'ஸ்ரீ விஜயபுரம்'.. இதுதான் அந்தமான் தலைநகரின் புதிய பெயர்! அமித்ஷா அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அந்தமான் நிக்கோபார் தீவின் தலைநகரான போர்ட் பிளேரின் பெயரை, 'ஸ்ரீ விஜயபுரம்' என மாற்றப்படுவதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இதனை தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து அவர் டிவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது, "பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையால் ஈர்க்கப்பட்டு, நாட்டை காலனி ஆதிக்கத்திலிருந்து விடுவிப்பதற்காக, இன்று அந்தமான் நிக்கோபார் தீவுகளின் தலைநகர் போர்ட் பிளேயரை ஸ்ரீ விஜயபுரம்' என்று பெயர் மாற்ற முடிவு செய்துள்ளோம். முந்தைய பெயர் காலனித்துவ மரபைக் கொண்டிருந்தாலும், ஸ்ரீ விஜயபுரம் நமது சுதந்திரப் போராட்டத்தின் வெற்றியையும், அந்தமான் நிக்கோபார் தீவுகளின் தனித்துவமான பங்கையும் குறிக்கிறது.

andaman and nicobar amit shah

நமது சுதந்திரப் போராட்டத்திலும் சரித்திரத்திலும் அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு இணையற்ற இடம் உண்டு. ஒரு காலத்தில் சோழப் பேரரசின் கடற்படைத் தளமாக விளங்கிய தீவுப் பகுதி இன்று நமது மூலோபாய மற்றும் வளர்ச்சி அபிலாஷைகளுக்கு முக்கியமான தளமாக விளங்குகிறது. இங்குதான் நேதாஜி சுபாஷ் சந்திர போஸால் முதல்முறையாக நமது தேசியக்கொடி ஏற்றப்பட்டது. மேலும், நமது சுதந்திரத்துக்காகப் போராடிய வீர் சாவர்க்கர் மற்றும் பிற சுதந்திரப் போராட்ட வீரர்கள் அடைக்கப்பட்டிருந்த செல்லுலார் சிறையும் இங்குதான் இருக்கிறது" என்று கூறியுள்ளார்.

ஏற்கெனேவே சாவர்க்கர் குறித்து ஏராளமான பஞ்சாயத்துகள் ஓடிக்கொண்டிருக்கின்றன. காங்கிரசும், இடதுசாரிகளும் சாவார்க்கர் சுதந்திர போராட்ட தியாகி கிடையாது என்று மறுப்பு தெரிவித்து வருகின்றனர். இப்படி இருக்கும்போது, அந்தமான் விவகாரத்தில் சாவர்க்கர் குறித்து பேசியிருப்பது விவாதங்களை தூண்டியிருக்கிறது.

மறுபுறம், பாஜக ஆட்சி பொறுப்பு ஏற்ற பின்னர் ஏராளமான ஊர்கள், ரயில் நிலையங்களின் பெயர்கள் இந்துத்துவா அடையாளம் கொண்ட பெயராக மாற்றப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. குறிப்பாக உத்தரப் பிரதேசத்தில் அலிகார் எனும் ஊரின் பெயரை ஹரிகார் என்றும், அலகாபாத்-ஐ பிரயாக்ராஜ் என்றும், ஃபரிதாபாத்-ஐ அயோத்தி என்றும், முகல்சராய் ஜங்சனை, தீன்தயாள் உபாத்யாயா ஜங்சன் என்றும் பெயர் மாற்றப்பட்டிருந்தது.

ஆக்ரா விமான நிலையம் கூட மறுபெயரிடப்பட்டு, தீன்தயாள் விமான நிலையமாக மாற்றப்பட்டது. தீன் தயாள் என்பர் இந்துத்துவா சித்தாந்தத்தை கொண்ட ஆர்எஸ்எஸ் இயக்கத்தை சேர்ந்தவராவார்.

ஊர் பெயர்கள், ரயில் நிலையம், விமான நிலையங்களின் பெயர்களை தவிர.. புகழ்பெற்ற வரலாற்று சின்னங்களின் பெயர்களை மாற்றவும் தொடர்ந்து பரிசீலனைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. உதாரணமாக தாஜ்மஹாலை, ராம் மஹால் அல்லது கிருஷ்ணா மஹால் என்று அழைக்க வேண்டும் என்றும் குதுப் மினாரை 'விஷ்ணு ஸ்தம்ப்' என அழைக்க வேண்டும் எனவும் இந்துத்துவ ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.

இதற்கிடையில் அந்தமான் தலைநகர் போர்ட் பிளேரின் பெயர் 'ஸ்ரீ விஜயபுரம்' என மாற்றப்பட்டிருப்பது விவாதங்களை கிளப்பியுள்ளது. போர்ட் பிளேர் எனும் பெயர் என்பது, பிரிட்டிஷ் கடற்படை அதிகாரியான கேப்டன் ஆர்க்கிபால்ட் பிளேயரின் நினைவாக வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+