காஷ்மீரில் அப்பாவி மக்களை குறி வைத்து கொடூர தாக்குதல்.. அவசர ஆலோசனையில் அமித் ஷா- அஜித் தோவல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: காஷ்மீரில் அடுத்தடுத்து அப்பாவி மக்கள் கொலை செய்யப்படும் நிலையில், அமைச்சர் அமித் ஷா தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

காஷ்மீரில் தொடர்ந்து பதற்றமான சூழலே நிலவி வருகிறது. ஒருபுறம் பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாதிகள் ஊடுருவ முயல்வது தொடர் கதையாகி வருகிறது.

மறுபுறம் காஷ்மீரில் வேலை செய்யும் அரசு ஊழியர்கள் சுட்டுக் கொல்லப்படும் சம்பவங்களும் நடைபெற்று வருகிறது. அதுபோன்ற ஒரு சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது.

காஷ்மீர்

காஷ்மீர்

காஷ்மீரின் அரேஹ் மோகன்போரா கிளையில் உள்ள எலாக்கி தேஹாட்டி வங்கியின் மேலாளராக இருந்தவர் விஜய் குமார். இவர் இன்று பயங்கரவாதிகளால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். முன்னதாக இரு நாட்களுக்கு முன்னர் தான், குல்காம் மாவட்டத்தின் கோபால்போராவில் உள்ள அரசுப் பள்ளியில் ஆசிரியர் ஒருவர் கொலை செய்யப்பட்டார். அதேபோல கடந்த மே 12இல் புத்காம் மாவட்டத்தின் தாசில்தார் அலுவலகத்தில் ராகுல் பட் என்ற எழுத்தர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

சந்திப்பு

சந்திப்பு

கடந்த மே 1ஆம் தேதி முதல் மட்டும் காஷ்மீரில் 8 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 3 பேர் போலீசார் மற்றும் 5 பேர் பொதுமக்கள் ஆகும். இன்று வங்கி மேலாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் இன்று ஆலோசனையில் ஈடுபட்டார். இது வழக்கமான ஒரு ஆலோசனைக் கூட்டம் என்றே கூறப்படுகிறது. இதில் காஷ்மீர் விவகாரம் குறித்தும் விவாதிக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

 ஆலோசனைக் கூட்டம்

ஆலோசனைக் கூட்டம்

இதற்கிடையில், ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு நிலைமை குறித்து விவாதிக்க நாளை (ஜூன் 3) உயர்மட்டக் கூட்டம் நடைபெறுகிறது. இதற்கு அமித் ஷா தலைமை தாங்குகிறார். காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் படுகொலை சம்பவங்கள் தொடரும் நிலையில், நடைபெறும் இரண்டாவது முக்கிய ஆலோசனை கூட்டம் இதுவாகும். மேலும் அமர்நாத் யாத்திரைக்கு எடுக்கப்படும் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்தும் இதில் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 அறிவுறுத்தல்

அறிவுறுத்தல்

முன்னதாக கடந்த மே 17ஆம் தேதியும் அமர்நாத் யாத்திரையைத் தொடர்பான கூட்டம் நடைபெற்றது. அதில் அமித் ஷா காஷ்மீரில் பொதுமக்கள் கொலை செய்யப்படுவது குறித்து தனது கவலைகளைத் தெரிவித்தார். மேலும், அனைத்து பாதுகாப்புப் படையினரையும் சோதனை பணிகளை தீவிரப்படுத்துமாறும் அவர் கேட்டுக் கொண்டார். மேலும், ஒருங்கிணைந்த பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளைத் தீவிரமாக மேற்கொள்ளுமாறு பாதுகாப்புப் படையினருக்கும் காவல்துறையினருக்கும் அவர் அறிவுறுத்தினார்.

அரசு ஊழியர்கள் போராட்டம்

அரசு ஊழியர்கள் போராட்டம்

இதுபோன்ற சம்பவங்கள் தொடரும் நிலையில், அங்குள்ள அரசு ஊழியர்களுக்குப் போராட்டத்தில் இறங்கி உள்ளனர். காஷ்மீர் முழுவதும் சுமார் 8000 அரசு ஊழியர்கள் வெவ்வேறு ஊர்களில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் அனைவரும் இப்போது தங்களைச் சொந்த மாநிலத்திற்கு பணியிட மாற்றம் செய்யும்படி வலியுறுத்தி உள்ளனர். இது குறித்து காஷ்மீர் அரசு ஊழியர்கள் கூறுகையில், "கடந்த 15 ஆண்டுகளாக நாங்கள் அங்கு பணியாற்றி வருகிறோம். ஆனால், இப்போது அரசு ஊழியர்களைக் குறி வைத்து நடக்கும் கொலைகள் அதிகரித்துள்ளன. எனவே இப்போதைய சூழலில் நாங்கள் பணிக்குத் திரும்பப் போவதில்லை" என்று கூறி உள்ளனர்,

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+