அம்பேத்கர் பிறந்தநாள்.. ஏப்ரல் 14ஆம் தேதியை பொது விடுமுறையாக அறிவித்தது மத்திய அரசு!
டெல்லி : இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை வடித்த அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு வரும் ஏப்ரல் 14ஆம் தேதியை பொது விடுமுறையாக அறிவித்துள்ளது மத்திய அரசு.
வரும் ஏப்ரல் 14ஆம் தேதி இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றிய சட்ட மேதை டாக்டர் அம்பேத்கரின் பிறந்த நாள். அம்பேத்கரின் 133வது பிறந்தநாள் விழா வரும் ஏப்ரல் 14ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

பட்டியல் சாதியைச் சேர்ந்த அம்பேத்கர், பள்ளியிலும், சமூகத்திலும் தீண்டாமைக் கொடுமைகளை அனுபவிக்க நேர்ந்தாலும், அனைத்து தடைகளையும் மீறி கல்வி கற்று மிக உயரிய இடங்களை அடைந்தார்.
சமூக சீர்திருத்தத்திற்காக தன் வாழ்வையே அர்ப்பணித்தவர் டாக்டர் அம்பேத்கர். இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராகவும், இந்திய அரசியல் சாசனத்தின் தலைமைச் சிற்பியாகவும் செயல்பட்டார் அம்பேத்கர்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கரின் பிறந்தநாளை ஆண்டு தோறும் மத்திய மாநில அரசுகள் அம்பேத்கருக்கு மரியாதை செலுத்தி கொண்டாடி வருகின்றன.

தமிழ்நாடு அரசு, அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14 ஆம் தேதியை கடந்த ஆண்டு முதல்'சமத்துவ நாள்' என்று அறிவித்து, அதன்படி, அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களில் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டு வருகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications