ஜம்மு காஷ்மீருக்கு 370-வது பிரிவு தேவை என்பது அரசியல் சாசனத்தை அவமதிப்பது...அமித்ஷா ஆவேசம்
டெல்லி: ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வகை செய்யும் அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவு தேவை என சொல்வது அரசியல் சாசனத்தையும் அரசியல் நிர்ணய சபையையும் அவமதிப்பது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆவேசமாக தெரிவித்தார்.
ராஜ்யசபாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஜம்மு காஷ்மீர் மறுவரையறை 2019- திருத்த மசோதாவை இன்று தாக்கல் செய்தார். ஜம்மு காஷ்மீரில் சட்டசபை இடங்களை அதிகரிப்பது, எஸ்சி, எஸ்டி பிரதிநிதித்துவம் உள்ளிட்டவை இம்மசோதாவில் இடம் பெற்றிருந்தன. முன்னதாக ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை மத்திய அரசு ரத்து செய்தது செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு தெரிவித்திருந்தது.

இந்த பின்னணியில் ராஜ்யசபாவில் அமித்ஷா இன்று பேசியதாவது: 370-வது பிரிவு நியாயமானது; தேவையானதாக இருந்திருந்தால் நேருஜி ஏன் 'தற்காலிகமான' ஏற்பாடு செய்திருப்பார்? ஜம்மு காஷ்மீருக்கு 370-வது பிரிவு தேவை என சொல்பவர்கள் அரசியல் நிர்ணய சபையையும் அரசியல் சாசனத்தையும் அவமதிப்பவர்கள்.
உச்சநீதிமன்றமானது 370-வது பிரிவு என்பது தற்காலிகமானது என தெளிவாக தீர்ப்பில் தெரிவித்துள்ளது. அதாவது 370-வது பிரிவை நீக்கவே முடியாது என்கிற மனுதாரரின் வாதத்தை உச்சநீதிமன்றம் நிராகரித்திருக்கிறது. 370-வது பிரிவு என்பது தற்காலிகமானது என்கிற பிரதமர் மோடியின் நிலைப்பாட்டை சரி என சொல்லி இருக்கிறது உச்சநீதிமன்றம்.
பாகிஸ்தான் இப்போது ஆக்கிரமித்துள்ள ஜம்மு காஷ்மீர் பகுதிகள் இந்தியாவுக்குச் சொந்தமானவை. இந்தியாவின் நிலப்பகுதிகளை எவர் ஒருவரும் பறித்துவிட முடியாது. ஜம்மு காஷ்மீரில் இடம் பெயர்ந்த மக்களுக்கான நீதியை மோடி அரசாங்கம் பெற்றுத் தரும்.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பானது ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளுக்கு மிகப் பெரும் தோல்வி. 370-வது பிரிவு என்பது பிரிவினைவாதத்தையும் பயங்கரவாதத்தையும்தான் ஊக்குவித்தது. ஜம்மு காஷ்மீருக்கு உரிய நேரத்தில் மாநில அந்தஸ்து வழங்கப்படும் என ஏற்கனவே உறுதி மொழி அளித்திருக்கிறோம். எப்போதுமே காங்கிரஸ் கட்சி நல்ல செயல்பாடுகளை பாராட்டும் பழக்கமே இல்லை. இவ்வாறு அமித்ஷா கூறினார். ராஜ்யசபாவில் 370-வது பிரிவு நீக்கம் தொடர்பாக காரசார விவாதங்கள் இன்று நடைபெற்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications