இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம்! விமான பயணிகளுக்கு ஏர் இந்தியா அறிவுறுத்தல்
டெல்லி: இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வரும் நிலையில் விமான பயணிகள் தங்கள் விமானம் புறப்படும் நேரத்திற்கு 3 மணி நேரத்திற்கு முன்பே விமான நிலையங்களுக்கு வந்துவிடுமாறு ஏர் இந்தியா அறிவுறுத்தியுள்ளது.
ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானில் பயங்கரவாதிகளின் பயிற்சி முகாம்கள் தரைமட்டமாக்கப்பட்டன. இந்த வெற்றியை இந்தியா கொண்டாடி வருகிறது.

இந்த நிலையில் இதை சகித்து கொள்ள முடியாத பாகிஸ்தான் பொதுமக்கள் இருக்கும் இடங்களை குறி வைத்து தாக்கும் பொருட்டு டிரோன் தாக்குதல் நடத்தியது. ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தான், பஞ்சாப் உள்ளிட்ட பகுதிகளில் பாகிஸ்தானின் டிரோன் தாக்குதல்களை, நமது இந்தியாவின் வான் பாதுகாப்பு கவசம், அடித்து நொறுக்கியது.
இந்த நிலையில் ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட பகுதிகளில் பாகிஸ்தான் எல்லையில் உள்ள நகரங்களில் பிளாக் அவுட் என சொல்லப்படும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அந்த பகுதிகளில் சைரன்கள் கேட்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.
இந்தியாவின் எல் 70 பாதுகாப்பு கவசமானது பாகிஸ்தானின் டிரோன்களை துவம்சம் செய்தது. இதையடுத்து அறிவிக்கப்படாத போரை நிறுத்துமாறும் இல்லாவிட்டால் பெரிய விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் இந்தியா, பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்தும் பாகிஸ்தான் கேட்டபாடில்லை.
இதனால் அதற்கான விலையை கொடுத்து வருகிறது. பாகிஸ்தானின் வான் பாதுகாப்புகளை இந்தியா அழித்து விட்டது. அது ஏவிய டிரோன்களையும் இந்தியா வழிமறித்து தாக்கி ஒன்றும் இல்லாமல் ஆக்கியது.
இந்த நிலையில் பிரதமர் மோடியுடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அது போல் முப்படைகளின் அதிகாரிகளுடன் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தினார்.
ஜம்மு காஷ்மீர், பஞ்சாப் உள்ளிட்ட இடங்களில் உள்ள விமான நிலையங்கள் மூடப்பட்டன. மேலும் எஞ்சியிருக்கும் சில விமான நிலையங்களுக்கு வரும் பயணிகள் தீவிர சோதனைக்குள்ளாக்கப்படுகிறார்கள்.
இதனால் விமான பயணிகளுக்கு ஏர் இந்தியா ஒரு அறிவுறுத்தலை விடுத்துள்ளது. அதாவது இந்தியா- பாகிஸ்தான் இடையே பதற்றம் நீடித்து வருவதால் விமான நிலையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
எனவே விமானம் புறப்படும் நேரத்திற்கு 3 மணி நேரத்திற்கு முன்பே விமான நிலையங்களுக்கு வருமாறும் விமானம் புறப்படும் 75 நிமிடங்களுக்கு முன்பு செக் இன்கள் மூடப்படும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications