Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Himalayan Cloud Bursts: அழகின் பின்னால் உள்ள அரக்கன்.. மேக வெடிப்பால் தொடர்ந்து பேரழிவை எதிர்கொள்ளும் இமயமலை! டைம்லைன்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கடந்த சில நாட்களுக்கு முன்பு உத்தரகண்ட்டில் மேக வெடிப்பு காரணமாகப் பேரிழவு ஏற்பட்ட நிலையில், இன்று ஜம்முவிலும் அதேபோல ஒரு மோசமான சம்பவம் நடந்துள்ளது. இமயமலைப் பகுதிகளில் இதுபோன்ற பேரழிவு பல காலமாகவே தொடர்ந்து வருகிறது. கடந்த 30 ஆண்டுகளில் அங்கு ஏற்பட்ட கொடூரமான மேக வெடிப்புச் சம்பவங்கள் குறித்து நாம் பார்க்கலாம்.

இமயமலைப் பகுதிகளில் மேக வெடிப்புகள் (Cloudbursts) காரணமாக மிகக் கடுமையான இயற்கை அழிவுகள் ஏற்பட்டுள்ளன. இதனால் பல உயிரிழப்புகளும் பொருளாதார இழப்புகளும் கூட ஏற்பட்டுள்ளன. கடந்த காலங்களில் அங்கு ஏற்பட்ட மோசமான மேக வெடிப்புச் சம்பவங்கள் குறித்து நாம் பார்க்கலாம்.

Amid Jammu cloud bursts here is Timeline of Himalayan Cloud Bursts Recent Incidents and Impact

1990களின் பேரழிவு

1997ம் ஆண்டு இதே ஆகஸ்ட் மாதம் இமாச்சலப் பிரதேசத்தின் ஷிம்லா, சிர்கான் பகுதிகளில் மிகப் பெரிய பாதிப்பு ஏற்பட்டது. சிர்கான் கிராமத்திற்கு அருகிலுள்ள ஆந்திரா காத் ஆற்றின் மேல் பகுதியில் ஏற்பட்ட மேக வெடிப்பு, ஷிம்லாவின் ரோஹ்ரு பகுதியில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்தில் 100+ உயிரிழந்தனர். சுமார் 3,000 பேர் தங்கள் உடைமைகளை இழந்தனர். இந்த மேக வெடிப்பால் ஏற்பட்ட வெள்ளம் இமயமலைப் பள்ளத்தாக்குகள் முழுவதையும் சூறையாடியது.

இந்தப் பேரழிவு நடந்து ஒரே ஆண்டில் 1998ல் உத்தரகண்ட்டில் பேரழிவு தாக்கியது. 1998 ஆகஸ்ட் 17ம் தேதி உத்தரகண்ட்டின் மால்பா, பித்தோராகர் பகுதிகள் பேரழிவைச் சந்தித்தன. தொடர் மழையும், மேக வெடிப்பும் சேர்ந்து கலி பள்ளத்தாக்கில் உள்ள மால்பா கிராமத்தை முற்றிலும் அழித்தன. இதனால் நிலச்சரிவும் ஏற்படவே நிலைமை மோசமானது. இந்தச் சம்பவத்தில் 200+ பேர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. குறிப்பாக கைலாஷ் மானசரோவர் கோயிலுக்குச் சென்ற 60 பேர் இதில் உயிரிழந்தனர். திட்டமிடப்படாத வளர்ச்சியே அங்குப் பாதிப்பு மோசமாகக் காரணம் எனச் சொல்லப்பட்டது.

தொடர்ந்த பேரழிவு

இமாச்சல பிரதேசத்தின் ஷிலாகர், குர்சா பகுதிகளில் 2003ம் ஆண்டு ஜூலை 16ம் தேதி மற்றொரு பேரழிவு ஏற்பட்டது. குல்லு மாவட்டத்தின் கர்சா பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாகத் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் 30+ பேர் வரை உயிரிழந்தனர். பல கிராமங்கள் பாதிக்கப்பட்டன. சாலைகளும் முடங்கியதால் மீட்புப் பணிகள் நடைபெறுவதிலும் சிக்கல் ஏற்பட்டது.

அதேபோல 2004ம் ஆண்டு ஜூலை 6ம் தேதி பத்ரிநாத் அருகே சாமோலி என்ற பகுதியில் மெகவெடிப்பு ஏற்பட்டது. உத்தரகண்ட்டில் உள்ள பத்ரிநாத் அருகே ஏற்பட்ட இந்த மேக வெடிப்பால் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. இதில் 15+ பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கான வீடுகளும், வாகனங்களும் அடித்துச் செல்லப்பட்டன. நிலச்சரிவுகளால் பத்ரிநாத் நெடுஞ்சாலை மூடப்பட்டது. இதனால் அங்குச் சென்றிருந்த பக்தர்கள் பத்திரமாகத் திரும்பவே பல நாட்கள் ஆனது.

