அதிகரிக்கும் கொரோனா.. நாளை, நாளை மறுநாள் தான் முக்கியமே! 3 மாநிலங்களில் மாஸ்க் கட்டாயம்!என்னாச்சு?
டெல்லி: இந்தியாவில் தற்போது மெல்ல மெல்ல கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதையடுத்து 3 மாநிலங்களில் அம்மாநில அரசுகள் பொது இடங்களில் மாஸ்க்கை கட்டாயமாக்கிய நிலையில் நாளையும், நாளை மறுநாளும் முக்கிய நாளாக பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு சமீபத்தில் குறைந்து இருந்தது. இதனால் மத்திய, மாநில அரசுகள் நிம்மதியடைந்தனர். இந்நிலையில் தான் சில நாட்களாக தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு என்பது மெல்ல மெல்ல உயர தொடங்கி உள்ளது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் முந்தைய வாரங்களை ஒப்பிடும்போது கடந்த 7 நாட்களில் கொரோனா பாதிப்பு என்பது அதிகரிக்க தொடங்கி உள்ளது.

நேற்று ஒருநாளில் மட்டும் இந்தியாவி்ல 6,155 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை என்பது 31,194 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நேற்று 11 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர். இதன்மூலம் கொரேனாவுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை என்பது 5 லட்சத்து 30 ஆயிரத்து 954யை தொட்டுள்ளது.
இந்தியாவில் தற்போது தினசரி கொரோனா உறுதி செய்யும் சதவீதம் 5.63 என்ற அளவிலும், வாராந்திர கொரோனா உறுதி தன்மை னெ்பது 3.47 சதவீதமாக உள்ளது. இந்நிலையில் தான் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாநிலங்களில் உரிய தடுப்பு நடவடிக்கையை எடுக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
சில நாட்களுக்கு முன்பு கூட மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மான்சுக் மாண்டவியா அனைத்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையின்போது கொரோனா தடுப்புக்கான நடைமுறையை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. அதன்படி ஒவ்வொரு மாநிலங்களும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்ட தொடங்கி உள்ளன.

இந்நிலையில் தான் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 3 மாநிலங்களில் மாஸ்க் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி ஹரியானா மாநிலத்தில் பொது இடங்களில் பொதுமக்கள் மாஸ்க் அணிய வேண்டும் என கூறப்பட்டுள்ளது. 2வது கேரளாவில் கர்ப்பிணிகள், முதியர்கள் மற்றும் நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு மாஸ்க் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதேபோல் புதுச்சேரியிலும் பொது இடங்களில் மாஸ்க் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைகள், ஹோட்டல்கள், ரெஸ்டாரண்ட்டுகள், மதுபான கடைகள், பொழுதுபோக்கு இடங்கள், அரசு அலுவலகங்கள் மற்றும் வணிக வளாகங்களில் கட்டாயமாக பொதுமக்கள் மாஸ்க் அணிய புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுதவிர இந்தியா முழுவதும் நாளை(திங்கட்கிழமை), நாளை மறுநாள்(செவ்வாய்க்கிழமை) என 2 நாட்கள் கொரோனா நோய் தடுப்பு தொடர்பாக Mock Dril நடைபெற உள்ளது. இந்த நாட்களில் அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரேனாா நோய் தடுப்பு தொடர்பான செயல்முறை மேற்கொள்ளப்பட உள்ளது. அப்போது கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் முறை தொடர்பான பயிற்சி அளிக்கப்படுவதோடு, கொரோனா தடுப்புக்கான முன்னெச்சரிக்கை பணிகள் மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்பட உள்ளது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications