வீரம், கண்ணியத்தில் சமரசம் கூடாது” -அக்னிபாத் திட்டத்தை எதிர்க்கும் ராகுல் காந்தி
டெல்லி: மத்திய பாஜக அரசின் அக்னிபாத் திட்டத்தால் இந்திய படைகளின் செயல்திறன் குறையும் என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தெரிவித்து உள்ளார்.
இந்திய பாதுகாப்புத் துறையில் அக்னி வீர் என்ற பெயரில் புதிய துறையை உருவாக்கி இருக்கும் மத்திய அரசு, அக்னிபாத் என்ற திட்டத்தை தொடங்கி இருக்கிறது.
இத்திட்டத்தின் மூலம் 4 ஆண்டுகள் ஒப்பந்தத்தின் கீழ் அக்னி வீர் என்ற பெயர் கொண்ட வீரர்கள் பணியமர்த்தப்படுவார்கள்.

பாதுகாப்புத்துறை அமைச்சர் கருத்து
இந்த பணி நியமன முறைக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் வழங்கி இருக்கிறது. அக்னிபாத் திட்டத்தின் மூலம் இந்திய ராணுவத்தில் இளைஞர்கள் அதிகளவில் சேருவதற்கு ஆர்வம் காட்டுவார்கள் என்றும், இந்திய ராணுவம் இளமையானதாக இத்திட்டம் உதவும் எனவும் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

தகுதியுடையவர்கள் யார்?
17.5 முதல் 21 வயதுக்கு உட்பட்ட 45 ஆயிரம் பேருக்கு இத்திட்டத்தின் கீழ் பணி வழங்கப்பட இருக்கிறது. இவர்களுக்கு 6 மாத பயிற்சியளிக்கப்பட்டு 4 ஆண்டுகள் ஒப்பந்த பணி வழங்கப்படும். 4 ஆண்டுகளுக்கு பின் 25% பேருக்கு மட்டும் 15 ஆண்டு ஒப்பந்தத்தின் கீழ் மீண்டும் பணி வழங்கப்படும். மீதம் உள்ள 75 சதவீதம் பேர் எந்தவிதமான ஓய்வூதிய பலனும் இன்று பணியிலிருந்து நீக்கப்படுவார்கள்.

பீகாரில் போராட்டம்
இந்த புதிய திட்டத்துக்கு ராணுவத்துக்கு தயாராகி வரும் இளைஞர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்தை கைவிட வலியுறுத்தி பீகாரின் முசாபர்பூர் நகரில் நெடுஞ்சாலையை மறித்து இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல், பக்சாரில் ரயில் தண்டவாளங்களில் அமர்ந்து தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

ராகுல் காந்தி எதிர்ப்பு
இதனிடையே மத்திய அரசின் அக்னிபாத் ராணுவ ஆள்சேர்ப்பு திட்டத்துக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் அவர் வெளியிட்டு உள்ள பதிவில், "இந்தியா இரு முனைகளில் இருந்தும் அச்சுறுத்தல்களை சந்தித்கும்போது அக்னிபாத் திட்டம் நமது ஆயுதப் படைகளின் செயல்பாட்டை குறைக்கும். பாஜக அரசு நமது படைகளின் கண்ணியம், மரபு, வீரம் மற்றும் ஒழுக்கம் ஆகியவற்றில் சமரசம் செய்வதை நிறுத்த வேண்டும்." என்று குறிப்பிட்டு உள்ளார்.
-
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications