அக்னிபாத் திட்டத்தால் இளைஞர்களுக்கு பலன்; பொன்னான வாய்ப்பு: மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத்சிங்
டெல்லி: மத்திய அரசின் புதிய ராணுவ ஆட்சேர்ப்பு கொள்கையான அக்னிபாத் திட்டத்தால் இளைஞர்களுக்கு பலன் கிடைக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். அக்னிபாத் திட்டமானது இளைஞர்களுக்கு பொன்னான எதிர்காலத்தை உருவாக்கக் கூடியது என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.
அக்னிபாத் ராணுவ ஆட்சேர்ப்புத் திட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் 3-வது நாளாக தொடர் போராட்டம் நடைபெற்றுவருகிறது. பீகாரில் 2 நாட்களாக தீ வைப்பு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. வட இந்தியாவின் பல மாநிலங்களும் போர்க்களமாகி உள்ளன.

தென்னிந்தியாவிலும் இந்த போராட்டம் தீவிரமடைந்துள்ளது. தமிழகத்தின் வேலூரில் நேற்று அக்னிபாத்துக்கு எதிராக போராட்டம் நடந்தது. இன்று தெலுங்கானாவின் செகந்திராபாத்தில் ரயில்கள் கல்வீசித் தாக்குதல் நடத்தப்பட்டன. ரயில் நிலையம் சூறையாடப்பட்டது.
இப்போராட்டங்களைத் தொடர்ந்து அக்னிபாத் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் இளைஞர்கள் சேருவதற்கான வயது வரம்பு 23 ஆக உயர்த்தப்பட்டது. ஆனாலும் இளைஞர்களின் போராட்டம் ஓயவில்லை.
இந்நிலையில் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத்சிங் ஆகியோர் இளைஞர்கள் போராட்டங்களை கைவிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது தொடர்பாக அமித்ஷா தமது ட்விட்டர் பக்கத்தில், அக்னிபாத் திட்டத்தால் இளைஞர்கள் பெரும் பலன் அடைவார்கள்; இளைஞர்கள் நமது நாட்டுக்கு சேவை செய்யும் பிரகாசமான எதிர்காலத்தை நோக்கி முன்னேறுவர் என்றார்.
மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் தமது ட்விட்டர் பக்கத்தில், இளைஞர்களுக்கான பொன்னான வாய்ப்பை தரக் கூடியது அக்னிபாத் திட்டம். இதனால்தான் வயது வரம்பையும் 23 ஆக உயர்த்தி அறிவித்தார் பிரதமர் மோடி. ஆகையால் இளைஞர்கள் போராட்டத்தைக் கைவிட்டுவிட்டு ராணுவத்தில் சேருவதற்கான முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும் என்றார்.
-
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
விஜய் கொடுத்த ரியாக்ஷன்..! மோடி - விஜய் இடையே வெறும் 10 நிமிட சந்திப்பு..! பேசியது என்ன? -
நிர்மலா சீதாராமனை சந்தித்த விஜய்! நிதி விவகாரத்தில்.. தமிழ்நாடு வைத்த முக்கிய கோரிக்கை! -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக












Click it and Unblock the Notifications