மழைமேகத்தால் இந்திய விமானங்கள் தப்பியது... மோடி சொன்னது உண்மை.. விமானப்படை தளபதி ஒப்புதல்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    PM Modi Interview: ஏதோ நினைத்து.. ஏதோ பேசி நெட்டிசன்களிடம் சிக்கிய மோடி- வீடியோ

    டெல்லி: பிரதமர் மோடி சொன்னது உண்மை தான் என்றும்,. மழை மேகங்கள் சூழ்ந்ததால்தான் பாகிஸ்தான் ரேடார் கண்காணிப்பில் இருந்து இந்திய விமானங்கள் எளிதில் தப்பியது என்று மேற்கு பிராந்திய விமானப்படை தளபதி ரகுநாத் நம்பியார் தெரிவித்துள்ளார்.

    புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானின் பால்கோட் பகுதியில் இந்திய விமானங்கள் எப்படி தாக்குதல் நடத்தின என்பது பற்றி தொலைக்காட்சி ஒன்றுக்கு பிரதமர் மோடி விளக்கம் அண்மையில் அளித்தார்.

    air marshal Raghunath nambiar accept modis statement about balakot strikes

    அப்போது பேசிய பிரதமர் நரேந்திர மோடி, பால்கோட்தாக்குதலுக்கு திட்டமிட்ட அன்று பாகிஸ்தான் பகுதியில் மழை மேகங்கள் அதிகமாக சூழ்ந்து மோசமான வானிலை நிலவியது. இதனால் திட்டமிட்டபடி தாக்குகுதல் நடத்தலாமா என்று என்னிடம் விமானப்படை அதிகாரிகள் கேட்டனர். நான் மழைமேகங்கள் பாகிஸ்தான் ரேடார் கண்காணிப்பில் இருந்து நமது போர் விமானங்களை காக்கும் என்று கூறி தாக்குதலுக்கு அனுப்பி வைத்தேன் என்றார்.

    இந்த பேச்சை கிண்டல் செய்த ராகுல் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள், மழை வந்தால் எப்படி ரேடாரில் விமானங்கள் தெரியாமல் போகும் என கிண்டல் செய்தார்கள். மேலும் இந்தியாவில் மழை வரும்போதெல்லாம் நமது விமானங்கள் எல்லாம் ரேடாரில் இருந்து மறைந்து போகுமா என்றும் கேள்வி எழுப்பினார்கள்.

    இந்நிலையில் கார்கில் போரில் வீரமரணம் அடைந்த விமாப்படை விமானி அஜெய் அஹுஜாவிற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி பஞ்சாபில் நடந்தது. அப்போது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மேற்கு பிராந்திய தளபதி ரகுநாத் நம்பியார் செய்தியாளர்களிடம் பேசுகையில், மழை மேகங்கள் சூழ்ந்ததால்தான் பாகிஸ்தான் ரேடார் கண்காணிப்பில் இருந்து இந்திய விமானங்கள் எளிதில் தப்பியது என்ற மோடியின் கருத்து உண்மை தான் என்றார். மேலும் அடர்த்தியான மழை மேகங்கள் வானில் சூழ்ந்து இருக்கும் போது ரேடாரால் விமானங்களை துல்லியமாக கண்டுபிடிக்க முடியாது என்றார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+