இனி அவங்களுக்கு வேலை இருக்காது.. கேலி செய்பவர்கள் குறித்து நகைச்சுவையாக பேசிய தலைமை நீதிபதி
டெல்லி: நீதித்துறையில் என்னை தான் அதிகம் டிரோல் செய்தார்கள். இனி கேலி செய்பவர்களுக்கு வேலை இல்லை. நாளை முதல் என்னை டிரோல் செய்தவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்பதை நினைத்து ஆச்சர்யப்படுகிறேன் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட் பேசினார். இன்றுடன் அவரது பதவிக்காலம் முடிவடைகிறது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் டி ஒய் சந்திரசூட் இன்றுடன் ஒய்வு பெறுகிறார். உச்ச நீதிமன்றத்தின் 50-வது தலைமை நீதிபதியாக கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் 22 ஆம் தேதி பதவியேற்றார். அவரது பதவிக்காலம் இன்றுடன் முடிவடைய போகிறது. இதையடுத்து சந்திரசூட்டிற்கு உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியான சஞ்சீவ் கண்ணா தலைமையிலான நீதிபதிகள் பிரியாவிடை அளித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட், நீதித்துறையில் என்னைதான் அதிகம் டிரோல் செய்தார்கள் என்றும், இனி கேலி செய்பவர்களுக்கு வேலை இல்லை எனவும் நகைச்சுவையாக பேசினார். தலைமை நீதிபதி பேசியதாவது:- அதிகமாக டிரோல் செய்யப்பட்ட நீதிபதியாக நான் தான் இருந்து இருப்பேன். நாளை முதல் என்னை டிரோல் செய்தவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்பதை நினைத்து ஆச்சர்யப்படுகிறேன். என்னை டிரோல் செய்தவர்களுக்கு நாளையில் இருந்து வேலை இல்லாமல் போக போகிறது" என்றார்.
தொடர்ந்து பேசிய தலைமை நீதிபதி, "அனைத்து விமர்சனங்களையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் கொண்டவன். சூரிய ஒளி சிறந்த தொற்று நீக்கி. கொள்கையின் அடிப்படையில் வெளிப்படைத்தன்மையை செய்யும் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டேன். காகிதம் இல்லா நீதிமன்றன்ங்களை உருவாக்க முன்னெடுக்கப்பட்ட முயற்சிகளுக்கு வழக்கறிஞர்களின் ஆதரவு மிக முக்கியமானது. மக்களின் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தி மாற்றம் ஏற்படுத்துவதே நீதிபதிகளின் கடமை.
நீதிமன்றத்தில் செலவழிக்கும் ஒவ்வொரு நாளும், சட்ட அறிவு மற்றும் தனிப்பட்ட நுண்ணறிவு இரண்டையும் கற்றுக் கொள்ள ஒரு வாய்ப்பாக அமைந்தது. அடுத்த தலைமை நீதிபதியாக பதவியேற்க இருக்கும் சஞ்சய் கண்னா, கண்ணியமானவர். நீதி வழங்குவதில் அர்ப்பணிப்புடன் செயல்படுபவர். நான் யாரையும் புண்படுத்தியிருந்தால் அதற்காக உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.
இந்த நிகழ்ச்சியில் உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா பேசுகையில், "தலைமை நீதிபதி சந்திரசூட் எனது பணியை எளிமையானதாகவும், கடினமானதாகவும் ஆக்கியிருக்கிறார். அவர் அளவுக்கு எனது பயணம் இருக்காது" என்றார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications