காஷ்மீர் விவகாரத்தில் நேருவை இழுத்த அமித்ஷா.. காட்டமாக பதிலடி கொடுத்த ராகுல்.. என்ன சொன்னார் பாருங்க
டெல்லி: நேரு இந்தியாவுக்காக உயிரைக் கொடுத்தார், அவர் பல ஆண்டுகளாக சிறையில் இருந்தார். உள்துறை அமித் ஷாவுக்கு வரலாறு தெரியாது. அவருக்கு வரலாறு தெரியும் என எதிர்பார்க்கவில்லை என்று ராகுல் காந்தி பதிலடி கொடுத்துள்ளார்.
நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. நேற்று மாநிலங்களவையில் ஜம்மு காஷ்மீர் இட ஒதுக்கீடு திருத்த மசோதா, ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா ஆகிய இரண்டு மசோதக்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த இரண்டு மசோதாக்களும் ஏற்கனவே மக்களவையில் நிறைவேற்றபட்டுவிட்டன.

காஷ்மீரில் புலம்பெயர் சமூகத்தில் இருந்து இரண்டு பேர் , பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து வந்தவர்களில் ஒருவர் என மூன்று பேரை காஷ்மீர் சட்டசபைக்கு நியமன உறுப்பினர்களாக நியமிக்க வகை செய்யும் அம்சங்கள் இந்த மசோதாவில் இடம் பெற்று இருந்தன. இந்த மசோதா மீதான விவாதத்திற்கு பதிலளித்து பேசிய அமித்ஷா, புதிய மற்றும் வளர்ந்த காஷ்மீருக்கான தொடக்கம் இது.
வரலாறே தெரியாது என பதிலடி: பிரதமர் மோடி தலமையின் கீழ் காஷ்மீர் பயங்கரவாதத்தின் பிடியில் இருந்து விடுவிக்கப்படும். காஷ்மீர் விவகாரம் தொடர்பாக கொண்டு வரப்பட்டு இருக்கும் இரண்டு மசோதாக்களும் கடந்த 75 ஆண்டுகளாக உரிமை பறிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கும் வகையில் இருக்கும் என்றார். மேலும் ஜம்மு காஷ்மீர் இந்தியாவுடன் இணைவது குறிப்பிட்ட ஒரு நபரால் தாமதமானது.
நேருவின் இரண்டு தவறுகளான காஷ்மீரில் தவறான நேரத்தில் மேற்கொள்ளப்பட போர் நிறுத்தம் மற்றும் காஷ்மீர் பிரச்சினையை ஐக்கிய நாடுகள் அவைக்கு எடுத்துச் சென்றது ஆகியவற்றால் அந்த பகுதி பெரும் பாதிப்பை சந்தித்தது என்று குற்றம் சாட்டியிருந்தார். இந்த நிலையில், அமித்ஷாவின் குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்துள்ள காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, அவருக்கு வரலாறே தெரியாது எனவும் அதனால் வரலாற்றை மாற்றி எழுதி வருவதாகவும் விமர்சித்துள்ளார்.
செல்வம் எங்கே போகிறது?: ராகுல் காந்தி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் விவரம் வருமாறு:- நேரு இந்தியாவுக்காக உயிரைக் கொடுத்தார், அவர் பல ஆண்டுகளாக சிறையில் இருந்தார். உள்துறை அமித் ஷாவுக்கு வரலாறு தெரியாது. அவருக்கு வரலாறு தெரிய வேண்டும் என்றும் எதிர்பார்க்க கூடாது. ஏனென்றால் அவர் அதை மாற்றி எழுதும் பழக்கம் கொண்டவர்.
இது போன்ற பேச்சுக்கள் எல்லாம், சாதிவாரி கணக்கெடுப்பு என்ற அடிப்படைப் பிரச்சினையிலிருந்து திசைதிருப்பவும், நாட்டின் செல்வம் எங்கே போகிறது? என்பதை மறைக்கவும் செய்யும் செயலாகும். ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். அதை திசை திருப்பவே இப்படி பேசுகிறார்கள். சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரத்தில் அவர்களுக்கு அச்சம் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications