‛‛ஆளும் கட்சியே தோற்குதே’’.. மின்னணு வாக்கு இயந்திரத்தில் முறைகேடு செய்ய முடியாது - தேர்தல் ஆணையர்
டெல்லி: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தால் தான் நியாயமான தேர்தல் நடைபெறுகிறது என்பது அனைத்து கட்சிகளுக்குமே தெரியும். இந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் தான் ஆளும் கட்சியே தோற்கிறது. எனவே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்ய முடியாது என இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் கூறினார்.
டெல்லியில் இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் பத்திரிகையாளர்களை இன்று சந்தித்தார். அப்போது லோக்சபா தேர்தல் தேதிகளை அவர் அறிவித்தார். மொத்தம் 7 கட்டங்களாக தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தை பொறுத்தமட்டில் முதற்கட்டமாக அதுவும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை ஏப்ரல் 19 ம் தேதி ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. அன்றைய தினம் மொத்தமுள்ள 39 தொகுதிகளுக்கும் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. அதன்பிறகு ஜுன் மாதம் 4ம் தேதி ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
இந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு அவர் பதில் அளித்தார். முன்னதாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பற்றி பேசினார்.
காங்கிரஸ் உள்பட பல எதிர்க்கட்சிகளின் தலைவர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பற்றி சந்தேகம் கிளப்பி வரும் நிலையில் அதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் ராஜீவ் குமார் பதிலளித்து இருந்தார். இதுபற்றி ராஜீவ் குமார் கூறுகையில், ‛‛மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு எதிரான பல்வேறு புகார்களை 40 முறை நீதிமன்றம் பரிசீலனை செய்து அத்தனையையும் நிராகரித்துள்ளது.
மேலும் அனைத்கட்சியினருக்குமே முறைகேடு செய்ய முடியாது என்பது தெரியும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் நியாயமான மற்றும் சிறந்த முறையிலான ஓட்டுப்பதிவு நடக்கும் என்பதை அவர்களின் இதயம் அறிந்திருக்கும். ஏனென்றால் அதே ஆளும் கட்சி கூட தேர்தலில் தோற்றுப்போய் உள்ளது. இதனால் மின்னணு வாக்கப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்ய முடியாது'' என்றார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications