ஊழலற்ற, வளர்ச்சியை தரும் அரசு.. அனைவரும் வாக்களியுங்கள்.. 5 மொழிகளில் அமித் ஷா அசத்தல் ட்வீட்
டெல்லி: அனைத்து வாக்காளர்களும் அதிக எண்ணிக்கையில் வாக்களித்து, தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும் என உள் துறை அமைச்சர் அமித் ஷா ஐந்து மொழிகளிலும் ட்வீட் செய்துள்ளார்.
தமிழகம், புதுவை, கேரளா ஆகிய மாநிலங்களில் இன்று ஒரே கட்டமாகச் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. அசாம் மாநிலத்தில் இறுதிக்கட்ட வாக்குப்பதிவும், மேற்கு வங்கத்தில் மூன்றாம் கட்ட தேர்தல் இன்றும் நடைபெறுகிறது.
இன்று காலை முதலே பொது மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். கொரோன பாதுகாப்பு நெறிமுறைகள் காரணமாக ஒரு நேரத்தில் ஒருவர் மட்டுமே வாக்குச்சாவடியில் அனுமதிக்கப்படுவதால் வாக்கப்பதிவு சற்று மெதுவாக நடைபெறுகிறது.

அமித் ஷா ட்வீட்
இந்நிலையில், உள் துறை அமைச்சர் அமித் ஷா ஐந்து மொழிகளில் ட்வீட் செய்துள்ளார். அமித் ஷா தனது ட்விட்டரில், "ஒரு வலுவான விருப்பம் கொண்ட மற்றும் ஊழலற்ற அரசாங்கத்தால் மட்டுமே, தமிழகத்தின் முன்னேற்றத்தையும் வளர்ச்சியையும் உறுதி செய்ய முடியும். மாநிலத்தின் அனைத்து வாக்காளர்களும் அதிக எண்ணிக்கையில் வாக்களித்து, தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றுமாறு வேண்டிக்கொள்கிறேன்" என்று தமிழில் ட்வீட் செய்துள்ளார்.

புதுவை தேர்தல்
அதேபோல புதுவை தேர்தல் குறித்து அவர் தனது ட்விட்டரில், "புதுவையில் ஊழலற்ற வளர்ச்சியை அளிக்கும் ஒரு அரசை உருவாக்க மக்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும். ஊழலற்ற மற்றும் வளர்ச்சிக்கான அரசாங்கத்தை அமைக்க அதிகளவில் வந்து வாக்களிக்க, புதுச்சேரியின் அனைத்து வாக்காளர்களையும் வேண்டிக்கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

அமைதி, செழிப்பு, வளர்ச்சி
மேற்கு வங்க தேர்தல் குறித்து அமித் ஷா வங்க மொழியில், "வங்காளத்தில் அமைதி, செழிப்பு மற்றும் வளர்ச்சியை உறுதி செய்ய ஒரு வலுவான மற்றும் தீர்க்கமான தலைமையை தேர்ந்தெடுக்க இன்று நடைபெறும் மூன்றாம் கட்டத்தில் தேர்தலில் வங்காள வாக்காளர்கள் அனைவருக்கும் பெருவாரியாக வாக்களிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றேன். வங்கத்தின் வளர்ச்சியில் பங்கெடுத்துக்கொள்ளுங்கள்" என்று அவர் இந்தியிலும், வங்காள மொழியிலும் ட்வீட் செய்துள்ளார்.

Array
கேரளாவில் நடைபெறும் தேர்தலில் ஊழலற்ற மக்களுக்கு வளர்ச்சியைத் தரும் அரசைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் குறிப்பாக இளம் வாக்காளர்களும் முதல் முறை வாக்காளர்களும் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் என்றும் அவர் மலையாளத்தில் ட்வீட் செய்துள்ளார். அதேபோல, அசாம் தேர்தலிலும் மக்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் என்று அசாம் மொழியில் கேட்டுக்கொண்டுள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications