பாலியல் டார்ச்சர் புகார், விவகாரத்து- அங்க மகளிர் இடஒதுக்கீடு மசோதா மீது முழங்கிய ஓபி ரவீந்திரநாத்!
டெல்லி: பாலியல் டார்ச்சர் புகார், விவகாரத்து மனு என சர்ச்சைகளில் சிக்கி இருக்கும் அதிமுக லோக்சபா எம்.பியும் முன்னாள் தமிழ்நாடு முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனுமாகிய ஓபி ரவீந்தரநாத் இன்று லோக்சபாவில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா மீதான விவாதத்தில் பெண் உரிமையை வலியுறுத்தி பேசினார்.
காரைக்குடி காயத்ரி புகார்: சென்னை போலீஸ் கமிஷன்ர் அலுவலகத்தில் ஆகஸ்ட் 1-ந் தேதியன்று காரைக்குடி காயத்ரி என்ற பெண் ஒரு புகார் கொடுத்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்தார். அந்த சந்திப்பில், அண்ணன் போல நினைத்து உறவாக பழகினோம். ஆனால் விவகாரத்துக்குப் பின்னர் வாட்ஸ் அப் காலில் ஆபாசமாக பேசி பாலியல் தொந்தரவு செய்கிறார் என ஒரு புகார் வாசித்தார். அந்தப் புகாருக்குள்ளானவர் ஓபி ரவீந்திரநாத் எம்.பி. ஆம் அதிமுகவின் ஒற்றை லோக்சபா எம்.பி. ரவீந்திரநாத்.

கொலை மிரட்டல்: இது தொடர்பாக ரவீந்திரநாத் மனைவி ஆனந்தியிடம் முறையிட்டதாகவும் ஊடகங்களில் சொல்லப் போகிறேன் என சொன்னதால் கொலை மிரட்டல் விடுக்கிறார் எனவும் பகிரங்கமாக ஓபி ரவீந்திரநாத் மீது குற்றம் சாட்டினார் காரைக்குடி காயத்ரி.
விவாகரத்து மனு: ஏற்கனவே உச்ச இயக்குநர் ஒருவர் மனைவி கணவரை விவாகரத்து செய்த விவகாரத்திலும் ஓ.பி. ரவீந்திரநாத் தலை உருண்டது. இந்நிலையில் ஓபி ரவீந்திரநாத் மனைவி ஆனந்தியை விவாகரத்து செய்யப் போவதாக அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு: இப்படி சர்ச்சைகளுக்குள் சிக்கிய ஓபி ரவீந்திரநாத் இன்று லோக்சபாவில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா மீதான விவாதத்தில் அதிமுக உறுப்பினராக பங்கேற்று பெண்கள் உரிமை குறித்து முழக்கமிட்டார். தமிழ்நாட்டில் கள்ளிப் பால் கொடுத்து பெண் சிசுக்கள் படுகொலை செய்யப்பட்டது, ஜெயலலிதாவின் தொட்டில் குழந்தை திட்டம், தாலிக்கு தங்கம் திட்டம் உள்ளிட்டவைகளைப் பற்றி ஜெயலலிதாவின் புகழ் பாடினார். பெண்கள் மேம்பாடு, உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கான இடஒதுக்கீடு குறித்தும் சுட்டிக்காட்டினார் ஓபிஎஸ் ரவீந்திரநாத். முடிக்கும் போது பிரதமர் மோடியின் மகளிர் மேம்பாட்டுத் திட்டங்களைப் பாராட்டினார். ஓபிசி பெண்களுக்கும் உள் இடஒதுக்கீடு வழங்கவும் வலியுறுத்தினார் ரவீந்திரநாத்குமார். கடைசியாக அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், அம்மா விஜயலட்சுமி சார்பாக மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை ஆதரிப்பதாக கூறி முடித்தார் ரவீந்திரநாத்.












Click it and Unblock the Notifications