மிஸ்ஸாகும் பிளாக் பாக்ஸ் டேட்டா! மொத்தமாக முடங்கிய எலக்டிரிக் சிஸ்டம்! ஏர் இந்தியா விபத்து.. புது தகவல்
டெல்லி: கடந்த ஜூன் 12ம் தேதி ஏர் இந்தியா விமானம் விபத்தில் சிக்கியது. இந்த விபத்து தொடர்பான விசாரணை நடந்து வரும் நிலையில், இடையில் இதற்கு விமானியின் தவறு காரணமாக இருக்கலாம் எனத் தகவல் வெளியானது. இதற்கிடையே இப்போது கூடுதல் தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது இதற்கு விமானி காரணம் இல்லை என்றும் விமானியின் கட்டுப்பாட்டை மீறி திடீரென ஏற்பட்ட மின்சாரக் கோளாறு இதற்குக் காரணமான இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
ஏர் இந்தியா விபத்து தொடர்பான இடைக்கால அறிக்கை சமீபத்தில் வெளியானது. அதில் விமானியின் தவறு காரணமாக இந்த விபத்து நடந்திருக்கலாம் எனச் சொல்லப்பட்டு இருந்தது. இது பெரும் பரபரப்பைக் கிளப்பியிருந்தது. இதற்கிடையே இதற்கு விமானியின் தவறு காரணம் இல்லை என்பது போன்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

எலக்டிரிக் சிக்கல்
அதாவது விமானத்தின் கருப்பு பெட்டி டேட்டா ரெக்கார்டர் பதிவுகள் விபத்திற்குச் சற்று நேரத்திற்கு முன்பு நின்று போனது. அதாவது RAT எனப்படும் ராம் ஏர் டர்பைன் பயன்படுத்தப்பட்டதும் வீடியோவில் தெளிவாகத் தெரிகிறது. இதை எல்லாம் வைத்துப் பார்க்கும் போது எலக்டிரிக் பிரச்சினை அல்லது Thrust lever மாறுபட்ட நிலை ஏற்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது. அதாவது ஏர் இந்தியா விபத்திற்கு அடுத்தடுத்து நிகழ்ந்த பல விஷயங்கள் காரணமாக இருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது.
எரிபொருள் சுவிட்ச் சோதனைகளைத் தவிர, போயிங் 787 சென்சார்கள் மற்றும் மின்சாதனங்களிலும் ஏர் இந்தியா சோதனைகளை நடத்தியுள்ளது. இதை அந்த நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
எச்சரிக்கை
விமானத்தின் முன்பகுதியில் இருந்த காக்பிட் வாய்ஸ் ரெக்கார்டர் சேதமடையாமல் பதிவுகளைக் கொண்டு இருந்தது. அதே சமயம், வால் பகுதியில் இருந்த விமானத்தின் கருப்புப் பெட்டியான ஏஃப்ட் ஃப்ளைட் டேட்டா ரெக்கார்டர் (EAFR) எரிந்துபோய் அதிலிருந்த தரவுகள் கிடைக்கவில்லை. கருப்புப் பெட்டிகள் 1,100°C வரையிலான தீயையும், 3,400 g வரையிலான அதிர்ச்சியையும் தாங்கும் திறன் கொண்டவை. அப்படி இருக்கையில், கருப்புப் பெட்டி சேதமடைந்திருப்பது ஒரு எச்சரிக்கை மணி என்றே சொல்ல வேண்டும்.
எரிபொருள் சுவிட்சுகளை இயக்குவதற்கு முன்பே ராட் இயக்கப்பட்டதற்கான காரணம், விமானத்தில் ஆரம்பத்திலேயே ஏற்பட்ட முழுமையான மின்சார செயலிழப்பைக் குறிக்கிறது. இதன் காரணமாகக் கூட EAFR விபத்துக்கு முன்பே பதிவை நிறுத்தி இருக்கலாம். அதுமட்டுமின்றி, லித்தியம் அயன் பேட்டரி தீப்பிடித்ததற்கான சாத்தியக்கூறுகளும் உள்ளன. ஒரு ரெக்கார்டர் செயலிழந்துவிட்டது. மற்றொன்று மனித தவறுகள் எதுவும் இல்லை என்று காட்டுகிறது. விமானிகள் செயல்படுவதற்கு முன்பே விமானம் சக்தியை இழந்தது. இது விபத்திற்குக் காரணமாக இருக்கலாம்.
