பஞ்சாப்பில் அவமதிக்கப்பட்ட அம்பேத்கார் சிலை! சர்ச்சையில் சிக்கிய ஆம் ஆத்மி! போராடும் பாஜக, காங்கிரஸ்
டெல்லி: பஞ்சாப்பில் டாக்டர் பி.ஆர் அம்பேத்காரின் சிலை அவமதிக்கப்பட்ட சம்பவம் நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. ஆம் ஆத்மி கட்சிக்கும், பஞ்சாப் அரசுக்கும் எதிராக இந்த விவகாரம் திரும்பி உள்ளது. கடந்த ஜனவரி 26ம் தேதி பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரில் 33 அடி உயரம் கொண்ட டாக்டர் பி.ஆர் அம்பேத்காரின் சிலை தாக்கப்பட்டது. சிலையின் பாகங்கள் இடிக்கப்பட்டது. குடியரசுதினத்தன்று நடந்த இந்த சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது. போலீஸ் நிலையத்திற்கு அருகிலேயே இருக்கும் இந்த சிலையை யாரோ சுத்தியல் வைத்து உடைத்து உள்ளனர்.
டாக்டர் பி.ஆர் அம்பேத்காரின் சிலைக்கு நேர்ந்த அவமதிப்பு பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் தலைவர்களிடமிருந்து பரவலான கண்டனத்தை பெற்று வருகிறது. ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தலித் சமூகத்தை அவமரியாதை செய்ததாக பாரதிய ஜனதா கட்சி கடுமையாக விமர்சனங்களை வைத்து வருகிறது.

பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா, இந்தச் செயல் என் இதயத்தை நொறுக்குகிறது என்று குறிப்பிட்டு உள்ளார். பாஜக தலைவர்கள் பலரும் கெஜ்ரிவாலின் தலைமையின் கீழ் செயல்படும் பஞ்சாப் அரசாங்கத்தை கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர். கெஜ்ரிவால் அரசு தலித் பிரதிநிதித்துவத்திற்கு எதிராக செயல்படுவதாகவும், தலித் விரோத நடவடிக்கைகளை எடுப்பதாகவும் கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன.
இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா, டெல்லியில் உள்ள கெஜ்ரிவால் இல்லம் அருகே போராட்டம் செய்தனர். கெஜ்ரிவால் பதவி விலகக் கோரியும், பகிரங்க மன்னிப்பு கேட்கக் கோரியும் கோரிக்கை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். முக்கியமாக இந்த விவகாரத்தில் போலீசார் அலட்சியமாக இருப்பதாக குற்றம் சாட்டி, காவல்துறையையும் விமர்சனம் செய்து போராடினர்.
பாஜக மட்டுமின்றி மற்ற கட்சியினரும் ஆம் ஆத்மியை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். பஞ்சாப் எம்பி குர்ஜித் சிங் அவுஜ்லா மற்றும் மூத்த தலைவர் ராஜ் குமார் வெர்கா உள்ளிட்ட பஞ்சாப் காங்கிரஸ் தலைவர்கள் சேதப்படுத்தப்பட்ட அம்பேத்கார் சிலையை பார்வையிட்டு இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். இது தொடர்பாக முழுமையான விசாரணையை நடத்த வேண்டும் என்று அழைப்பு விடுத்தனர்.
இந்த விவகாரத்தால் பஞ்சாபில் ஆம் ஆத்மி அரசு அனைத்து தரப்பிலிருந்தும் கடுமையான கண்டனங்களை சந்தித்து வருகிறது. அம்பேத்கார் போன்ற மிகப்பெரிய தலைவரின் சிலையை கூட ஆம் ஆத்மி பாதுகாக்க தவறிவிட்டதாக கடுமையான விமர்சனங்களை எதிர்க்கட்சிகள் வைத்து வருகின்றனர். குற்றவாளிகள் மீது விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும். அம்பேத்கரின் அனைத்து சிலைகளுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று , மூத்த காங்கிரஸ் தலைவர் அஜய் மக்கன் கோரிக்கை வைத்து உள்ளார். ஆம் ஆத்மியின் செயலை பார்க்கும் போது ஆம் ஆத்மி கட்சிக்கும் காலிஸ்தானிக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்பதாக தெரிவித்து உள்ளார்.
முன்னாள் ஆம் ஆத்மி கட்சி உறுப்பினரும், புகழ்பெற்ற கவிஞருமான குமார் விஸ்வாஸ், அரவிந்த் கெஜ்ரிவால் அதிகாரத்தைப் பெறுவதற்காக காலிஸ்தானி இயக்கங்களுடன் தொடர்பு வைத்து இருப்பதாகவும், அவர்களின் உதவியை பெறுவதற்கான வேலைகளை செய்வதாகவும் குற்றஞ்சாட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.
டாக்டர் அம்பேத்கர் சிலை அவமதிப்பு பஞ்சாப், டெல்லியில் மிகப்பெரிய அரசியல் புயலாக மாறியுள்ளது. சட்டம் ஒழுங்கு அங்கே கேள்விக்குறியாகி உள்ளது. தலித்துகளை ஆம் ஆத்மி கட்சி நடத்தும் விதமும் கடுமையான விமர்சனங்களை சந்தித்து உள்ளது. ஆம் ஆத்மி கட்சிக்கும், பஞ்சாப் அரசுக்கும் எதிராக இந்த விவகாரம் திரும்பி உள்ளது. டாக்டர் பி.ஆர் அம்பேத்காரின் சிலைக்கு நேர்ந்த அவமதிப்பு பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் தலைவர்களிடமிருந்து பரவலான கண்டனத்தை பெற்று வருகிறது.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications