ஹெலிகாப்டர் விபத்தில் மகன் இறந்த செய்தி கேட்டு மயங்கி விழுந்த தாய்!.. கடைசியாக பேசியதை எண்ணி கதறல்
டெல்லி: ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த விங் கமாண்டர் பிஎஸ் சவுஹான் செவ்வாய்க்கிழமை இரவு தனது குடும்பத்தினருடன் பேசியதுதான் கடைசி என நினைத்துக் கூட பார்க்கவில்லை என அவரது தாய் கண்ணீர் விட்டு கதறினார்.
நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் சிக்கிய எம்ஐ 17 வி 5 ரக ஹெலிகாப்டரின் விங் கமாண்டர் பி.எஸ்.சவுஹானும் இறந்தார். இவர் தனது குடும்பத்தினருடன் செவ்வாய்க்கிழமை அன்று பேசியுள்ளார்.

மனைவி
உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவை சேர்ந்தவர். இவருக்கு மனைவி, 12 வயது மகள், 9 வயது மகன் ஆகியோர் உள்ளனர். இவர் மனைவி, குழந்தைகளை பிரிந்து தனது தாய் சுஷீலாவுடன் வசித்து வந்தார். இவரது குடும்பத்தில் 5ஆவதுமகன் இவர். அதுவும் ஒரே மகன். இவருடன் 4 மூத்த சகோதரிகள் உள்ளனர்.

ரேவா
மத்திய பிரதேச மாநிலத்தில் ரேவா பள்ளியில் படித்த இவர் 2000 ஆம் ஆண்டு விமான படையில் சேர்ந்தார். இவருக்கு 2007ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவரது மறைவால் அவரது குடும்பமே நிலைக்குலைந்துள்ளது. இவரது இறப்பு செய்தியை டிவியில் பார்த்து தெரிந்து கொண்ட அவரது தாய் மயங்கி விழுந்தார்.

31 ஆண்டுகள்
சவுஹான் குறித்து அவரது மூத்த சகோதரி மீனா சிங் கூறுகையில் 31 ஆண்டுகளுக்கு பிறகு எனது தம்பியை ரக்ஷாபந்தனின் போது பார்த்தேன். சகோதரிகளாகிய எங்களை அவருக்கு மிகவும் பிடிக்கும். நாங்கள் எது கேட்டாலும் வாங்கிக் கொடுத்துவிடுவார் என்றார். மகன் இறந்த செய்தியை கேட்டு சவுஹானின் தந்தை சுரேந்திர சிங் செய்வதறியாது திகைத்துள்ளார்.
Recommended Video

நினைத்து பார்க்கும் தாய்
இதுகுறித்து அவரது தாய் சுஷீலா கூறுகையில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு என்னுடன் சவுஹான் பேசினார். ஆனால் அதுதான் கடைசி பேச்சு என எனக்கு தெரியவில்லை என கண்ணீர் மல்க தெரிவித்தார். அவரது பேசியதை மீண்டும் மீண்டும் நினைத்து பார்ப்பதாகவும் சுஷீலா தெரிவித்தார்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications