மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை தொகுதி மறுசீரமைப்பு உடன் இணைத்து ஏன்! அமித் கொடுத்த விளக்கம்
டெல்லி: தொகுதி மறுவரையறை மற்றும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தொடர்பாக உள் துறை அமைச்சர் அமித் ஷா இன்று நாடாளுமன்றத்தில் பேசினார். அப்போது மகளிர் நலனுக்காகவே மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என்ற அவர், மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவைத் தொகுதி மறுவரையறை உடன் இணைத்து ஏன் என்பது குறித்தும் விளக்கமளித்தார்.
மத்திய அரசு தொகுதி மறுவரையறை மற்றும் பெண்களுக்கான 33% இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பான மூன்று மசோதாக்களை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. நேற்றைய தினம் இது தொடர்பாகப் பிரதமர் மோடி உரையாற்றிய நிலையில், எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இன்று இது தொடர்பாகப் பேசினார்.

தொடர்ந்து இன்று மாலை 4 மணிக்கு வாக்கெடுப்பு நடக்கும் எனக் கூறப்பட்டு இருந்த நிலையில், அது தாமதமானது. உள் துறை அமைச்சர் அமித் ஷா மாலை 6 மணிக்கு இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். தொகுதி மறுவரையறை அமித் ஷா பேசும்போது எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சிகள் அமளிக்கு நடுவே தான அமித் ஷா உரையாற்றினார்.
மகளிர் இட ஒதுக்கீட்டை எதிர்க்கட்சிகள் எதிர்கின்றன என்ற அமித் ஷா, பட்டியலின மக்களுக்கான தொகுதிகள் எண்ணிக்கை அதிகரிப்பதை எதிர்க்கட்சிகள் தடுக்கின்றன என்றும் மகளிர் நலனுக்காகவே மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் பேசுகையில், "இந்திரா காந்தி ஆட்சியில் தான் தொகுதி மறுவரையறை நிறுத்தப்பட்டது. சில மக்களவையில் தொகுதிகள் மக்கள் தொகை சில லட்சங்களாக உள்ள நிலையில், சில மாநிலங்களில் 45 லட்சம் என இருக்கிறது. மக்கள்தொகை 140 கோடியைக் கடந்துவிட்ட நிலையில், 50 ஆண்டுகளாகத் தொகுதி மறுவரையறை செய்யப்படவில்லை. இதன் காரணமாகவே மகளிர் இட ஒதுக்கீட்டைத் தொகுதி மறுவரையறை உடன் இணைக்க வேண்டி இருக்கிறது என்று அவர் தெரிவித்தார்.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications