போருக்கு தயாரான இந்தியா? அரபிக்கடலில் மாஸ் சம்பவம்! விண்ணில் பாயும் ஏவுகணைகள்.. வீடியோவின் பின்னணி
டெல்லி: நம் நாட்டுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே மோதல் என்பது அதிகரித்து வருகிறது. பாகிஸ்தான் ஏவுகணை சோதனை நடத்தியும், அணுஆயுதத்தை வீசுவோம் என்றும் மிரட்டி வருகிறது. இந்நிலையில் தான் அரபிக்கடலில் இந்திய கடற்படை மாஸ் சம்பவத்தை செய்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்ட வீடியோ மற்றும் பயன்படுத்தி வார்த்தைகள் தான் பாகிஸ்தானை அலறவிட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் அருகே பைசரன் என்ற புல்மேடு உள்ளது. கடந்த 22ம் தேதி பயங்கரவாதிகள் நுழைந்து துப்பாக்கிசூடு நடத்தினர். இதில் அங்கு சுற்றுலா பயணிகளாக சென்றிருந்த 22 பேர் பலியாகினர். இந்த தாக்குலை பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத அமைப்பான ‛தி ரெசிஸ்டண்ட் ஃப்ரண்ட்' மேற்கொண்டுள்ளது.

இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க நம் நாடும் தயாராகி வருகிறது. எல்லை கட்டுப்பாட்டு கோட்டில் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் விமானப்படை, கடற்படைகளும் தயாராக உள்ளன. இந்திய கடற்படை சார்பில் முக்கிய சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் இந்தியா- பாகிஸ்தான் இடையேயான அரபிக்கடலில் இந்திய கடற்படை கப்பல்கள் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தான் நம்மை தாக்கினால் இந்த கப்பல்கள் விரைந்து தாக்குதல் நடத்தும் வகையில் இந்த கப்பல்கள் அரபிக்கடலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தான் தற்போது இந்திய கடற்படையின் செய்தி தொடர்பாளர் முக்கிய விஷயத்தை கூறியுள்ளார்.
அதாவது இந்திய கடற்படைக்கு சொந்தமான போர்க்கப்பலில் இருந்து ஏவுகணையை ஏவி எதிரி நாடுகளின் போர்க்கப்பல்களை அழிக்கும் வகையிலான சோதனை வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக இந்திய கடற்படையின் செய்தி தொடர்பாளர் தனது எக்ஸ் பக்கத்தில் போட்டோ மற்றும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அதில், ‛‛நீண்டதூரம் சென்று துல்லியமாக எதிரிகளின் போர்க்கப்பல்களை தாக்கி அழிக்கும் மல்டிபிள் ஏவுகணை சோதனையை இந்திய கடற்படை கப்பல் மேற்கொண்டுள்ளது. நம் நாட்டின் கடல்சார் நலன்களை எந்த நேரத்திலும், எந்த நேரத்திலும் பாதுகாப்பதில் இந்தியா உறுதியாக இருக்கிறது'' என்று கூறியுள்ளார். இந்த பதிவில் Combat Ready என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. இது சண்டை அல்லது போருக்கு தயார் என்பதை குறிக்கும். இதனால் பாகிஸ்தானை மோத இந்தியா முழுவீச்சில் தயாராகி விட்டதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
#IndianNavy Ships undertook successful multiple anti-ship firings to revalidate and demonstrate readiness of platforms, systems and crew for long range precision offensive strike.#IndianNavy stands #CombatReady #Credible and #FutureReady in safeguarding the nation’s maritime… pic.twitter.com/NWwSITBzKK
— SpokespersonNavy (@indiannavy) April 27, 2025
முன்னதாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் சூரத் போர்க்கப்பலில் இருந்து முக்கிய சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதாவது நம் நாட்டை நோக்கி தாக்க வரும் ஏவுகணையை வானிலையே அழிக்கும் வகையில் ஐஎன்எஸ் சூரத் போர்க்கப்லில்இருந்து சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதுவும்அரபிக்கடலில் தான் மேற்கொள்ளப்பட்டது. மேலும் ஐஎன்எஸ் விக்ராந்த் விமானம் தாங்கி போர்க்கப்பலும் தற்போது அரபிக்கடலில் தான் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளது.
இதன்மூலம் எதிரிகளை எளிதாக தாக்கும் வகையில் விமானம் தாங்கி போர்க்கப்பல், எதிரிகளின் ஏவுகணையை வானில் அழிக்கும் ஏவுகணை அழிப்புக்கான போர்க்கப்பல், எதிரிகளின் போர்க்கப்பலையே அழிக்கும் ஏவுகணை கொண்ட போர்க்கப்பல்கள் உள்ளிட்டவற்றை இந்திய கடற்படை அரபிக்கடலில் நிலைநிறுத்தி உள்ளது. இது தான் பாகிஸ்தானுக்கு பிரச்சனையாக மாறி உள்ளது. ஏனென்றால் பாகிஸ்தானுக்கும், இந்தியாவுக்கும் இடையே அரபிக்கடல் தான் உள்ளது. நம் நாட்டை எடுத்து கொண்டால் அரபிக்கடலையொட்டி குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் உள்ளன.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு பாகிஸ்தான் கராச்சியில் உள்ள அரபிக்கடல் பகுதியில் வைத்து தான் ஏவுகணை சோதனையை நடத்தியது. இதனால்ஜம்மு காஷ்மீர் மட்டுமின்றி அரபிக்கடலையொட்டிய நம் நாட்டின் பகுதிகளை பாகிஸ்தான் குறிவைக்கலாம் என்று கருதப்படுகிறது. இதனால் தான் தற்போது நம் கடற்படை போர்க்கப்பல்கள் அரபிக்கடலில் உலா வருகின்றன என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
-
எல்லாம் நாடக மேடைதான்.. போர் நிறுத்தத்திற்கு நோ சொன்ன ஈரான்.. கோடிகளில் லாபம் பார்த்த ஜாம்பவான்கள் -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்!












Click it and Unblock the Notifications