பற்றி எரியும் ஈரான்.. ஆனாலும் காற்றின் தரம் டெல்லியை விட சூப்பரா இருக்கே எப்படி? காரணம் இதுதான்
டெல்லி: ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் ஏவுகணை, ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் தலைநகர் டெஹ்ரான் உள்பட பல நகரங்கள் பற்றி எரிந்து புகை மண்டலமாக மாறி உள்ளது. இருப்பினும் கூட தற்போது வரை ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள காற்றின் தரம் டெல்லியை விட சிறப்பாக உள்ளது தெரியவந்துள்ளது.

ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் போர் புரிந்து வருகின்றன. தலைநகர் டெஹ்ரான் உள்பட பல முக்கிய நகரங்களில் குண்டுகள் வீசப்பட்டு வருகிறது. ஏவுகணைகள், ட்ரோன்கள் ஈரானை தொடர்ந்து தாக்கி வருகின்றன. இதனால் பல இடங்கள் பற்றி எரிந்து புகை மண்டலமாக மாறி வருகின்றன.
ஈரான் முழுவதும் பதற்றம் ஏற்பட்டு வருகிறது. ஈரானும் தொடர்ந்து அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில் தான் தற்போது ஒரு முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
டெல்லியை விட காற்று மாசு குறைவு
அதாவது போர் மேகங்கள் சூழ்ந்த ஈரான் தலைநகர் டெஹ்ரானின் காற்றின் தரம் டெல்லியை விட சிறப்பாக உள்ளது. அங்குள்ள மக்கள் தூய்மையான காற்றை சுவாசித்து வருகின்றனர். அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் என 2 நாடுகள் போரை தொடங்கியும் கூட டெஹ்ரானில் வானம் தெளிவாக உள்ளது. இதனை டேட்டாக்கள் உறுதி செய்துள்ளன.
டெஹ்ரானில் ஏக்யூஐ எனும் காற்று தரக்குறியீடு 50 முதல் 70 என்ற அளவில் உள்ளது. இது நல்ல அல்லது மிதமான காற்று என்பதை குறிக்கும். ஆனால் டெல்லியில் ஏக்யூஐ குறியீடு அடிக்கடி 150யை தாண்டி விடுகிறது. இது மோசமான அல்லது ஆரோக்கியமற்ற காற்றை குறிக்கிறது.
அதெப்படி சாத்தியம்?
டெஹ்ரானில் சுமார் 90 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதலில் எண்ணெய் கிடங்கு சேதமடைந்து கரும்புகை வெளிவந்தாலும் கூட டெல்லியை விட அங்கு காற்றின் தரம் சிறப்பாக இருப்பது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது. அதோடு அதெப்படி, டெல்லியை விட குண்டுவெடிப்புகள் நிகழும் டெஹ்ரானில் காற்றின் தரம் தரமானதாக உள்ளது? என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது.
புவியியல் அமைப்பு
இதற்கு ஈரானின் புவியியல் அமைப்பு, தொழில்துறை செயல்பாடுகள் தான் முக்கிய காரணமாகும். அங்கு காற்றை மாசுபடுத்தும் வகையில் எதுவும் இல்லை. கட்டுமானங்கள், பெரிய பெரிய தொழிற்சாலைகள் இல்லை. இதனால் காற்றை மாசுபடுத்தும் துகள்கள் அதிகளவில் வெளியேறுவது கிடையாது.
டெல்லி மாசுவுக்கு காரணம்
ஆனால், டெல்லியை எடுத்து கொண்டால் உலகிலேயே மிகவும் மாசுபட்ட பகுதிகளில் ஒன்றாக உள்ள இந்தோ - கங்கை சமவெளி பகுதியில் அமைந்துள்ளது. கனரக வாகனங்களின் போக்குவரத்து, கட்டுமான பணிகள், தொழில்துறை மண்டலங்கள் உள்ளிட்டவை டெல்லியின் அருக நிறைந்துள்ளன. இதனால் தான் குண்டுகள் வெடிப்பு நிகழும் டெஹ்ரானை விட டெல்லியில் காற்று மாசுபாடு அதிகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
குவைத் நாட்டில் ஈரானின் வெறியாட்டம்! விமான சேவை மொத்தமாக முடக்கம்.. ஜோர்டானில் மட்டும் 12 ஏவுகணைகள் -
ஈரான் மீது முழு வீச்சில் தாக்குதலை ஆரம்பித்த அமெரிக்கா.. ஹார்முஸ் ஜலசந்தியும் க்ளோஸ்.. ஒரே பதற்றம் -
"ஹார்முஸை நெருங்கினாலே சரமாரி தாக்குதல் நடத்துவோம்.." அச்சுறுத்தும் ஈரான்.. அமைதி ஒப்பந்தம் காலி -
ஈரானுக்கு இனி கெட்ட காலம்.. பீட் ஹெக்செத் பேச்சால் பரபரப்பு..! Hormuz இனி எங்க கண்ட்ரோல்! -
மீண்டும் டிரம்ப் அடித்த பல்டி! "எல்லாம் நல்லா போகுது.. தாக்குதல் கேன்சல்!" உற்று பார்க்கும் ஈரான் -
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
திடீரென மனசு மாறிய டிரம்ப்.. ஈரான் மீதான தாக்குதலை நிறுத்தி உத்தரவு! காரணம் இதுதான் -
நாட்டில் 21 இடங்களுக்கு குறி.. பதம் பார்த்த ஈரான் IRGC ராணுவ படை.. அலறிய அமெரிக்கா! -
"அலறிய அபாய சைரன்.." நடுக்கடலில் தத்தளிக்கும் இந்தியர்கள்.. கப்பல் மீது பாய்ந்த ஏவுகணை.. பதற்றம் -
ஹார்முஸ்-இல் சுட்டு வீழ்த்தப்பட்ட ஹெலிகாப்டர்.. டிரம்ப் கோபம்! ஈரான் மீது அமெரிக்கா பதிலடி தாக்குதல் -
அமெரிக்க தாக்குதலில் இந்திய மாலுமிகள் மாயம்.. துணை தூதரை அழைத்து கண்டித்த மத்திய அரசு! -
"பதிலடி கொடுப்போம்.." நள்ளிரவில் ஈரானுக்கு டிரம்ப் கொடுத்த எச்சரிக்கை.. மீண்டும் வெடிக்க போகுது போர்












Click it and Unblock the Notifications