Amid Jammu cloud bursts here is Timeline of Himalayan Cloud Bursts Recent Incidents and Impact

நள்ளிரவில் ஏற்பட்ட வெள்ளம்

2010க்கு பிறகு பேரழிவுகள் மிக மோசமானவையாக மாற தொடங்கின. அதில் 2010 ஆகஸ்ட் 6ம் தேதி லே, லடாக் பகுதிகளில் ஏற்பட்டதை குறிப்பிட்டு சொல்லலாம். இரவில் ஏற்பட்ட மேக வெடிப்பு, திடீர் வெள்ளத்தை ஏற்படுத்தியது. அப்போது வெறும் 2 மணி நேரத்தில் 150-250 மிமீ மழை பெய்தது. இது ஒரு வருடத்தில் பெய்ய வேண்டிய மழையாகும். இப்படி ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை இரண்டே மணி நேரத்தில் பெய்ததால் பேரழிவு ஏற்பட்டது. காட்டாற்று வெள்ளத்தில் பல சிக்கினர்.

இந்தச் சம்பவத்தில் 200+ உயிரிழந்திருக்கலாம் என சொல்லப்படுகிறது. 1,000க்கும் மேற்பட்ட வீடுகள் அழிந்தன. பல ஆயிரம் பேர் வீடுகளையும் உடைமைகளையும் இழந்தனர். கனமழையால் தகவல் தொடர்பும் போக்குவரத்து இணைப்புகளும் முற்றிலும் துண்டிக்கப்பட்டன. இதனால் மீட்புப் பணிகளும், மருத்துவ உதவிகளும் கூட கடுமையாகப் பாதித்தது.

சுனாமிக்கு பின் இதுதான் மோசம்

அதேபோல 2013ம் ஆண்டு ஜூன் 16-17 தேதிகளில் உத்தரகண்ட்டின் கேதார்நாத் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் மேக வெடிப்பு ஏற்பட்டது. தொடர்ச்சியாக ஏற்பட்ட மேக வெடிப்புகளால் மிக மோசமான பேரழிவு ஏற்பட்டது. 2004 சுனாமிக்குப் பிறகு இந்தியாவின் மிக மோசமான இயற்கைச் சீற்றமாக இது கருதப்படுகிறது. கடும் மழை மற்றும் நிலச்சரிவு காரணமாகத் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. இந்தப் பேரழிவில் பல ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டனர். கேதார்நாத் அருகே மட்டும் 800-க்கும் மேற்பட்ட சடலங்கள் மீட்கப்பட்டன. அந்தப் பகுதி கிட்டத்தட்ட மொத்தமாக அழியும் அளவுக்கு இந்தப் பேரழிவு இருந்தது.

Amid Jammu cloud bursts here is Timeline of Himalayan Cloud Bursts Recent Incidents and Impact

அடுத்து சில ஆண்டுகள் இமயமலை பகுதிகளில் பேரழிவு எதுவும் ஏற்படவில்லை. இந்தச் சூழலில் தான் 2021ம் ஆண்டு ஜூலை 28மே தேதி காஷ்மீரின் ஹுன்சார், கிஷ்வார் பகுதிகளில் மீண்டும் வெள்ளம் ஏற்பட்டது. கிஷ்வாரில் உள்ள ஹுன்சார் கிராமத்தில் ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாகத் திடீர் வெள்ளம் ஏற்பட்ட நிலையில், அதில் 20+ பேர் உயிரிழந்தனர். இதில் அங்கிருந்த வீடுகள் மற்றும் உட்கட்டமைப்புக்கும் பெரும் சேதம் ஏற்பட்டது.

அதிகரிக்கும் வெள்ள பாதிப்புகள்

2022 ஜூலை 8ம் தேதி மீண்டும் காஷ்மீரின் அமர்நாத் பகுதியில் வெள்ளம் ஏற்பட்டது. அமர்நாத் கோயிலுக்கு மேலே ஏற்பட்ட மேக வெடிப்பு திடீர் வெள்ளத்தை ஏற்படுத்தியது. இதில் 13+ உயிரிழந்தனர். மேலும், பலர் மாயமாகினர்.. அங்கு அமைக்கப்பட்ட கூடாரங்கள் கூட வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. பாதிப்புகள் மிக மோசமாக இருந்ததால் ராணுவம் மற்றும் பேரிடர் மீட்பு அமைப்புகள் பல நாட்கள் மீட்புப் பணிகளைச் செய்ய வேண்டி இருந்தது. சுமார் 15,000 பக்தர்கள் அங்கிருந்து வெளியேறும் சூழல் ஏற்பட்டது.

2023ல் இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகண்ட்டில் மீண்டும் ஒரு பேரழிவு ஏற்பட்டது. பல நாட்கள் பெய்த கனமழை மற்றும் பல மேக வெடிப்பு சம்பவங்களால் இரு மாநிலங்களிலும் பல இடங்களில் வெள்ளப்பெருக்கும் நிலச்சரிவுகளும் ஏற்பட்டன. இதன் காரணமாக இரண்டு மாநிலங்களிலும் 70+ பேர் உயிரிழந்தனர். குறிப்பாக ஷிம்லாவில் மட்டும் 14 பேர் பலியாகினர். இச்சம்பவங்களால் சாலைகள் மூடப்பட்டு, வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பவே பல வாரங்கள் ஆனது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+