டிரம்ப் வரிக்கு நடுவே.. ரூ.8,700 கோடியில் அமெரிக்க நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடும் இந்தியா! பின்னணி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம் நாட்டுக்கு 50 சதவீத வரிகளை விதித்துள்ளார். இதனால் இருநாடுகள் இடையேயான உறவு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. நம் நாட்டில் இருந்து அமெரிக்காவுக்கு செல்லும் ஏற்றுமதி பெருமளவில் சரிவை சந்திக்க உள்ளது. இப்படியான சூழலில் தான் அமெரிக்க நிறுவனத்துடன் ரூ.8,700 கோடிக்கு இந்தியா முக்கிய ஒப்பந்தம் செய்ய உள்ளதாக பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம் நாட்டுக்கு 50 சதவீத வரியை தீட்டி உள்ளார். அமெரிக்கா உடனான வர்த்தக பற்றாக்குறை மற்றும் ரஷ்யாவுடன் கச்சா எண்ணெய் வாங்குவதை சுட்டிக்காட்டி இந்த வரிகளை விதித்துள்ளார்.

Donald Trump US india

முதற்கட்டமாக கடந்த 7 ம்தேதி 25 சதவீத வரி அமலுக்கு வந்தது. அடுத்தக்கட்டமாக இன்று முதல் 25 சதவீத வரி அமலுக்கு வந்துள்ளது. இதன்மூலம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம் நாட்டின் மீது விதித்த 50 சதவீத வரி முழுவதுமாக அமலாகி உள்ளது.

இது நம் நாட்டுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. அதிகப்படியான வரியால் அமெரிக்காவுக்கு செல்லும் இந்திய பொருட்களின் ஏற்றுமதி சரியும் நிலை உருவாகி உள்ளது. மேலும் நம் நாட்டில் வேலையிழப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இந்தியா - அமெரிக்கா இடையோன உறவு பாதிக்கப்பட்டுள்ளது. டொனால்ட் டிரம்ப் 4 முறை போன் செய்தும் பிரதமர் மோடி எடுக்கவில்லை. இதன்மூலம் இருதலைவர்கள் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

இது ஒருபுறம் இருக்க இந்தியா சார்பில் அமெரிக்கா நிறுவனத்திடம் 1 பில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ.8,700 கோடி) மதிப்புக்கு முக்கிய டீல் செய்ய திட்டமிட்டுள்ளது. அமெரிக்காவில் ஜிஇ (GE)என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்திடம் இருந்து நம் நாட்டின் விமானப்படையில் பயன்படுத்ததப்பட்டு வரும் இலகுரக போர் விமானமான தேஜஸ்க்கு தேவையான இன்ஜின்களை வாங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. 113க்கும் அதிகமான ஜிஇ 404 இன்ஜின்கள் வாங்க நம் நாடு முடிவு செய்துள்ளது. இதற்கான ஒப்பந்தம் வரும் செப்டம்பர் மாதம் கையெழுத்தாகலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.

இந்த ஒப்பந்தத்ததை தொடர்ந்து அமெரிக்க நிறுவனம் மாதம் 2 இன்ஜின்களை நம் நாட்டுக்கு வழங்க ள்ளது. டிரம்பின் வரி விதிப்புக்கு நடுவே அமெரிக்க நிறுவனத்துடன் போடப்படும் 2வது ஒப்பந்தம் இதுவாகும். ஏற்கனவே எல்சிஏ மார்க் 1A போர் விமானங்களுக்கான 97 இன்ஜின்கள் ரூ.62 ஆயிரம் கோடியில் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில் இப்போது ரூ.8,700 கோடியில் 2வது ஒப்பந்தத்துக்கு இந்தியா தயாராகி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+