யானைகளின் வலியை பேசும்.. போச்சர் சீரிஸ்! வித்தியாசமாக விளம்பரம் செய்த அமேசான் பிரைம்
டெல்லி: அமேசான் ஓடிடி தளத்தில் நாளை வெளியாக உள்ள 'போச்சர்' சீரிஸ் குறித்த விளம்பரத்தை அமேசான் நிறுவனம் வித்தியாசமான முறையில் செய்திருக்கிறது.
இந்தியாவில் யானை தந்தங்கள் கடத்தப்படுவது இன்னும் முற்றிலுமாக தடுக்கப்படவில்லை. காடுகள் உருவாக்கத்திற்கு காரணமாக இருக்கும் யானைகளை, அதன் தந்தத்திற்காக கொடூரமாக கொலை செய்யும் சம்பவங்களை மையப்படுத்தி 'போச்சர்' எனும் சீரிஸ் எடுக்கப்பட்டிருக்கிறது. கடந்த 2019ம் ஆண்டு வெளிவந்த 'டெல்லி க்ரைம்' எனும் தொடர் மூலம் கவனம் பெற்றிருந்த ரிச்சி மேத்தாதான் இந்த போச்சர் சீரிஸை இயக்கியுள்ளார். இது நாளை அமேசான் ஓடிடியில் வெளியாகிறது.

இந்நிலையில் இந்த சீரிஸை விளம்பரப்படுத்துவதற்காக அமேசான் நிறுவனம் மேற்கொண்ட வித்தியாசமான முயற்சி கவனம் ஈர்த்திருக்கிறது. அதாவது, டெல்லி, ராஜஸ்தான், ஹைதராபாத் என முக்கிய நகரங்களில், பொருட்களை டெலிவரி செய்ய பயன்படுத்தும் பாக்ஸ் போன்ற பொருளை காட்சிக்கு வைத்திருந்தது. அளவில் பெரியதாக இருக்கும் இந்த பெட்டியில் என்ன இருக்கிறது? என்பது அனைவரிடமும் ஆர்வத்தை தூண்டியது.

இந்நிலையில் இந்த பெட்டியில் இருப்பதை அமேசான், திறந்து காட்டியிருக்கிறது. பெட்டிக்குள் யானை தந்தங்கள் இருக்கின்றன. போச்சர் சீரிஸை விளம்பரப்படுத்தவும், காடுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்த முயற்சியை அமேசான் மேற்கொண்டிருக்கிறது. இதனை பல்வேறு தரப்பினரும் வரவேற்றிருக்கின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications