ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம் முதல் குற்றவாளி.. அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகையில் தகவல்
ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு எதிராக புதிய குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது
டெல்லி: ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு எதிராக புதிய குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது
ஏர்செல் நிறுவனத்தை மிரட்டி, மலேசிய மேக்சிஸ் நிறுவனத்திற்கு பங்குகளை விற்றதாக குற்றச்சாட்டு இருக்கிறது. இதில் 750 கோடி வரை பணப்பரிமாற்றம் நிகழ்ந்து இருக்கிறது என்று புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் இருந்து மாறன் சகோதரர்கள் மட்டும் விடுவிக்கப்பட்டு இருக்கிறார்கள். இன்னும் கார்த்தி சிதம்பரம், ப. சிதம்பரம் மீதான குற்றச்சாட்டுகள் முறையாக நிரூபிக்கப்படாமல் இருக்கிறது.
இந்த வழக்கில் அமலாக்கத்துறை ப. சிதம்பரத்திற்கு ஏற்கனவே சம்மன் அனுப்பியுள்ளது. இந்த வழக்கில் விசாரணையை 6 மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
இதன் காரணமாக சில வாரம் முன் கார்த்தி சிதம்பரத்தின் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி இருக்கிறது. இந்த நிலையில் தற்போது ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு எதிராக புதிய குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது
ஏற்கனவே ப.சிதம்பரத்திற்கு எதிராக துணை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தற்போது அது இல்லாமல் ஏர்செல் மேக்சிஸ் முறைகேட்டிற்கு காரணகர்த்தா ப.சிதம்பரம்தான் என்று கூறி புதிய குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ப.சிதம்பரம், மட்டுமில்லாமல் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட 9 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அஸ்ட்ரோ ஆல் ஆசியா நெட்வொர்க்ஸ், அகஸ்டஸ் ரால்ஃப் மார்ஷல், கார்த்தியின் ஆடிட்டர் எஸ்.பாஸ்கர ராமன், ஏர்செல் நிறுவனத்தின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி வி.ஸ்ரீனிவாசன், ஏர்செல் டெலிவென்சர்ஸ் நிறுவனம், மேக்சிஸ் மொபைல் சர்வீசஸ் ஆகியோர் பெயரும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது.
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications