மூச்சுத்திணறுதே.. அதிகரிக்கும் காற்று மாசுபாட்டால் அலறும் டெல்லி.. செயற்கை மழைக்கு மெகாபிளான்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தான் காற்று மாசுபாட்டை குறைக்க 2 நாட்கள் டெல்லியில் செயற்கை மழையை பெய்விக்க ஆம்ஆத்மி அரசு திட்டமிட்டுள்ளது.

இந்தியாவின் தலைநகரான டெல்லி கடும் காற்று மாசுபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரமாக டெல்லியில் காற்று மாசுபாடு என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதாவது டெல்லியின் காற்று தரக்குறியீடு என்பது 400க்கும் அதிகமாகி உள்ளது.

Air Pollution: Aam Aadmi Government Plan to Make Artificial Rain in Delhi on November 20, 21

இது ஒரு பெரிய பிரச்சனையாக உள்ளது. ஏனென்றால் மாசுபட்ட காற்றை மக்கள் சுவாசிப்பதால் மூச்சுத்திணறல் உள்பட சுவாசம் சார்ந்த பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடும். தற்போது ஒரு வாரமாக அதிகரித்துள்ள காற்று மாசுபாட்டால் அங்குள்ள மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

டெல்லியில் திடீரென அதிகரித்த காற்று மாசுபாட்டுக்கு பஞ்சாப்பில் பயிர் கழிவுகளை எரிப்பது தான் முக்கிய காரணம் என கூறப்படுகிறது. அண்டை மாநிலமான பஞ்சாப்பில் பயிர் கழிவுகளை எரிப்பதால் ஏற்படும் புகை காற்றை மாசுபடுத்துவதாக குற்றச்சாட்டு உள்ளது. இதற்கிடையே தான் டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தி மக்களை காக்க வேண்டும் என பல மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் மீது தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த விசாரணையின்போது மத்திய அரசு, டெல்லி அரசு, பஞ்சாப் அரசை உச்சநீதிமன்றம் கடுமையாக சாடியது. டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தி மக்களை காக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த விபரங்களை உடனே தாக்கல் செய்ய வேண்டும். அதோடு டெல்லி காற்று மாசுபாட்டை விரைந்து கட்டுப்படுத்துவதற்கான புதிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஏனென்றால் காற்று மாசுபாட்டால் மக்கள் உடல்நலம் பாதிப்பதை ஏற்க முடியாது என உச்சநீதிமன்றம் சாடியிருந்தது.

இந்நிலையில் தான் டெல்லியில் காற்று மாசுபாட்டை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கையை ஆம்ஆத்மி அரசு மேற்கொண்டு வருகிறது. இதுதொடர்பாக டெல்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் மற்றும் நிதி அமைச்சர் அதிஷி ஆகியோர் கான்பூர் ஐஐடியுடன் ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தி உள்ளனர். இந்த கூட்டத்தில் செயற்கை மழையை பெய்ய வைத்தால் டெல்லியில் காற்று மாசுபாட்டை குறைக்கலாம் என்ற ஆலோசனை கூறப்பட்டது.

இதையடுத்து செயற்கை மழையை பெய்ய வைப்பது தொடர்பான விரிவான திட்டத்தை கான்பூர் ஐஐடியிடம் ஆம்ஆத்மி அரசு கேட்டுள்ளார். அதன்பிறகு டெல்லியில் நவம்பர் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் செயற்கை மழையை பெய்விக்க முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம்ஆத்மி அரசு திட்டமிட்டுள்ளது.

மேலும் டெல்லியில் செயற்கை மழையை உருவாக்க வேண்டும் என்றால் 40 சதவீதம் அளவுக்கு வாகனம் மேகமூட்டத்துடன் இருக்க வேண்டும். அதன்படி பார்த்தால் நவம்பர் 20, 21 ஆகிய தேதிகளில் டெல்லியில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளதால் அன்றயை தினம் செயற்கை மழையை பெய்விக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் உச்சநீதிமன்றத்தில் நாளை டெல்லியில் காற்று மாசுபாட்டை தடுப்பது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வர உள்ளது. அப்போது இந்த திட்டத்தை டெல்லி அரசு உச்சநீதிமன்றத்தில் கூற உள்ளது. அதற்கு நீதிமன்றம் அனுமதி அளிக்கும் பட்சத்தில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுவாக செயற்கை மழை என்பது ரசாயனங்கள் உதவியுடன் உருவாக்கப்படும். அதாவது சில்வர் அயோடைடு, ட்ரை ஐஸ், ராக் சால்ட் உள்ளிட்டவற்றை 40 சதவீத அளவில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும்போது மேகத்தின் மீது தூவுவார்கள். இது மேகத்தின் அடர்த்தியை அதிகரித்து மழையை கொடுக்கும்.

இந்த செயற்கை மழையை உருவாக்க ஒவ்வொரு ஒரு மணி நேரத்துக்கும் சுமார் ரூ.3 முதல் ரூ.5 லட்சம் வரை செலவாகும் என கூறப்படுகிறது. மேலும் இந்த செயற்கை மழையை உருவாக்குவது ஒன்றும் புதிதல்ல. இதனை அமெரிக்கா, சீனா உள்ளிட்ட பிற நாடுகள் கையாண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+