ராட் செயல்பாடு
RAT எனப்படும் அவசரக்கால மின்னாக்கி 1:38:39-40 மணிக்கு இயக்கப்பட்டிருக்க வேண்டும். என்ஜின் 1-க்கான எரிபொருள் சுவிட்ச் 1:38:42 மணிக்கு ரன் பொசிஷனில் இருந்து கட் ஆஃப் பொசிஷனுக்கு மாற்றப்பட்டது. என்ஜின் 2-க்கான எரிபொருள் சுவிட்ச் 1:38:43 மணிக்கு ரன் பொசிஷனில் இருந்து கட் ஆஃப் பொசிஷனுக்கு மாற்றப்பட்டது. RAT ஆனது 1:38:47 மணிக்கு ஹைட்ராலிக் பவரை உற்பத்தி செய்யத் தொடங்கியது. என்ஜின் 1-க்கான எரிபொருள் சுவிட்ச் 1:38:52 மணிக்கு மீண்டும் ரன் பொசிஷனுக்கு மாற்றப்பட்டது. என்ஜின் 2-க்கான எரிபொருள் சுவிட்ச் 1:38:56 மணிக்கு மீண்டும் ரன் பொசிஷனுக்கு மாற்றப்பட்டது.
RAT என்பது ஒரு பேக்கப் அவசரக்கால ஜெனரேட்டர் எனச் சொல்லலாம். என்ஜின்கள் செயலிழந்தால் மட்டும் இது தானாக இயங்காது. விமானம் மின்சார சக்தியை இழக்கும்போதுதான் இது இயங்கும். எனவே, RAT இயக்கப்பட்டால், விமானம் எஞ்சின் பிரச்சனை மட்டுமல்லாமல், விமானத்தில் எலக்ட்ரிக்கல் பெயிலியர் ஏற்பட்டுள்ளது என்று அர்த்தம்!
அதே கருத்து
விபத்தில் உயிர் பிழைத்த விஸ்வாஸ் குமார் ரமேஷ் (40) கூறிய கருத்துகளும் இத்தோடு ஒத்துப் போகிறது. அதாவது விமானம் புறப்பட்ட சில நொடிகளில் கேபின் விளக்குகள் பச்சை மற்றும் வெள்ளை நிறத்தில் ஒளிரத் தொடங்கியதாகக் கூறியுள்ளார். இது RAT இயக்கப்பட்ட நேரத்தையும், மின்சாரக் கோளாறையும் உறுதிப்படுத்துகிறது. விமானிகள் எந்த நடவடிக்கையும் எடுப்பதற்கு முன்பே இந்த எலக்ட்ரிக்கல் பெயிலியர் ஏற்பட்டுள்ளதையே இது காட்டுகிறது. எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சுகளை இயக்குவதற்கு முன்பே விமானம் இரண்டு எஞ்சின் ஜெனரேட்டர்களையும் இழந்துவிட்டது இதன் மூலம் தெளிவாகத் தெரிகிறது.
மேலும், விமானத்தின் வால் பகுதியில் எந்த சேதமும் ஏற்படாத நிலையில், பின்புற EAFR சேதமடைந்துள்ளதற்கான காரணம் என்ன? வால் பகுதிக்குள் இருந்த துணை மின் உற்பத்தி கருவி (APU) அப்படியே மீட்கப்பட்டது. ஆனால், அந்தப் பகுதியில் இருந்த ஏஃப்ட்-EAFR எரிந்த நிலையில் இருந்ததாகவும், தரவுகளைப் பதிவிறக்கம் செய்ய முடியவில்லை என்றும் ஏஏஐபி அறிக்கை வெளியிட்டது.
விடை தெரியாத கேள்விகள்
எஞ்சின்கள் உண்மையில் எப்போது சக்தியை இழந்தன என்பது தெரியவில்லை. எரிபொருள் வால்வு எப்போது மூடப்பட்டது என்பது மட்டுமே தெரிய வருகிறது. எரிபொருள் சுவிட்சுகள் நகர்த்தப்பட்டதா அல்லது தவறான சென்சார் காரணமாகத் தானாகவே ஷட் டவுன் ஆனதா என்பதும் தெரியவில்லை. EAFRஇல் டேட்டா பதிவாகாமல் போக என்ன காரணம் என்றும் தெரியவில்லை. VHF வாய்ஸ் கம்யூனிகேஷன் இருந்தபோதிலும், விமானத்தின் ACARS மற்றும் SATCOM தரவுகளுக்கு என்ன ஆனது என்பதும் தெரியவில்லை.
மனித தவறு இல்லை
சுவிட்சுகள் இயக்கப்பட்டது எல்லாமே ஒரு நொடிக்குள் நடந்துள்ளது. இவ்வளவு சீக்கிரம் மனிதர்களால் இயக்கவே முடியாது என்றே வல்லுநர்கள் கூறுகிறார்கள். பைலட்கள் என்ஜின்கள் மீண்டும் இயங்க முயன்றபோது, அதில் மீண்டும் எரிபொருள் இருந்துள்ளது. தவறான சென்சார்கள் காரணமாக சுவிட்ச்கள் ஆஃப் ஆவது இதற்கு முன்பும் நடந்துள்ளது. இதை வைத்துப் பார்க்கும்போது இதற்கு பைலட் தவறு காரணம் இல்லை என்பதைச் சொல்ல முடிகிறது.












Click it and Unblock the Notifications