ஏர் இந்தியா, இண்டிகோ விமான நிறுவனங்கள் எடுத்த முடிவு.. பெங்களூர், மும்பை பயணிகளுக்கு அதிர்ச்சி
டெல்லி: அமெரிக்கா - ஈரான் போரால் விமான எரிபொருள் விலை ஒரு லிட்டருக்கு ரூ.1 லட்சம் வரை உயர்ந்துள்ளது. இதனால், ஏர் இந்தியா, இண்டிகோ ஆகிய நிறுவனங்கள் வரும் 1 ஆம் தேதி முதல் மூன்று மாதங்களுக்கு உள்நாட்டு விமான சேவைகளை குறைக்க முடிவு செய்துள்ளன.
இந்த விமான சேவை குறைப்பால் பெங்களூர் மும்பை உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் பயணிகளே கடும் சிரமத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று விமான போக்குவரத்து துறை வட்டாரங்கள் கூறுகின்றன.

சேவைகளை குறைக்கும் விமான நிறுவனங்கள்
மேற்காசிய போர் காரணமாக சர்வதேச அளவில் எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்தியாவிலும் எரிபொருள் விலை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. விமானங்களுக்கு பயன்படுத்தப்படும் ஏவியேஷன் எரிபொருள் விலையும் 25 சதவீதம் அளவுக்கு கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால், ஏற்படும் செலவுகளை சமாளிக்க விமான சேவைகளை குறைக்கும் பணியில் விமான நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.
அந்த வகையில், ஏர் இந்தியா, இண்டிகோ, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஆகிய நிறுவனங்கள் சுமார் 250 க்க்கு மேற்பட்ட உள்நாட்டு விமான சேவைகளை வரும் ஜூன் 1 முதல் குறைக்க உள்ளன. ஜூன் முதல் ஆகஸ்ட் வரை இந்த விமான சேவை குறைப்பு நீடிக்கும் என்று சொல்லப்படுகிறது. கோடை காலம் என்பதால், பயணிகள் பலரும் குடும்பத்துடன் சுற்றுலா சென்று வரும் நிலையில் விமான சேவை குறைப்பு என்பது அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
110 சேவைகளை குறைக்கும் இண்டிகோ
ஏர் இந்தியா நிறுவனம் தனது சேவையில் சுமார் 22 சதவீதம் குறைக்க திட்டமிட்டுள்ளது. ஏர் இந்தியா நிறுவனம் சுமார் 500 உள்நாட்டு விமானங்களை இயக்கி வரும் நிலையில், 110 விமானங்களின் சேவை குறைக்கப்படும் என்று தெரிகிறது. இண்டிகோ நிறுவனம் தினமும் 2,200 விமானங்களை இயக்கி வருகிறது. 5 - 7 சதவீதம் இந்த நிறுவனம் குறைக்க திட்டமிட்டுள்ளது. இதன்படி, 110 விமானங்களின் சேவை குறைக்கப்படும்.
ஏர் இந்தியாவின் துணை நிறுவனமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் 10 சதவீதம் குறைக்க திட்டமிட்டுள்ளது. இதன்படி, 340 விமான சேவைகள் குறைக்கப்பட உள்ளன. இந்த விமான சேவை குறைப்பு காரணமாக மும்பை, டெல்லி, பெங்களூர் ஆகிய நகரங்கள் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளன.
மும்பை, டெல்லி, பெங்களூர்
நாட்டின் மிக முக்கிய நகரங்கள் என்பதால் மும்பை, டெல்லி, பெங்களூருக்கு தொழில், வணிகம் என பல்வேறு காரணங்களுக்காக தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வருகை தருவதும், அங்கிருந்து கிளம்புவதும் என எப்போதும் பரபரப்பாக காணப்படும். தற்போது சேவை குறைப்பால் பயணிகளுக்கு டிக்கெட் கிடைப்பதில் சிக்கல் ஏற்படலாம்.
மும்பையில் இருந்து இயக்கப்படும் ஜெய்ப்பூர், கோவா, பெங்களூர், ஹைதராபாத், சென்னை, அகமதாபாத், நாக்பூர், பாட்னா மற்றும் போபால் நகரங்களுக்கான விமான சேவைகளின் எண்ணிக்கை குறைக்கப்பட உள்ளது. அதேபோல், டெல்லியில் இருந்து கோவா, மும்பை, பெங்களூர், ஹைதராபாத், சென்னை, அகமதாபாத், லக்னோ, கொச்சி மற்றும் கொல்கத்தா நகரங்களுக்கு இயக்கப்படும் விமான சேவைகளும் பாதிக்கப்பட உள்ளன.
ஏர் இந்தியா அறிக்கை வெளியீடு
இதனால் அந்தந்த நகரங்களுக்கு செல்லும் பாயணிகள் கடும் சிரமத்தை சந்திக்க வேண்டியிருக்கும். இதுகுறித்து ஏர் இந்தியா வெளியிட்ட அறிக்கையில், "எரிபொருள் விலை உயர்வே இந்த தற்காலிக சேவை குறைப்புக்கான முக்கிய காரணம் என தெரிவித்துள்ளது. மேலும், "பயணிகளின் தேவை மற்றும் செயல்பாட்டு சூழ்நிலைகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்" என்றும் நிறுவனம் கூறியுள்ளது.
முன்னதாக கடந்த மாதம், விமான எரிபொருள் (ATF) விலை கடுமையாக உயர்ந்ததால் செயல்பாட்டு செலவுகள் அதிகரித்து, விமான சேவைகளை நடத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்கள் கோரிக்கை விடுத்து இருந்தது நினைவிருக்கலாம்.
-
சமாளிக்க முடியல சாமி.. ஏர் இந்தியா, இண்டிகோ எடுத்த ஷாக் முடிவு.. ஜூன் 1 முதல் விமானங்கள் ரத்து! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!














Click it and Unblock the Notifications