டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இனிமேல் என்ன செய்வது?.. காஷ்மீர் பிரச்சனையில் இன்று அமித் ஷா முக்கிய முடிவு.. உயர்மட்ட ஆலோசனை!

மத்திய உளவுத்துறை அதிகாரிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று உயர்மட்ட ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்த உள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    காஷ்மீரில் கட்டுக்குள் உள்ளதாக மோடி எண்ணுகிறார்: ட்ரம்ப் அதிரடி

    டெல்லி: மத்திய உளவுத்துறை அதிகாரிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று உயர்மட்ட ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்த உள்ளார்.

    ஜம்மு காஷ்மீருக்கு வழங்கிய சிறப்பு அந்தஸ்தை நீக்குவதாக மத்திய அரசு கடந்த சில நாட்களுக்கு முன் அறிவித்தது. அப்போதில் இருந்தே காஷ்மீரில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

    அது மட்டுமில்லாமல் ஜம்மு காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்து உள்ளது. இதனால் இன்னும் காஷ்மீரில் சரியாக அமைதி திரும்பவில்லை.

    ஜெனிவா மனித உரிமை மாநாட்டில் பேசும் மு.க ஸ்டாலின்.. அழைப்பு விடுத்த ஐநா.. பெரும் எதிர்பார்ப்பு! ஜெனிவா மனித உரிமை மாநாட்டில் பேசும் மு.க ஸ்டாலின்.. அழைப்பு விடுத்த ஐநா.. பெரும் எதிர்பார்ப்பு!

    எதிர்ப்பு

    எதிர்ப்பு

    மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பாகிஸ்தான் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதை எதிர்த்து சீனா தற்போது ஐநா பாதுகாப்பு கவுன்சில் வரை சென்றுள்ளது. ஆனால் இந்த ஐநா பாதுகாப்பு கவுன்சில் விவாதத்தில் எந்த விதமான முக்கியமான விஷயம் குறித்தும் முடிவு எடுக்கப்படவில்லை. அமெரிக்கா காஷ்மீர் விஷயத்தில் இந்தியாவின் பக்கம் நிற்கிறது.

    தொடர் சர்ச்சை

    தொடர் சர்ச்சை

    என்னதான் காஷ்மீரில் ராணுவம் குவிக்கப்பட்டு இருந்தாலும், அங்கு இயல்பு நிலை திரும்பவில்லை. மக்கள் இன்னும் ராணுவத்திற்கு எதிரான மனநிலையுடன்தான் இருக்கிறார்கள். அங்கு எப்போது வேண்டுமானாலும் கலவரம் ஏற்படலாம் என்ற நிலைதான் நிலவி வருகிறது.

    எதிர்க்கட்சி குழு

    எதிர்க்கட்சி குழு

    காஷ்மீரில் நடக்கும் விஷயங்கள் எதுவும் வெளியே தெரிய கூடாது என்று மத்திய அரசு நினைக்கிறது. இதனால்தான் அங்கு சென்ற எதிர்கட்சித் தலைவர்களின் குழு கூட திருப்பி அனுப்பப்பட்டது. இந்த நிலையில்தான் மத்திய உளவுத்துறை அதிகாரிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று உயர்மட்ட ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்த உள்ளார்.

    என்ன முடிவு

    என்ன முடிவு

    உள்துறை அதிகாரிகள், உளவுத்துறை அதிகாரிகள், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் மற்ற அதிகாரிகளுடன் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை நடத்த உள்ளார். காஷ்மீரில் அடுத்து செய்ய வேண்டிய பணிகள் குறித்து இன்று முடிவு செய்ய உள்ளனர். காஷ்மீரில் பாதுகாப்பை குறைப்பது தொடர்பாக இன்று ஆலோசிக்க உள்ளனர்.

    English summary
    Home Minister Amit Shah, will hold a meeting with NSA Ajit Doval and officials on Kashmir Issue.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X