மைக்ரோசாப்ட் பிரச்சினை.. 2வது நாளாக ஏர்போர்ட்களில் நீடிக்கும் பாதிப்பு.. மத்திய அரசு சொல்வது என்ன?
டெல்லி: மைக்ரோசாப்ட் கோளாறால் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், இன்று நிலமை சற்று மேம்பட்டுள்ளதாக பயணிகள் தெரிவித்தனர். இது குறித்து நேற்று ஏற்பட்ட சிக்கல்கள் சரி செய்யப்பட்டு வருவதாகவும், பிற்பகலுக்குள் அனைத்து செயல்பாடுகளும் சீராகும் என விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மைக்ரோசாப்ட் விண்டோஸ் நிறுவனம் திடீரென முடங்கியதால் உலகெங்கும் பல்வேறு சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்கு உலகம் முழுவதும் 40 கோடிக்கு மேற்பட்ட வாடிக்கையாளர்கள் உள்ளனர். மைக்ரோசாப்டின் 'விண்டோஸ்' இயங்குதளத்தை எண்ணற்ற நிறுவனங்கள் பயன்படுத்தி வருகின்றன. இந்த நிலையில்தான், மைக்ரோசாப்ட் 'விண்டோஸ்' இயங்குதளத்தில் நேற்று திடீரென கோளாறு ஏற்பட்டது.

அதனால் அந்த மென்பொருளை சார்ந்துள்ள தொழில்நுட்ப சேவைகள் அனைத்தும் முடங்கின. இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் இந்த பாதிப்பு உணரப்பட்டது. விண்டோஸ் உடன் இணைந்த சைபர் செக்யூரிட்டி நிறுவனமான க்ரவுட் ஸ்டிரைக் நிறுவனத்தின் அப்டேட் காரணமாகவே இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதைச் சரி செய்யும் முயற்சிகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருவதாகக் கூறப்பட்டது.
மைக்ரோசாப்ட் விண்டோஸ் சர்வர் கோளாறு உலகம் முழுவதும் எதிரொலித்தது. அமெரிக்காவில், யுனைடெட், அமெரிக்கன், டெல்டா ஆகிய விமான நிறுவனங்களின் விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டதாக அமெரிக்க விமான போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. பின்னர் படிப்படியாக நேற்று இரவு விமான சேவைகள் சீராக தொடங்கியதாக அமெரிக்கன் ஏர்லைன்ஸ் தெரிவித்தது.
இந்தியாவிலும் நேற்று விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட், ஆகாசா ஆகிய விமான நிறுவனங்களின் ஆன்லைன் செக்-இன், போர்டிங் ஆகிய பணிகள் முடங்கின. கணினிகள் முடங்கியதால் கைகளால் போர்டிங்க் பாஸ் எழுதி கொடுக்கப்பட்டன. இந்த நிலையில், 2-வது நாளாக இதன் தாக்கம் நீடிக்கிறது. நேற்றைய அளவுக்கு இல்லையென்றாலும் இன்றும் பயணிகள் சில சிரமங்களை சந்தித்து வருவதை பார்க்க முடியகிறது.
இது தொடர்பாக மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் கூறுகையில், "நேற்று ஏற்பட்ட சிக்கல்கள் சரி செய்யப்பட்டு வருவதாகவும், பிற்பகலுக்குள் அனைத்து செயல்பாடுகளும் சீராகும்" எனக் கூறியுள்ளது. மேலும், விமான நிலைய செயல்பாடுகளை உன்னிப்பாக கவனித்து வருவதாக விமான போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. ரத்தான விமானங்களுக்கான பயண கட்டணத்தை வழங்குவது, மாற்று ஏற்பாடுகள் உள்ளிட்டவற்றை செய்து வருவதாகவும் விமான போக்குவரத்து துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications