அலர்ட்.. அடுத்த 40 நாள் முக்கியம்.. சீரம் சார்பில் மத்திய அரசுக்கு 2 கோடி தடுப்பூசி இலவசம்.. ஏன்?
டெல்லி: அண்டை நாடான சீனாவில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவில் தடுப்பு நடவடிக்கையை மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. மேலும் தடுப்பூசி, பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணி விரைவுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்தியாவில் அடுத்த 40 நாள் மிகவும் முக்கியம். ஜனவரியில் கொரேனா பாதிப்பு அதிகரிக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியாவின் சீரம் நிறுவனம் சார்பில் மத்திய அரசுக்கு 2 கோடி கோவிஷீல்ட் தடுப்பூசி இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் உள்ள காரணம் என்ன? என்பது பற்றிய விபரம் வெளியாகி உள்ளது.
இந்தியாவில் கடந்த சில மாதங்களாக குறைந்து வந்துள்ள கொரோனா தற்போது மெல்ல அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதேபோல் உலகின் பல நாடுகளிலும் கொரோனா பாதிப்பு என்பது கடந்த ஓராண்டில் இருந்து சரிய தொடங்கியது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
இந்நிலையில் தான் தற்போது சீனா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பாதிப்பு என்பது அதிகரிக்க தொடங்கி உள்ளது. ஓமிக்ரான் உருமாறிய வைரஸ் பாதிப்பால் அந்த நாடுகள் அதிகமாக பாதிக்கப்பட்டு வருகின்றன.

அடுத்த 40 நாள் முக்கியம்
இந்நிலையில் தான் இந்தியாவில் மத்திய, மாநில அரசுகள் அனைத்தும் ஒன்றாக இணைந்து கொரோனா தடுப்புக்கான பணியை தீவிரமாக முன்னெடுத்துள்ளன. அதன்படி பொதுமக்கள் மாஸ்க் அணிய வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்திய நிலையில் கர்நாடகா உள்ளிட்ட சில இடங்களில் மாஸ்க் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் சமூக இடைவெளியை மக்கள் பின்பற்ற வேண்டும், மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்லாமல் தடுக்க வேண்டும் என தொடர்ந்து மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன. மேலும் அடுத்த 40 நாள் என்பது இந்தியாவுக்கு மிகவும் முக்கியம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஜனவரியில் இந்தியாவில் அதிகரிப்பு?
மேலும் ஜனவரியில் கொரோனா பாதிப்பு இந்தியாவில் அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது. இதனால் விமான நிலையங்களில் இருந்து வரும் பயணிகளுக்கு 2 சதவீதம் பேருக்கு ரேண்டமாக ஆர்டிசிபிஆர் கொரோனா பரிசோதனை செய்ய மத்திய அரசு கூறியது. மேலும் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள சீனா, ஹாங்காங், தாய்லாந்து, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகளில் இருந்து இந்தியா வருபவர்களுக்கு ஆர்டிபிசிஆர் சோதனை கட்டாயம் என அறிவிக்கப்பட்டது. இது ஒருபுறம் இருக்க கொரோனா தடுப்பூசி மற்றும் பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணியை விரைவுப்படுத்த வேண்டும் என மத்திய அரசு சார்பில் மாநிலங்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக துவங்கப்பட்டுள்ளது.

2 கோடி தடுப்பூசி இலவசமாக வழங்கல்
இந்நிலையில் தான் புனேவில் இயங்கி வரும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா சார்பில் மத்திய அரசுக்கு 2 கோடி கோவிஷீல்ட் தடுப்பூசியை இலவசமாக வழங்கி உள்ளது. இதுதொடர்பாக சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தின் அரசு மற்றும் ஒழுங்குமுறை விவகாரங்கள் பிரிவின் இயக்குனர் பிரகாஷ் குமார் சிங் சார்பில் ‛‛ரூ.410 கோடி மதிப்பிலான தடுப்பு மருந்துகளை இலவசமாக வழங்குவதாக கடிதம் எழுதப்பட்டுள்ளது ரூ.410 கோடி மதிப்பிலான மருந்துகளை இலவசமாக வழங்குவதாக சுகாதாரத்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.

சீரம் நிறுவனம் செய்வது என்ன?
இந்தியாவில் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனம் தான் கோவிஷீல்ட் தடுப்பூசியை தயாரித்து வருகிறது. இதுவரை இந்தியாவுக்கு 170 கோடிக்கும் அதிகமான கோவிஷீல்ட் தடுப்பூசியை இந்த நிறுவனம் தயாரித்து தேசிய நோய்தடுப்பு திட்டத்தின் கீழ் வழங்கி உள்ளதோடு, பிற நாடுகளுக்கும் இந்த தடுப்பூசி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications