அகமதாபாத் விமான விபத்து.. இடைக்கால நிவாரணமாக ரூ.25 லட்சம் அறிவிப்பு!
டெல்லி: அகமதாபாத் விமான விபத்தில் 260 பேர் வரை உயிரிழந்திருந்தனர். இந்நிலையில் விமானத்தில் பயணித்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்கப்படும் என்று ஏர் இந்தியா அறிவித்திருந்தது. இந்நிலையில் இடைக்கால நிவாரணமாக ரூ.25 லட்சம் உடனடியாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ரூ.1 நிவாரணத்துடன் இதுவும் சேர்த்துக்கொள்ளப்படும். அதாவது ரூ.1.25 கோடி நிவாரணமாக வழங்கப்படும் என்று ஏர் இந்தியா நிறுவனத்தின் சிஇஒ கூறியுள்ளார்.

ஏர் இந்தியாவின் அறிவிப்பு
"உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும், உயிர் பிழைத்த ஒரு பயணியின் குடும்பத்திற்கும் உடனடி நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், தலா 25 லட்சம் ரூபாய் இடைக்காலமாக வழங்கப்படும். டாடா சன்ஸ் ஏற்கனவே அறிவித்த 1 கோடி ரூபாயுடன், இது கூடுதலாகும்" என்று ஏர் இந்தியா தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சமீபத்திய விபத்தில் உயிரிழந்த பயணிகளின் குடும்பங்களுக்கு ஏர் இந்தியா தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது என்றும், இந்த நம்பமுடியாத கடினமான நேரத்தில் தேவையான உதவிகளையும், ஆதரவையும் வழங்க எங்கள் குழுக்கள் அனைத்தையும் செய்து வருகின்றன என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஏர் இந்தியாவுக்குச் சொந்தமான போயிங் 787 ட்ரீம்லைனர் விமானம் 230 பயணிகள் மற்றும் 12 பணியாளர்களுடன் அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. விமானத்தில் பயணித்த 241 பேரில் ஒருவர் தவிர மற்ற அனைவரும் உயிரிழந்துவிட்டதாக விமான நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஏர் இந்தியா நிறுவனம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதோடு, அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்க உறுதிபூண்டுள்ளது என்றும் கூறியுள்ளது.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி












Click it and Unblock the Notifications