அகமதாபாத் விமானத்தில் பலரும் தப்பிக்க முடியாமல் போக காரணமான சுவர்.. எமெர்ஜென்சி வழியில் என்ன நடந்தது
டெல்லி: அகமதாபாத் விமானத்தில் உயிர் தப்பிய விஸ்வாஸ் குமார் கூறியதை பார்க்கும் போது, விமானம் மோதிய உடன் வெடிக்கவில்லை.. குறைந்தது ஒரு நிமிடமாவது ஆகியிருக்கும் என்று கூறப்படுகிறது. அதை பயன்படுத்தி தப்பி இருக்கிறார். அதில் இரண்டு வழிகள் இருந்தது. ஒரு வழியில் தான் விஸ்வாஸ் குமார் தப்பினார். மற்றொரு வழியில் சுவர் இருந்திருக்கிறது. கதவு திறந்தாலும் சுவர் ஒட்டியிருந்ததால் யாராலும் அந்த வழியாக குதிக்க முடியவில்லை.. அதுவே பலரும் தப்பிக்கமுடியாமல் போக காரணமாக இருந்துள்ளது. விவரமாக பார்ப்போம்.
அகமதாபாத் நகரில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு ஏர் இந்தியாவுக்கு சொந்தமான விமானம் கடந்த ஜூன் 13ம் தேதி பிற்பகலில் புறப்பட்டது. லண்டன் சென்ற அந்த விமானத்தில் இந்தியா, இங்கிலாந்து, கனடா மற்றும் போர்ச்சுக்கல் நாடுகளை சேர்ந்த 230 பயணிகள் மற்றும் 2 விமானிகள், 10 பணியாளர்கள் என 242 பேர் இருந்தனர்.

குதிரைப்பந்தய மைதானம்
விமான நிலையத்தில் அனைத்து சோதனைகளுக்கு பிறகு ஓடு பாதையில் இருந்து விமானம் புறப்பட்டு சென்ற போது, அடுத்த சில நிமிடங்களில் 800 அடி உயரத்தில் பறந்தது. ஆனால் விமானம் திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. இதையடுத்து அவசர கால அழைப்பை விமானி விடுத்தார். அந்த விமானத்தை விமானி உடனடியாக விமான நிலையத்தின் அருகில் இருந்த மேகனிநகர் பகுதியில் இருந்த குதிரைப்பந்தய மைதானத்தில் இறக்க முயன்றார். ஆனால் விமானம் முழுமையாக கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் தறிகெட்டு சென்ற அந்த விமானம், அதன் அருகிலேயே இருந்த பி.ஜே. மருத்துவக்கல்லூரி விடுதி கட்டிடத்தில் விழுந்தது.. விமானம் நிறைய வெள்ளை பெட்ரோலுடன் இருந்ததால், விமானம் சுவரில் மோதிய வேகத்தில், அடுத்த ஒரு நிமிடத்தில் வெடித்து சிதறியது.
விஜய் ரூபானி
இந்த கோர விபத்தில் விமானத்தில் இருந்த 241 பேரும், மருத்துவக் கல்லூரி விடுதிக்கட்டிடத்தில் இருந்த 5 மருத்துவ மாணவர்கள் மற்றும் அந்த மருத்துவக்கல்லூரி வளாகத்தில் இருந்த 19 பேர் என 265 பேர் உயிரிழந்தனர். இறந்தவர்களில் குஜராத் மாநில முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியும் ஒருவர் ஆவார்.
நம்ப முடியவில்லை
மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் விஸ்வாஸ் குமார், நலமுடன் இருந்தாலும், இன்னமும் அதிர்ச்சியில் இருக்கிறார். அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "நான் உயிருடன் இருப்பதை என்னால் இன்னுமே நம்பவே முடியவில்லை. எனது இருக்கை அவசரகால வெளியேற்ற பகுதி அருகே இருந்தது. விமானம் வெடித்ததும் நான் இருந்த பகுதியில் விரிசல் ஏற்பட்டிருந்தது. அதன் வழியாக கீழே குதித்துவிட்டேன். குறைந்த உயரம் இருந்ததாலும், விமானம் மோதிய பகுதி மணல் பரப்பாக இருந்ததாலும் எனக்கு அதிக காயம் ஏற்படவில்லை. அதே நேரம் எனக்கு கையில் தீக்காயம் ஏற்பட்டது.
பலரால் தப்பிக்க முடியாது
அதேநேரம் என்னுடைய அண்ணனும், விமானத்தில் இருந்தவர்களும் என் கண்முன்னே பலியானது இன்னும் என் நெஞ்சை விட்டு அகலவில்லை. விமானத்தின் மற்றொரு எமர்ஜென்சி இருக்கை அமைந்த பகுதியில் கட்டிடத்தின் சுவர் இருந்ததால் பலரால் தப்பிக்க முடியாமல் போனது" என்று விஸ்வாஸ் குமார் நேற்று பேட்டியின் போது கூறினார்.
விஸ்வாஸ் குமார் தப்பியது எப்படி
விஸ்வாஸ் குமார் உயிர் தப்பியதற்கு அவரது இருக்கை முக்கிய காரணமாக இருந்தது. விஸ்வாஸ் குமார் எகானமி கிளாஸில் பயணித்தார். அந்த விமானத்தில் '11ஏ' என்ற இருக்கையில் இருந்தார். அந்த வகுப்பின் முதல் வரிசையில் உள்ள 6 இருக்கைகளில் '11ஏ' இருக்கை வரைபடத்தின்படி, அவசரகால வெளியேறும் கதவுக்கு அருகில் உள்ள ஜன்னல் பகுதியில் அமைந்திருந்தது. எனவேதான் விமானம் விபத்துக்குள்ளானதும், அவசரகால கதவுகளில் விரிசல் ஏற்பட்டு இருக்கிறது. அதன் மூலம் விஸ்வாஸ் குமார் கீழே குதித்து உயிர் தப்பி உள்ளார்.
சுவரால் நடந்த சிக்கல்
அதேநேரம் விமானத்தில் இரண்டு பக்கமும் எமெர்ஜென்சி வழிகள் உள்ளது. மற்றொரு வழியில் சுவர் இருந்திருக்கிறது. கதவு திறந்தாலும் சுவர் ஒட்டியிருந்ததால் யாராலும் அந்த வழியாக குதிக்க முடியவில்லை.. விஸ்வாஸ் குமார் கூறியதை பார்க்கும் போது, விமானம் மோதிய உடன் வெடிக்கவில்லை.. குறைந்தது ஒரு நிமிடமாவது ஆகியிருக்கும் என்று கூறப்படுகிறது. அந்த நிமிடத்தில், நொடி கூட தாமதிக்காமல், மின்னல் வேகத்தில் குதித்துள்ளார். மற்றவர்கள் ஜன்னல் அருகில் இல்லாதது, மற்றும் சீட்டில் அடிபட்ட நிலையில், என்ன நடக்கிறது என்று யோசிக்க முடியாத நிலையில் பரிதவித்து சிக்கியுள்ளனர். அதேபோல் இன்னொரு எமெர்ஜென்சி வழியில் சுவர் இருந்ததால் பலரும் சிக்கி கொள்ள காரணமாக இருந்திருக்கிறது என்பதை விஸ்வாஸ் குமார் பேட்டியின் மூலம் அறிய முடிகிறது.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி












Click it and Unblock the Notifications