Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தர்ணாவில் சிக்கன் சாப்பிட்ட எம்பிக்கள்? காந்தியை அவமதித்ததாக சாடிய பாஜக! திரிணாமுல் காங்கிரஸ் பதிலடி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மழைக்கால கூட்டத்தொடரில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து தர்ணாவில் ஈடுபடும் நிலையில் அவர்கள் சிக்கன் தந்தூரி சாப்பிட்டதாகவும், காந்தியை அவமதித்ததாகவும் கூறி பாஜக விமர்சனம் செய்துள்ளது. இதற்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பதிலடி கொடுத்துள்ளது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் துவங்கிய நிலையில் விலைவாசி உயர்வு உள்பட மக்களின் பிரச்சனைகள் குறித்து விவாதிக்க வேண்டும் என காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ஆம்ஆத்மி உள்பட எதிர்க்கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

லோக்சபா, ராஜ்யசபா என இரு சபைகளிலும் எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர்ந்து தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி வந்தனர். சபையில் மையப்பகுதியில் வந்து கோஷமிட்டனர். இவ்வாறு செயல்பட்ட எம்பிக்கள் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எம்பிக்கள் சஸ்பெண்ட்

எம்பிக்கள் சஸ்பெண்ட்

அதன்படி சபை நடவடிக்கையை மீறி செயல்பட்டதாக கூறி இரு அவைகளிலும் சேர்த்து மொத்தம் 24 எம்பிக்கள் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் திரிணாமுல் காங்கிரஸ், திமுக, தெலங்கானா ராஷ்டிரிய சமிதி, சிபிஐ, சிபிஎம், ஆம்ஆத்மி ஆகிய கட்சி உறுப்பினர்கள் அடங்கும். குறிப்பாக லோக்சபாவில் காங்கிரஸ் எம்பிக்கள் ஜோதிமணி, மாணிக் தாகூர் உள்ளிட்டவர்கள் மழைக்கால கூட்டத்தொடர் முழுவதிலும் பங்கேற்கமுடியாத வகையில் சஸ்பெண்ட் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற வளாகத்தில் தர்ணா

நாடாளுமன்ற வளாகத்தில் தர்ணா

இந்நிலையில் சஸ்பெண்ட் நடவடிக்கையை கண்டித்தும், சஸ்பெண்ட் உத்தரவை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தியும் எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டம் 50 மணிநேரத்தை கடந்து தொடர்ந்து வருகிறது. கொசுக்கடிக்கு மத்தியில் இரவிலும் எம்பிக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்த எம்பிக்களுக்கு திமுக உள்பட பல்வேறு கட்சிகள் உறுப்பினர்கள் சார்பில் உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது.

 சிக்கன் தந்தூரி

சிக்கன் தந்தூரி

இந்நிலையில் தான் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு சில எம்பிக்கள் தந்தூரி சிக்கன் சாப்பிட்டதாக கூறப்படுகிறது. இது தற்போது சர்ச்சையாகி உள்ளது. இந்த விஷயம் தொடர்பாக பாஜக கட்சி கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. மேலும் காந்தியை அவமரியாதை செய்துள்ளதாக குற்றம்சாட்டி உள்ளது.

Recommended Video

    Congress MP Jothimani ஆடை 2-வது முறையாக கிழிப்பு*Politics
    பாஜக விமர்சனம்

    பாஜக விமர்சனம்

    இதுதொடர்பாக பாஜகவின் செய்தி தொடர்பாளரான ஷெஹ்சாத் பூனாவல்லா தனது டுவிட்டர் பக்கத்தில், ‛‛நாடாளுமன்றத்தில் காந்தி சிலைக்கு கீழ் போராட்டம் நடத்தி வரும் காங்கிரஸ் எம்பிக்கள் தந்தூரி சிக்கன் சாப்பிட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன. விலங்கு வதைப்புக்கு எதிரான கொள்கையில் காந்தி உறுதியான கருத்து கொண்டிருந்தார். இது அனைவருக்கும் தெரியும். இதனால் தற்போது நடப்பது போராட்டமா? அல்லது சுற்றுலாவா? என்ற கேள்வி எழுந்துள்ளது'' என குறிப்பிட்டார்.

    மத்திய அமைச்சர் சாடல்

    மத்திய அமைச்சர் சாடல்

    இதேபோல் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தனது டுவிட்டர் பக்கத்தில், ‛‛மகாத்மா காந்தியை காங்கிரஸ் கட்சி அவமதித்து விட்டது. காங்கிரஸ் தலைவர்கள் தர்ணா என்ற பெயரில் அகிம்சை வாதி காந்தியின் சிலைக்கு அடியில் அமர்ந்து கோழிக்கறி சாப்பிடுவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. பொது பிரச்சனைகள் பற்றி பேசாமல், நாட்டின் பெரிய மனிதர்களை அவமதிப்பது காங்கிரசின் வழக்கமாகிவிட்டது'' என கூறி இருந்தார்.

    உணவு சாப்பிடுவது எங்களின் விருப்பம்

    உணவு சாப்பிடுவது எங்களின் விருப்பம்

    இதற்கு திரிணாமுல் காங்கரஸை சேர்ந்த சுஷ்மிதா தேவ், ‛‛எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையைக் கண்டு பாஜக பயப்படுகிறது'' என பதிலடி கொடுத்து இருந்தார். மேலும், ‛‛எங்களின் உணவு பழக்கங்கள் குறித்து பாஜக கருத்து தெரிவிக்க வே்டாம். எங்கள் கட்சி மட்டுமின்றி பிற எம்பிக்கள் சார்பில் உணவு கொண்டு வந்து வினியோகிப்பதை பாஜகவால் சகித்து கொள்ள முடியவில்லை. இந்த ஒற்றுமையை கண்டு பாஜக பயப்படுகிறது'' என கூறினார். மேலும் எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்கள், ‛‛நாங்கள் மீன், சிக்கன் உள்ளிட்டவற்றை சாப்பிடுவதில் என்ன தவறு இருக்கிறது?. விருப்பியதை சாப்பிட எங்களுக்கு உரிமை உண்டு'' என்றனர்.

    மஹுவா மொய்த்ரா டுவிட்

    மஹுவா மொய்த்ரா டுவிட்

    மேலும் திரிணாமல் காங்கிரஸ் கட்சியின் எம்பியாக உள்ள மஹுவா மொய்த்ரா தனது டுவிட்டர் பக்கத்தில் பாஜகவினரை விமர்சனம் செய்துள்ளார். ‛‛சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்பிக்கள் தர்ணாவில் என்ன உணவு சாப்பிடுகின்றனர் என்று பாஜகவினர் கருத்து தெரிவிக்கின்றனர். முட்டாள் ஆன்மாக்கள், உங்கள் எஜமானர்கள் கூட நாக்குக்கு சேவை செய்கிறார்கள்'' என கூறியுள்ளார். இதில் முட்டாள் ஆன்மாக்கள் என்பதை அவர் ‛சில்லி சோல்ஸ்' என குறிப்பிட்டு இருந்தார். அதாவது ஸ்மிருதி இரானியின் மகள் சட்டவிரோதமாக மதுபான பார் நடத்துவதாக சமீபத்தில் சர்ச்சை எழுந்தது. இதில் அந்த பாரின் பெயர் ‛சில்லி சோல்ஸ்' என்பதாகும். இதனை தான் மறைமுகமாக குறிப்பிட்டு மஹுவா மொய்த்ரா விமர்சனம் செய்துள்ளார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+